» »உண்டவல்லி குகைகளின் மாபெரும் அதிசய கட்டமைப்பைக் காணுங்கள்

உண்டவல்லி குகைகளின் மாபெரும் அதிசய கட்டமைப்பைக் காணுங்கள்

Written By: Udhaya

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உண்டவல்லி குகைகள் காண்போர் அதிசயிக்கும் வண்ணம் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். இது பார்ப்பதற்கு குகை போல இருந்தாலும், குடைவரைக் கோட்டைகளாக கட்டப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக காட்சிதருகிறது.

பாறைகளை எப்படி செதுக்கியிருப்பார்கள் என்றே யூகிக்கமுடியாத அளவுக்கு சிறப்பாக செதுக்கி வைத்திருக்கிறார்கள் இதை கட்டியவர்கள். அப்பேர்பட்ட உண்டவல்லி குகைக்கு ஒரு டூர் போயிட்டு வரலாமா?

 எங்குள்ளது

எங்குள்ளது


விஜயவாடா நகரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை 4ம் அல்லது 5ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை மிகப் பழமையானதுடன், வரலாற்று ரீதியாகவும் சிறப்பானதாகும்.

B B Susheel Kumar

அமைப்பு

அமைப்பு


நான்கு அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குடைவறை கோயில் தொகுப்புகளில் பிரதானமாக மஹா விஷ்ணுவின் சிலை காணப்படுகிறது. இந்த சிலை ஒற்றை பளிங்கு கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Krishna Chaitanya Velaga

குடைவரைக் கோயில்கள்

குடைவரைக் கோயில்கள்

இந்த தொகுதியிலுள்ள ஏனைய குடைவரைகளில் இதர கடவுள்களின் சிலைகளும் காணப்படுகின்றன. புத்த மடாலயங்கள் போன்றும் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த குடைவரைகளை பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த பாறைக்குடைவறைகள் கிருஷ்ணா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ளன.

Ramireddy.y

முதல் தளம்

முதல் தளம்

அடித்தளத்தை விட மிகப்பெரியதாக கட்டப்பட்டது முதல் தளமாகும். இங்கு காணப்படும் சிற்பங்கள் யாவும், திருமாலைப் பற்றியதாகும். இங்கு அமைக்கப்பட்டுள்ள தூண்கள் நான்கு வரிசையாக அமைந்து மேற்கூரையைத் தாங்கி நிற்கின்றன.

இவை பல்லவ அரசன் மகேந்திரவர்மன் காலத்தியவை ஆக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Krishna Chaitanya Velaga

இரண்டாம் தளம்

இரண்டாம் தளம்

இந்த குடைவரையின் இரண்டாம் தளம் 9மீ அகலமும், ஏறக்குறைய 17மீ நீளமும் கொண்டதாகும்.

இதன் தெற்கு புறத்தில் 4மீ சதுரமான சிறிய அறையும், வடக்கு புறத்தில் ஒரு நீள் சதுர கருவறையும் கொண்டுள்ளது.

இங்குதான் திருமால் படுத்திருக்கும்படி ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Krishna Chaitanya Velaga

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இந்த பகுதிக்கு அருகே விஜயவாடா அமைந்துள்ளது. இங்கு விஜயேஸ்வரா கோயில், மொகலாராஜபுரம், சிபார் டிஸ்னி லேண்ட், காந்தி ஸ்தூபம், மகாலட்சுமி அம்மாவாரி கோயில், அக்கண்ணா, மடண்ணா குகைகள், பவானி தீவு, விக்டோரியா ஜூபிளி அருங்காட்சியகம் என நிறைய இடங்கள் அமைந்துள்ளன.

Krishna Chaitanya Velaga

Read more about: travel, cave, forest