» »பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

Posted By: Udhaya

கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது.

கக்கதியர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்ட இக்கோட்டை அந்த காலத்தில் நாட்டிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த கோட்டையாக கருதப்பட்டதாகும். பின்னாளில் இது அவ்ரங்கபாத் மன்னர்களின் கைக்குள் சென்றது. ஆனால் தற்போது இது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்த கோட்டையின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தெலுங்கானா அரசு இதனை சுற்றுலாத்தளமாக உருவாக்கியுள்ளது.

800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோட்டை ஏன் இப்படி ஆகிவிட்டது என்று தெரியுமா அந்த சோகக்கதையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது தவறாமல் காணுங்கள்!

கொல்ல கொண்டா

கொல்ல கொண்டா


கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.

Pc: Sanyam Bahga

சிறப்பு

சிறப்பு

இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம்.

PC: Sajjusajuu

ராஜவம்சம்

ராஜவம்சம்

கோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் பெரும்பான்மையான அமைப்புகளை நிர்மாணித்த பெருமைக்குரியவராக இப்ராஹீம் குலி குதுப் ஷா வாலி எனும் மன்னர் குறிப்பிடப்படுகின்றார்.

PC: Bernard Gagnon

முகலாயர்களின் தாக்குதல்

முகலாயர்களின் தாக்குதல்

வடக்கிலிருந்து முகலாயர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டைப்பகுதி எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது.

Bernard Gagnon

ஒலியியல் அம்சம்

ஒலியியல் அம்சம்

கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது.
Bernard Gagnon

ரகசிய சுரங்கப்பாதை

சார்மினார் விதான வாயிலையும் இந்த கோட்டையையும் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.

McKay Savage

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

Read more about: travel