» »காஞ்சி கோயிலில் ஒரு வரலாற்று சுற்றுலா போலாமா?

காஞ்சி கோயிலில் ஒரு வரலாற்று சுற்றுலா போலாமா?

Posted By: Udhaya

கோயில்களால் நிறைந்தது இந்தியா என்றால் அது மிகையாகாது. இந்தியாவின் அதிகபட்சமக்கள் பின்பற்றும் மதம், அதன் தெய்வங்கள் இருக்கும் இடம் கோயில்.

தெய்வங்களை கற்பனை உருவமாக்கி, அதனை நம்பிக்கையுடன் ஏற்று பூசைகள் செய்து வணங்கி, தன் குறையை கூறி மன நிறைவு பெறுகின்றனர் பக்தர்கள். அப்படிபட்ட கோயிலின் சிலைகளையும் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறைதான் காண இயலும்,

இந்த கோயிலின் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காண முடியுமாம் தெரியுமா?

எங்குள்ளது

எங்குள்ளது


சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது இந்த வரதராஜபெருமாள் கோயில். இதை கட்டியவர்கள் யார் என்பது இன்றளவும் மர்மமாக உள்ளது.

Aravindsidhsrthan

 வைணவ திவ்ய தேசங்கள்

வைணவ திவ்ய தேசங்கள்

இக்கோயில் வைணவ திவ்ய தேசங்களுள் 31 வது தலமாக அறியப்படுகிறது.

ravindraboopathi

 விரிவுபடுத்திய சோழர்கள்

விரிவுபடுத்திய சோழர்கள்

கிபி 1053ல் சோழர்கள் வேல மலையில் குடைவரைக் கோயில் கிழக்கு மேற்காக விரிவாக்கம் செய்தனர் என்பது கல்வெட்டுக்கள் மூலமாக அறியப்படுகிறது.

Fahad Faisal

 முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்க சோழனும் விக்ரமசோழனும் இந்த கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். 14ம் நூற்றாண்டில் அம்மன் சன்னதியும், அபிசேக மண்டபமும் அமைக்கப்பட்டது.

Benjamín Preciado

 வரலாற்று சிறப்பு மிக்க கோயில்

வரலாற்று சிறப்பு மிக்க கோயில்


வரலாற்று சிறப்புமிக்க தமிழர்கள் கட்டிய இந்த கோயிலைப் பற்றியும் அதன் சிலை ரகசியங்கள் பற்றியும் இந்த பதிவில் தெளிவாகக் காணலாம்.

Ssriram mt

 விஜயநகர அரசு

விஜயநகர அரசு

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் திருமண மண்டபங்களை நிறுவினர்.

Ssriram mt

 திருமண மண்டபம்

திருமண மண்டபம்

8 வரிசைகளில் வரிசைக்கு 12 தூண்களாக 96 சிற்பக் கலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.

Ssriram mt

தூண்களின் சிறப்பு

தூண்களின் சிறப்பு


தூண்களில் யாழி, போர்க்குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

tshrinivasan

 நூறுகால் மண்டபம்

நூறுகால் மண்டபம்

இங்கு உள்ள சிறிய நான்கு தூண் மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

Ravindraboopathi

 கல்லால் ஆன சங்கிலி

கல்லால் ஆன சங்கிலி

இதன் நான்கு மூலைகளிலும் தொங்கும் சங்கிலிகள் கற்களால் கட்டப்பட்டவை என்பது எவ்வளவு விந்தையை தரும் பாருங்கள்.

tshrinivasan

 அத்தி வரதர்

அத்தி வரதர்

அத்தி வரதர் என்று பெயர் கொண்டுள்ள பெருமாளுக்கு மரத்தால் செய்யப்பட்ட சிலை குளத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.

Sivakumar1248

 40 ஆண்டுகள்

40 ஆண்டுகள்

இந்த கோயிலின் மூலவரை நீங்கள் காணவேண்டுமென்றால் 40 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். ஆம் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நீங்கள் வரதராஜ பெருமானை காணமுடியும்.

ShamaliKolhe

 தமிழகத்திலேயே மிகச் சிறப்பு

தமிழகத்திலேயே மிகச் சிறப்பு

இந்த கோயிலில் நடைபெறும் ஆழ்வார் திருமேனி காட்சி தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நடக்கிறது.

Leemani

 வைகாசி உற்சவம்

வைகாசி உற்சவம்

வைகாசி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழாவில் கருட சேவையும், தேரோட்டமும் மிகப் பிரபலம்.

கி. கார்த்திகேயன்

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ளது இந்த கோயில்.

Ssriram mt

https://commons.wikimedia.org/wiki/Category:Varadharaja_Perumal_Temple#/media/File:Varadaraja_Perumal_Temple_Kanchipuram_(33).jpg

Read more about: travel temple