» »பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

Posted By: Udhaya

ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற வரலாற்றுப் பெருமை மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் கலாச்சார தலங்களை கொண்டுள்ளன. பகவத் கீதையின் முதல் செய்யுளில் 'தரம்ஷேத்ரா' என்ற பெயரில் பானிபட் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மட்டுமல்லாமல், 'நெசவாளர்களின் நகரம்' என்றும் பானிபட் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பொருட்கள் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அயல் நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

panipat.gov.in

பானிபட் நகரத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பானிபட் நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நினைவுச்சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உளள்ன. பானிபட் மியூசியத்தில் நவீன கால கைவினைப் பொருட்கள் மட்டுமல்லாமல், அதன் வரலாற்றை வெளிப்படுத்தும் ஆர்வமூட்டக் கூடிய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் 'பழைய கோட்டை' என்ற அழிந்த நிலையில் இருக்கும் பழமையான கோட்டைக்கும் நீங்கள் சென்று வரலாம்.

இந்தியாவின் பிற நகரங்களைப் போலவே பானிபட்டிலும் பல்வேறு மதம் தொடர்பான தலங்கள் உள்ளன. முகலாய வம்சத்தை நிறுவியவரான பாபரால் கட்டப்பட்ட காபுலி ஷா மசூதி என்ற பழமையான மசூதி பானிபட்டில் உள்ளது. தேவி கோவில் என்ற பெயரில் இருக்கும் இந்து மத கோவிலும் கட்டிடக்கலையின் சிறப்புகளை பெற்றுள்ள இடமாக உள்ளது.

பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

panipat.gov.in

முகலாயப் படையை எதிர்த்து இரண்டாவது பானிபட் யுத்தத்தில் தீரமுடன் போர் புரிந்த ஹெமு-வின் சமாதி ஸ்தால் அல்லது நினைவிடமும் இங்கே உள்ளது. அக்பருடைய முகாமில் அவருடைய தலை வெட்டப்பட்டது. அதன் பின்னர், அவருடைய நினைவிடம் அவருடைய ஆதரவாளர்களால் இந்த இடத்தில் கட்டப்பட்டது.

பாபருடன் 'முதல் பானிபட் யுத்தத்தில்' போரிட்ட இப்ராஹிம் லோடியின் கல்லறையும் பானிபட் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் உள்ளது. இப்ராஹிம் லோடி இந்த இடத்தில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். நீங்கள் பானிபட்டில் இருக்கும் வேளையில், பு-அலி ஷா கலந்தரின் சமாதிக்கும் செல்லலாம்.

பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

panipat.gov.in

இப்ராஹிம் லோடியை போரில் வெற்றி கொண்டதன் நினைவாக பாபர் உருவாக்கிய குளம் மற்றும் ஒரு மசூதியை கொண்டுள்ள காபுலி பூங்கா தோட்டத்திற்கும் நீங்கள் செல்லலாம். சில ஆண்டுகளுக்குப் பின்னர், 'சபுட்ரா' என்றழைக்கப்படும் மேடையை ஹுமாயூன் இங்கே கட்டினார்.

மேலும், பு-அலி ஷா கலந்தரில் உள்ள சலார் குஞ்ச் கேட் கல்லறை மற்றும் கலா ஆம்ப் ஆகிய இடத்திற்கும் நீங்கள் சென்று வரலாம்.

பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

Ramesh lalwani

பானிபட்டின் பருவநிலை

பானிபட் நகரத்தில் மிதவெப்ப நிலை பிரதேச பருவநிலை நிலவுவதால் கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகிய பருவங்கள் நிலவி வருகின்றன.

இங்கே கோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும், குளிர்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும். வரவேற்பு தரும் வகையிலும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் குளிர்காலத்தில் இங்கே சுற்றுலா வருவது சிறந்தது.

பானிபட் போருக்கு மட்டுமல்ல டூருக்கும் பேமஸ்தான் தெரியும்ல

Ramesh lalwani

பானிபட் நகரத்தை அடையும் வழிகள்

இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பானிபட் மிகவும் நன்றாக விமானம், இரயில் மற்றும் சாலை போக்குவரத்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

Read more about: travel tour

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்