» »அஜ்மீரில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய அந்த பத்து இடங்கள்!

அஜ்மீரில் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய அந்த பத்து இடங்கள்!

Written By: Udhaya

ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நகரம் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த தாராகர் கோட்டை அஜ்மீர் நகருக்கு அரணாக அமைந்துள்ளது.

அஜ்மீர் நகரம் புனித யாத்ரீகத்தலமான புஷ்கர் ஸ்தலத்துக்கான நுழைவாயிலாகவும் திகழ்கிறது.

இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் புஷ்கர் ஸ்தலம் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி மற்றும் ஒரு பிரம்மா கோயிலுக்கு புகழ் பெற்று விளங்கும் புஷ்கர் ஸ்தலத்துக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.

 ஷெரீப் அஜ்மீர் தர்கா

ஷெரீப் அஜ்மீர் தர்கா

அஜ்மீர் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த தர்கா அஜ்மீர் தர்கா என்றே அழைக்கப்படுகிறது.

அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தரகார்க் மலைக்குன்று உள்ளது.

Mujeerkhan

 நாசியன் ஜெய்ன் கோயில்

நாசியன் ஜெய்ன் கோயில்


அஜ்மீர் ஜெய்ன் கோயில் அல்லது சோனிஜி கி நாசியன் கோயில் இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.

இந்த கோயில் தங்ககோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 1000 கிலோ தங்கம் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இது அஜ்மீர் ரயில்நிலையத்திலிருந்து 15 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது.


Ramesh Lalwani

 அனா சாகர் ஏரி

அனா சாகர் ஏரி

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களுள் ஒன்றான அனா சாகர் ஏரி, பிரித்விராஜ் சவுகானின் தாத்தா அர்னோராஜா அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடத் தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவல்லது.

Fatehrawkey

 சித்தர்கார்க் கோட்டை

சித்தர்கார்க் கோட்டை

சித்தூர் கோட்டை இந்தியாவின் பெருங்கோட்டைகளில் ஒன்றாகும். மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றா விளங்குகிறது. முன்னர், மேவார் நாட்டின் தலைநகராகவும் சித்தூர் கோட்டை விளங்கியது. சித்தூர் கோட்டை மேவார் பகுதியின் சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிடமான சித்தோர்கார் நகரத்தில் அமைந்துள்ளது.

தில்லி - மும்பை நெடுஞ்சாலையில், அஜ்மீர் நகரத்திலிருந்து 233 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்கள் 76 மற்றும் 79 சித்தூர் கோட்டை வழியாக செல்கிறது.

Ssjoshi111

 நரேலி ஜெய்ன் கோயில்

நரேலி ஜெய்ன் கோயில்

அஜ்மீரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நரேலி ஜெய்ன் கோயில்.

டெல்லி - அஜ்மீர் - மும்பை வழியாக செல்லும் ரயில்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் அருகருகே இருக்கின்றன.

Gourav mainali

 ஆதை தின் கா ஜான்ப்ரா மசூதி

ஆதை தின் கா ஜான்ப்ரா மசூதி

இந்திய - இஸ்லாமிய கட்டுமானத்தின் படி கட்டப்பட்ட இந்த மசூதி கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஹெராத்திலிருந்து அபு பக்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த மசூதி மிகவும் அழகானதாகவும். சுற்றுலாப்பிரியர்களை மீண்டும் மீண்டும் வரச்செய்யும் இடமாகும்.

Varun Shiv Kapur

 சாவித்ரி கோயில்

சாவித்ரி கோயில்

சாவித்ரி கோயில் புஷ்கர் இது பிரம்மனின் மனைவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் 1687 கட்டப்பட்டுள்ளது. ரத்னகிரி மலையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இது பிரம்மா கோயிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

கரேகரி சாலையில் அமைந்துள்ள புஷ்கர் சிட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

 அக்பர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம்

அக்பர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகம் அஜ்மீரில் அமைந்துள்ளது. அக்பரின் மகன் சலீம் முகலாய மற்றும் ராஜ்புட் வம்சத்தின் நினைவுச் சின்னங்களையும், பொக்கிஷங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

AdityaVijayavargia

 தௌலத் பாக் பூங்கா

தௌலத் பாக் பூங்கா

இந்த பூங்கா அஜ்மீரின் பழமையான ஏரியான அனா சாகர் ஏரிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்ப்பதில் மிகப் பெரிய பங்காற்றுகிறது.

இங்கு படகுசவாரி, செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த பூங்காவும், ஏரியும் அருகருகே அமைந்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சுலபத்தை தருகிறது.

Brian Gratwicke

 பிர்லா சிட்டி நீர்விளையாட்டு பூங்கா

பிர்லா சிட்டி நீர்விளையாட்டு பூங்கா

அஜ்மீருக்கு சுற்றுலா செல்வோருக்கென சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள நீர் விளையாட்டுப் பூங்கா இதுவாகும்.

 பிரித்விராஜ் நினைவு சின்னம்

பிரித்விராஜ் நினைவு சின்னம்

இங்கு சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான பல இடங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஏரிகளும், கோட்டைகளும் உள்ளன. மேலும் பிரித்விராஜ் சவுகானின் நினைவுச் சின்னம் ஒன்றும் உள்ளது. அவரது சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.

youtube

 அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

அஜ்மீர் அருங்காட்சியகம் தவிர்த்து இங்கு மேலும் ஒரு அருங்காட்சியகம் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இது பல பழம்பெரும் பொருள்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

youtube

Read more about: travel, temple