Search
  • Follow NativePlanet
Share
» »அரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க!

அரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க!

அரிடாரில் சாகசங்கள் செய்யலாம் வாங்க!

By Udhaya

இயற்கை அழகு, மற்றும் தொன்மையான வரலாற்றுக்கு பெயர் பெற்ற அரிடார்', கிழக்கு சிக்கிமின் ஒரு பகுதியாக உள்ளது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த இடம், அமைதியான, மற்றும் அழகான இயற்கை காட்சிகளை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அமைதியான ஏரிகள், பசுமையான காடுகள், மற்றும் செழித்த நெல் வயல்கள் தரும் மனதிற்கு இனிய காட்சியானது, நீங்கள் சொர்கத்தில் உள்ளீர்கள், என்று உணரச் செய்யும்.

 கண்ணுக்கினிய காட்சி

கண்ணுக்கினிய காட்சி

இந்த இடத்தின் கண்ணுக்கினிய காலைக்காட்சியானது, உங்கள் மனதை விட்டு என்றும் அகலாது. நில அமைப்பு அரிடார், சிக்கிமின் பிற பகுதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது `கன்செஞ்ஜங்கா' சிகரத்துடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

Sikkimonline

 வரலாற்றின் பார்வையில்...

வரலாற்றின் பார்வையில்...


அரிடாரின் முக்கியத்துவம், 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய திபெத் வர்த்தக மாநாட்டின் பின்னர் மிகவும் உயர்ந்தது. இதன் பின்னர், புத்தம் புதிய சாலைகள் ஆங்கிலேயர்களால், போடப்பட்டன. காலிம்பொங்கில் இருந்து, டார்ஜிலிங்கில் அமைந்துள்ள பெடொங்க் வரை செல்லும் வர்த்தக பாதை நாதுல்ல கணவாய், ரினோக், அரிடார், மற்றும் ஜாலுக் ஊடாக சென்றது. இதனால், அரிடார் அந்த காலத்தில் வணிகரீதியாக `காங்டாக்' என அறியப்பட்டது.Sikkimonline

 கலாச்சாரம் மற்றும் அரிடாரின் பாரம்பரியம்

கலாச்சாரம் மற்றும் அரிடாரின் பாரம்பரியம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில், `லம்போஹரி' என்கிற சுற்றுலா விழா அரிடாரில் நடைபெறுகிறது. இவ்விழா சகாசம் விரும்பும் பயணிகளை அரிடாரை நோக்கி ஈர்கிறது. ஏனெனில், இவ்விழா முற்றிலும் சாகச விளையாட்டுக்களால் நிரம்பியது. இங்கு நடைபெறும் படகு சவாரி, ஏரியை சுற்றி குதிரை சவாரி, பாரம்பரிய வில்வித்தை போட்டி, ட்ரெக்கிங் ஆகியன சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்கிறது. இதைத் தவிர, சாகசப் பிரியர்களுக்கு மிகப் பிடித்தமான மலையேற்றம், பாராகிளைடிங் போன்ற விளையாட்டுக்களும் உள்ளன.

Sikkimonline

 உணவு வகைகள்

உணவு வகைகள்

இவ்விடத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ருசிமிக்க உணவு வகைகள் உலகம் முழுவதிலுமுள்ள சுற்றுலா பயணிகளை அரிடாரை நோக்கி ஈர்கின்றன. உள்ளூர்திருவிழாவின் போது, பார்வையாளர்களுக்கு அரிடாரின் பாரம்பரியமிக்க உணவு வகைகளுடன், நெருப்பில் சுட்ட உலர்ந்த இறைச்சி மற்றும் உள்ளூர் பீர் ஆகியன வழங்கப்படுகின்றன. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் லம்பொக்ஹரி ஏரி, அரிடார் கும்பா, மாங்க்ஹிம், மற்றும் லவ் தாரா ஆகியன, அரிடாரின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.

 ட்ரெக்கிங்

ட்ரெக்கிங்

இயற்கை மற்றும் சாகச பிரியர்களுக்கு அரிடார், ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். நீங்கள் இங்கு ட்ரெக்கிங் அல்லது ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம். நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலரெனில், இங்குள்ள காடுகளில் காலார உலவி, உயரமான மரங்கள், காட்டு மல்லிகை, மற்றும் மிகப்பெரிய மலைகளின் மனதை மயக்கும் காட்சிகளில் உங்கள் நேரத்தை செலவிடலாம்.

Read more about: travel trekking
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X