» »வருடம் முழுவதும் வற்றாமல் இருக்கும் 200க்கும் அதிகமான நீரூற்றுகள் எங்கே தெரியுமா?

வருடம் முழுவதும் வற்றாமல் இருக்கும் 200க்கும் அதிகமான நீரூற்றுகள் எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

கோயில்களை கட்ட ஆரம்பிப்பதற்கு முற்காலத்திய முன்னோர்கள், மலைகளை குடைந்து கோயில் அமைப்பை உருவாக்கினர் என்பது நாம் அறிந்த செய்திதான். இந்தியாவில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை பெரும்பான்மை இளைஞர்களை ஈர்த்து தன்னைக் காண வரச் செய்கின்றன. கோவையின் வெள்ளையங்கிரி மலையைப் போல அரிட்டாப்பட்டியில் அமைந்துள்ள இந்த கோயில் மிகச்சிறப்பு மிக்கதாகும். வாருங்கள் ஒரு டிரிப் போயிட்டு வரலாம்.

 உலகின் முதல் குடைவரைக் கோயில்

உலகின் முதல் குடைவரைக் கோயில்

உலக அளவில் குடைவரைக் கோயில்கள் கட்டும் பழக்கம் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் தான் இதை ஆரம்பித்தனர் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் சிறிய அளவில் காணப்படுகின்றன.

ஓவா மலை

ஓவா மலை

உள்ளூர் மக்களால் ஓவா மலை என்றழைக்கப்படும் அரிட்டாபட்டி மலையில் அமைந்துள்ளது லகுலீசர் கோயில். இது ஒரு சிவன் தலமாகும்.

சிறப்பு

சிறப்பு

உலகிலேயே குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட முதல் சிவன் தலம் இதுவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இது மிகவும் சிறிய அளவிலான கோயில் ஆகும். ஆனால் இதன் சக்தி அப்படி அல்ல.. அதுதான் வட இந்தியர்களைக் கூட பொறாமை கொள்ளச்செய்யும் என்கிறார்கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி வரும் பக்தர்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது

மதுரை அருகே அமைந்துள்ளது அரிட்டாபட்டி. இங்குள்ள மலையில்தான் லகுலீசர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

தென்னகத்தின் ஏழுமலை

தென்னகத்தின் ஏழுமலை


அரிட்டாபட்டி ஒரு கிராமமாக இருந்தாலும், இங்கு ஏழு மலைகள் அருகருகே அமைந்துள்ளன.

மலைகள்

மலைகள்

கழிஞ்சாமலை, நாட்டார் மலை, வயிற்றுப்பிள்ளான் மலை, ராமன் ஆய்வு மலை, அகப்பட்டான் மலை, கழுகுமலை, தேன்கூட்டு மலை என ஏழு மலைகள் இந்த ஊரில் காணப்படுகிறது.

 பழமை

பழமை


இந்த கோயில் கட்டப்பட்டது கிபி எட்டாம் நூற்றாண்டு எனத் தெரிகிறது. பாண்டியமன்னர்களின் மிக முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மூலவர்

மூலவர்


இந்த குடைவரைக் கோயிலின் மூலவர் சிவபெருமான் லிங்கமாக வீற்றிருக்கிறார். கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன.

உலகிலேயே இது ஒன்றுதான்

உலகிலேயே இது ஒன்றுதான்

வேறெங்கும் காண இயலாத லகுலீசுவரரின் புடைப்பு சிற்பம் இந்த மலையில் மட்டுமே காணப்படுகிறது. லகுலீசர் என்பது சிவபெருமானின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறது.

லகுலீசர் அமைப்பு

லகுலீசர் அமைப்பு

சுகானத்தில் தொடை மீது ஒரு கை வைத்து காட்சிதருகிறார் லகுலீசர். சைவத்தில் லகுலீசர் சைவம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் சிவபெருமானை லகுலீசராகத்தான் வழிபடுகின்றனர்.

விநாயகர்

விநாயகர்

இதன் தெற்கு பகுதியில் விநாயகர் சிற்பம் ஒன்று புடைப்பு சிற்பமாக இருக்கிறது. மேற்கு திசையை நோக்கிய இந்த குடைவரையைச் சுற்றியுள்ள மலைகளும், பாறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வைத்தது போல இருக்கும் அமைப்பும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.

 சுற்றுலா செல்வோம்

சுற்றுலா செல்வோம்

இந்த பகுதிக்கு வருவதற்கு தமிழ் நேட்டிவ் பிளானட் வழிகாட்டியாக வருகிறது. முதலில் நீங்கள் செய்யவேண்டியது மதுரைக்கு அருகிலுள்ள மேலூருக்கு வரவேண்டும். அங்கிருந்து பத்து, பதினைந்து நிமிடங்களில் கோயிலை அடைந்துவிடலாம்.

மேலூருக்கு எப்படி செல்வது?

மேலூருக்கு எப்படி செல்வது?


சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் திருச்சி வழியாகவும், பொள்ளாச்சி, கோவை, நாமக்கல்,கரூர், ஈரோடு, ஊட்டியிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல் வழியாகவும் மேலூரை அடையலாம்.

வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு வழி

வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு வழி

பெங்களூருவிலிருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், முசிறி வழியாக திருச்சியை அடையலாம். இந்த வழியில் ஏற்காடு, கல்ராயன் மலை, காவிரி ஆறு உள்ளிட்ட இடங்கள் வரும்.

சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 மணி நேரத்தில் வந்தடையலாம்.

திருச்சியிலிருந்து மேலூருக்கு விராலிமலை, கொட்டாம்பட்டி வழியாக 1.30மணி நேரத்தில் வந்தடையலாம்.

 மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு

மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருபவர்கள் திண்டுக்கல் வழியாக மேலூரை அடையலாம். கோவையிலிருந்து மேலூர் 5 மணி நேரம் ஆகிறது. மொத்தம் 229கிமீ தூரம் பயணிக்க வேண்டிவரும்.

தெற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள்

தெற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள்

கன்னியாகுமரியிலிருந்து 4 மணி நேர பயணத்தில் மதுரையை அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக கன்னியாகுமரியிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் மதுரையை அடையமுடியும். நாகர்கோயிலிலிருந்து காவல்கிணறு வந்து இந்த நெடுஞ்சாலையை அடையவேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து தே நெ எ 87 வழியாகவும், தூத்துக்குடியிலிருந்து தே நெ எ 38 வழியாகவும் எளிதில் மதுரையை அடையலாம். அங்கிருந்து 40 நிமிட பயணத்தில் மேலூரை அடையலாம். இப்படி தமிழகம் முழுவதிலிருந்தும் மேலூருக்கு வந்தடைய இந்த வழி போதுமானதாக இருக்கும்.

மேலூர் - அரிட்டாபட்டி

மேலூர் - அரிட்டாபட்டி


அரிட்டாபட்டி செல்வதற்கு மேலூர் - கொங்காம்பட்டி - சிங்கம்புரி சாலையில் நம் பயணத்தைத் தொடங்கவேண்டும். மேலூர் - அழகர்கோயில் சாலையில் பயணத்தை தொடர்ந்து செல்க.. மாநில சாலையான இது 72A என்று குறிக்கப்படுகிறது. புறப்பட்ட சில நிமிடங்களில் அங்கு பெட்ரோல் பங்க் இருக்கிறது. தேவையென்றால் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

அரிட்டாபட்டி

அரிட்டாபட்டி


பயணம் தொடரும்போது இடதுபுறமாக சாலைகள் பிரியும். முதல் இரு சாலைகளையும் தாண்டி, மூன்றாவதாக பிரியும் சாலையில் இடப்புறமாக செல்லவேண்டும். இந்த வழியில் சின்னையன் கோயில், சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்த சாலைகள் என இரண்டு கிமீக்குள் அரிட்டாபட்டியை அடைந்துவிடலாம்.

மந்தை கருப்பசாமிகோயில் அருகே பேருந்து நிலையம் உள்ளது. பின் அங்கிருந்து வலப்புறமாக திரும்பி சிறிது தூரம் சென்று இடப்புறம் திரும்பினால் அங்கு சாலை முடிகிறது. பின் மலையில் ஏறவேண்டும்.

 நீரூற்றுகள்

நீரூற்றுகள்

இங்கு 200க்கும் மேற்பட்ட நீரூற்றுகள் உள்ளன. இதில் முருகன் நீரூற்று வருடம்முழுவதும் வற்றாமல் இருக்கிறது. கோயிலுக்கு சென்று வழிபடுவதுடன், இந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து பரவசமடையுங்கள். மேலும் இன்னொரு இடத்தோட தேடிப்போலாமா வில் சந்திக்கிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழுடன்.

Read more about: travel temple madurai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்