» »அருணாச்சல பிரதேச காட்டுக்குள்ள ஒரு சூப்பர் டூர் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 6

அருணாச்சல பிரதேச காட்டுக்குள்ள ஒரு சூப்பர் டூர் போகலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 6

Written By: Udhaya

வண்ணமயமாக மலர்ந்து ஜொலிக்கும் ஆர்க்கிட் மலர்கள், சூரிய ஒளியில் ஒளிரும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், ஸ்படிகம் போன்ற நீருடன் ஓடிவரும் சிற்றோடைகள், புத்த துறவிகளின் மந்திர ஒலிப்புகள் மற்றும் அன்போடு உபசரிக்கும் பூர்வ குடிமக்கள் போன்ற தனித்தன்மையான அம்சங்களோடு உங்களை அருணாசலபிரதேச மாநிலம் வரவேற்கிறது. வித்தியாசமான தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் இயற்கை சூழலை கொண்டுள்ள இம்மாநிலம் வேறெந்த பகுதியிலும் பெற முடியாத அனுபவங்களை ஒரு பயணிக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

மாநிலம் முழுக்க பசுமையாக போர்த்தப்பட்டிருப்பதால், சுற்றுலாவுக்கும் அருணாச்சலப்பிரதேசத்துக்கும் அவ்வளவு நெருக்கம். இங்குள்ள சுற்றுலாப் பிரதேசங்களிலேயே மிக முக்கியமான காட்டுயிர் சுற்றுலாவை வாழ்வில் ஒருமுறையாவது நீங்கள் அனுபவித்தாகவேண்டும். என்ன தயாரா?

இட்டா நகர்

இட்டா நகர்


வடகிழக்கு இந்தியாவின் உச்சியில் அமைந்திருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இட்டாநகர் அமைந்திருக்கிறது. இட்டாநகர் தொல்லியல் ஸ்தலங்கள் அதிகம் காணப்படும் பிரதேசமாக பிரசித்தி பெற்றுள்ளது. இவை இந்நகரத்தின் வரலாற்றுப்பின்னணி மற்றும் கலாச்சார செழிப்பு போன்ற சிறப்பம்சங்களுக்கு மேலும் வலிமையூட்டுவதாக அமைந்துள்ளன. இங்குள்ள இட்டா கோட்டை இந்த நகரத்தின் அடையாளமாக அமைந்திருப்பதோடு ஈடாநகருக்கான பெயர்க்காரணமாகவும் அறியப்படுகிறது.

pankhirajcomputer

 அருகிலுள்ள சுற்றுலாத்தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத்தளங்கள்

பொம்டிலா, பரஷுராம் குண்ட், மலினித்தான் மற்றும் பீஷ்மாக் நகர் போன்றவை இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக இட்டாநகரில் அமைந்துள்ளன. அதிகாரபூர்வ கவர்னர் மாளிகையான ராஜ்பவன் வளாகமும் சுற்றுலாப்பயணிகளை கவரும் மற்றொரு அம்சமாகும். கங்கா ஏரி, ஜவஹர்லால் மியூசியம் மற்றும் கிராஃப்ட் சென்டர் அன்ட் எம்போரியம் போன்றவையும் இட்டாநகரில் தவறவிடக்கூடாத இடங்களாகும். இந்த மியூசியத்தில் அருணாசலப்பிரதேச பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய பல அரும்பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

Unknown

காணவேண்டியவை

காணவேண்டியவை

பிரசித்தமான கங்கா ஏரியை சுற்றிலும் பசுமையான இயற்கைச்சூழல் காணப்படுவதோடு பாறை அமைப்புகளும் பிரம்மாண்டமான எழிற்தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. கிராஃப்ட் சென்டர் காட்சிக்கூடத்தில் சுவர் ஓவியங்கள், மூங்கில் மற்றும் பிரம்பு கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உடைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜுவாலஜிகல் பார்க், இந்திரா காந்தி பார்க் மற்றும் போலோ பார்க் ஆகியவை பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பொழுதுபோக்குவதற்கு வசதியாக அமைந்துள்ளன.

pankhirajcomputer

புத்த விஹார்

புத்த விஹார்

புத்த விஹார் என்பது புதிதாக கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோயிலாகும். இது தலாய் லாமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மஞ்சள் நிறக்கூரையை கொண்ட இந்த திபெத்திய பாணி கோயில் இட்டாநகரின் அழகை கூட்டும் வகையில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலமாகவும் ஈடாநகர் புகழ் பெற்றுள்ளது. அருணாசல பிரதேசத்தின் இதர சுற்றுலாத்தலங்கள் மற்றும் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கு தேவையான தகவல்களையும் வசதிகளையும் இந்நகரத்தில் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Krish9

போம்டிலா

போம்டிலா

போம்டிலா ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையிடமாக இருக்கும் போம்டிலா, இயற்கையின் பேரழகை முழுமையாக கண்டு இரசிக்க மிகவும் ஏற்ற இடமாகும். போம்டிலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதை மயக்கும் இமயமலை சமவெளிகளையும், பனி-மூடிய சிகரங்களையும் காண முடியும். மேலும், இந்நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய சில பௌத்த மடாலயங்களும் மற்றும் கோம்பாஸ்களும் உள்ளன.

Brunswyk

திபெத்திய உணவு

திபெத்திய உணவு


உள்ளூர் திபெத்திய உணவு வகைகளான மோமோஸ் மற்றும் தூபா ஆகிய உணவு வகைகளையும் சுற்றுலாப் பயணிகள் சுவைத்திட முடியும். போம்டிலாவின் அழகிய சுற்றுப் புறங்களை பார்வையிட்ட பின்னர் சில நினைவுப் பரிசுகளையும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிட முடியும். முக்கியமான கைவினை பொருள் மையம் மற்றும் பிற கடைகளில் கிடைக்கக் கூடிய பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்காக போம்டிலா புகழ் பெற்றிருக்கிறது.

Kalyanvarma

பௌத்த மடாலயங்கள்

பௌத்த மடாலயங்கள்

சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகையான கம்பளி விரிப்புகள் மற்றும் பாரம்பரிய முகமூடிகளையும் இங்கே வாங்கிட முடியும். இந்த கைவினைப் பொருள் மையம் மற்றும் மூன்று பௌத்த மடாலயங்கள் ஆகியவை கீழ் கோம்பா, மத்திய கோம்பா மற்றுமு; மேல் கோம்பா என்று அழைக்கப்படுகின்றன. இந்த இடங்கள் போம்டிலாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களாகும்.
upload.wikimedia.org

 பிரம்மாண்டமான மலை

பிரம்மாண்டமான மலை

போம்டிலாவிற்கு வடக்கில் இருக்கும் தவாங் என்ற சிறிய நகரம் பிரம்மாண்டமான மலைச் சமவெளிகளை காட்டும் இடமாக இருப்பதால், போம்டிலவிற்கு சுற்றுலா வருபவர்கள் இந்நகருக்கும் வந்து செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 34000 மீட்டர் உயரத்தில் உள்ள தவாங்கில், 400 ஆண்டுகள் பழமையான பௌத்த மடாலயம் ஒன்றும் உள்ளது. இவை மட்டுமல்லாமல், போம்டிலாவில் உள்ள செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம், ஈகிள் நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம் மற்றும் காமெங் யானைகள் பாதுகாப்பகம் ஆகியவையுமம் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக காத்துக் கொண்டுள்ளன.

Vikramjit Kakati

 ஜிரோ

ஜிரோ

ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த வட்டாரத்தில் பரவி கிடக்கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்கும் வீடாக அமைந்திருக்கிறது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்கள். இங்கு காணப்படும் அபடணி பழங்குடியினர் இயற்கை கடவுளை வழிபடுகின்றனர். ஈர நில வேளாண்மை போக தங்கள் வாழ்வாதாரத்துக்காக கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி பொருள்களையும் தயாரித்து விற்கின்றனர். மற்ற பழங்குடியினரை போல இவர்கள் நாடோடிகள் அல்ல. இவர்கள் ஜிரோ வட்டாரத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களாவார்கள்.

PC: Ashwani Kumar

 டால்லி பள்ளத்தாக்கு

டால்லி பள்ளத்தாக்கு

பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவைகள் தான் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். அபடணி மக்கள் இங்கு பல திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள். மார்ச் மாதம் கொண்டாடப்படும் மியோகோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப்படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாடப்படும் ட்ரீ திருவிழா போன்றவைகள் மிகவும் பிரசித்தியானவைகள்.

Radhe tangu

ரோயிங்

ரோயிங்

பனிமூடிய மலைகள், கொந்தளிப்பான ஆறுகள், பனி படர்ந்த பள்ளத்தாக்குகள் மற்றும் அபரிமிதமான செடி கொடிகள் ஆகியவை ரோயிங்கின் சில ஈர்ப்புகளாகும். இயற்கை அழகுக்கு பெயர் போன ரோயிங், கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான உடைகளுடன் வெள்ளந்தியாகத் திரியும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்கால தொல்பொருளியல் ஸ்தலங்கள் போன்றவற்றால், இயற்கை விரும்பிகள், சுவாரஸ்யமான அனுபவத்தை நாடும் சுற்றுலாப் பயணிகள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் மனித இன ஆர்வலர்களின் மனதுக்குகந்த இடமாகவும் விளங்கி வருகிறது.
PrasadBasavaraj

பசிகாட்

பசிகாட்


ஆதிவாசிகளால் நிறைந்த பசிகாட்டில் தான் ஆதி வாசிகளின் மொழிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. பசிகாட் நகரின் பூர்வகுடிகள் செழுமையான கலாச்சாரத்தையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். இங்கு கொண்டாடப்படும் மோபின், சலோங் ஆகிய விழாக்கள் நிரம்ப ஆர்வத்துடன் கொண்டாடப்படுகின்றன. பெரும்பாலும் தீய சக்திகளை விரட்டுவதற்காகவும், கெட்ட விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் இருந்து தூரத் தள்ளவும் உள்ளூர் மக்கள் தங்கள் தெய்வத்தை வழிபடுகின்றனர். நெல் விதைக்கும் பருவத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சோலங் விழா ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

Sumantbarooah

Read more about: travel, forest, india