» »அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகராவுக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகராவுக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

Posted By: Udhaya

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.தென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ் பெற்று விளங்குகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான இயற்கை வளத்தை பெற்றிருக்கும் இந்த பள்ளத்தாக்கு பகுதியை சமீபத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜய்ராம் ரமேஷ் அமைதிப்பள்ளத்தாக்கு என்று வர்ணித்துள்ளார்.

அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகராவுக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

Ajithaprasadmp

சர்வதேச பறவைகள் அமைப்பு அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒரு முக்கிய பறவைகள் சரணாலயமாகவும் அங்கீகரித்துள்ளது. இருவாச்சி எனும் அருகி வரும் பறவையினத்தின் இங்கு நான்கு வகைகள் இங்கு வசிக்கின்றன.

இங்கு காணப்படும் தாவரவகைகளும் உயிரினங்களும் பலவகைகளை சார்ந்தனவாக காணப்படுகின்றன. ஆசிய இயற்கை பாதுகாப்பு மையமானது அதிரப்பள்ளி வனப்பகுதியை தேசியப்பூங்காவாகவும் சரணாலயமாகவும் அறிவிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இந்த வனப்பகுதி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதிரப்பள்ளி, வழச்சல், சர்ப்பா, கொளத்திருமேடு மற்றும் சோலையார் போன்றவையே அவை.

அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகராவுக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

commons.wikimedia.org

இங்குள்ள காடுகளில் கோடர்கள் எனும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தேன், மெழுகு, ஏலம், இஞ்சி போன்ற இயற்கை விளைபொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இந்த பழங்குடி மக்களின் கிராமத்துக்கு விஜயம் செய்து இவர்களின் வாழ்க்கை முறையையும் பயணிகள் நேரில் கண்டு ரசிக்கலாம். ஆதிகுடிகள் வசிக்கும் இந்தக் கிராமமானது 'கடவுளின் சொந்த தேசம்' என்ற பெருமையை பெற்றுள்ள கேரளப்பகுதியின் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகராவுக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?

commons.wikimedia.org

இவை தவிர 'டிரீம்வேர்ல்டு' மற்றும் 'சில்வர்ஸ்டார்ம்' என்ற இரண்டு பொழுதுபோக்கு பூங்காக்களும் அதிரப்பள்ளிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அதிரவைக்கும் தரிசனத்தை அளிக்கும் இந்த அதிரப்பள்ளி பகுதிக்கு இதுவரை நீங்கள் விஜயம் செய்ததில்லை என்றால், அடுத்து சுற்றுலாவுக்கான ஸ்தலமாக யோசிக்காமல் இந்த அதிரப்பள்ளி சுற்றுலாக்கிராமத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் இங்கு விஜயம் செய்வது உகந்தது. சாலை மார்க்கமாக நல்ல போக்குவரத்து வசதிகளை இது கொண்டுள்ளது. அருகிலுள்ள விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் மூலமாக அதிரப்பள்ளிக்கு வந்து சேரலாம்.

Read more about: travel, waterfalls