» »இந்த மூங்கில் பிரம்பு நாற்காலி தயாரிக்கும் இடத்துக்கு போகலாமா?

இந்த மூங்கில் பிரம்பு நாற்காலி தயாரிக்கும் இடத்துக்கு போகலாமா?

Written By: Udhaya

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது பரேலி எனும் மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் பரேலி ஆகும். வட இந்தியாவின் ஒரு பெரிய வணிக நகரமாக இந்த நகரம் புகழ் பெற்றுள்ளது. இந்த இடம் ஆன்மீகத்துக்காகவும், சுற்றுலாவுக்காகவும் மிகவும் பேசப்படும் இடமாகும். இங்கு கிடைக்கும் மூங்கில் வகை பொருள்களை வாங்க இங்கு பயணிக்கலாம் வாருங்கள்.

கலை நுட்பமான ஊர்

கலை நுட்பமான ஊர்

இங்குள்ள பல கோயில்கள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றுக்காக இந்த நகரம் புகழ் பெற்றுள்ளது. ராம்கங்கா ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரம் பல சுவாரசியமான அருங்காட்சியகங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை கொண்டிருக்கிறது. இந்த இடத்துக்கு ஒருமுறை வருகைத் தந்தவர்கள் திரும்ப திரும்ப வரவழைக்கும் சிறப்பு கொண்டதாகும்.

Suneet87

மர அலங்காரப் பொருள்கள்

மர அலங்காரப் பொருள்கள்

மரச்சாமான் தயாரிப்பில் குறிப்பாக பிரம்பு இருக்கைகள் தயாரிப்பில் இந்த பரேலி நகரம் முன்னணியில் உள்ளது. பன்ஸ் - பரேலி என்ற பெயரிலும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. பன்ஸ் எனும் சொல் பிரம்பு எனும் பொருளைத் தருகிறது. இங்கு பிரம்பால் தயாரிக்கப்பட்ட நிறைய பொருள்கள் முக்கியமாக நாற்காலிகள் அழகானவையாகவும், விலை மலிவாகவும் கிடைக்கிறது.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


பன்ஸ் எனும் இந்தப்பெயர் பன்ஸ்தேவ் மற்றும் பரால்தேவ் என்ற இரண்டு இளவரசர்களை கௌரவிக்கும்விதமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்த நகரத்தை நிர்மாணித்த ஜகத்சிங் கதேரியா எனும் மன்னரின் வாரிசுகள் ஆவர். இந்த நகரம் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பாகவே அழகும். செழிப்பும் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதை அறிந்தே இதன் ஆட்சியாளர்களின் பரிந்துரையின் பெயரில் தன் நாட்டின் தலைநகராக இதை கதேரியா மன்னர்கள் ஆக்கியுள்ளனர்.

Manojrajput1983

பரேலி மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

பரேலி மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

முன்பே கூறியதுபோல இங்குள்ள பல கோயில்களுக்காக புகழ்பெற்றுள்ள பரேலி நகரத்தில் நான்கு முக்கியமான சிவன் கோயில்கள் அமைந்திருக்கின்றன. தோப்பேஸ்வர்நாத், மதிநாத், திரிவதிநாத் மற்றும் அலக்நாத் என்பவையே அவை. இந்த நான்கும் நகரத்தின் நான்கு மூலைகளிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நான்கு மூலைகளையும் ஆட்கொண்டுள்ள இவை சராசரியாக ஒரு நாள் முழுவதும் செலவிட்டு தரிசித்து வந்தால், இல்லறம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

manoj rajput

லட்சுமி நாராயணன் கோயில்

லட்சுமி நாராயணன் கோயில்

இங்குள்ள லட்சுமி நாராயணன் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். ஃபன் சிட்டி எனும் தனியார் உல்லாசப்பூங்கா ஒன்று இந்நகரத்தில் காண வருகை தர வேண்டிய சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செய்து நீர் விளையாட்டுகளில் ஈடுபட இது மிகவும் ஏற்றதாகும். சில சாகச விளையாட்டுக்களும் இங்கு புகழ் பெற்று விளங்குகிறது.

 ஆன்மீகம்

ஆன்மீகம்

தர்க்கா இ அலா ஹஸாரத், பீபி ஜி கி மஸ்ஜித் மற்றும் ஷீ சாய் மந்திர் போன்றவை இங்குள்ள இதர ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும். இந்நகரத்தின் வரலாற்றுப்பின்ணி குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் பயணிகள் பஞ்சலா அருங்காட்சியகம் மற்றும் ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ் அருங்காட்சியகம் போன்ற அருங்காட்சியகங்களுக்கு பயணம் செய்யலாம். அருங்காட்சியகங்களில் பழமையான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அந்த கால நிலையை விளக்குவதாக அமைக்கப்பட்டு உள்ளன.

 எப்போது எப்படி செல்லலாம்

எப்போது எப்படி செல்லலாம்

பரேலி நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலம் பரேலி நகரத்திற்கு குளிர்காலத்தில் சுற்றுலா பயணம் செய்வது சிறந்தது. எப்படி செல்வது? ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகளின் மூலம் மிக சுலபமாக பரேலி நகரத்தை அடையலாம். அருகிலுள்ள விமான நிலையம் டெல்லியில் உள்ளது. இதன் அருகில் சில இடங்கள் சிறப்பான சுற்றுலா அம்சங்களோடு அமைந்துள்ளன..

official site

 ஃபன் சிட்டி

ஃபன் சிட்டி

ஃபன் சிட்டி என்ற பெயரில் எண்ணற்ற பொழுதுபோக்கு பூங்காக்கள் இந்தியா முழுதும் அமைந்திருந்தாலும் அவற்றில் இந்த பரேலி நகரத்தில் உள்ள ஃபன் சிட்டி பொழுதுபோக்கு பூங்கா வட இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் நிறைந்துள்ளன. 13 ஏக்கர் நிலப்பரப்பில் 2000ம் ஆண்டில் இந்த பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. நீர் விளையாட்டுகள், கார் சவாரி மற்றும் ரயில் சவாரி, கடல்கரை அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான இயந்திரச்சவாரிகள் அக்வா ஷூட், ஹரா கிரி, பம்பிங் கார், ஃப்ளையிங் பஸ், ஃபன் சிட்டி எக்ஸ்பிரஸ், ஃபிரீஸ்பீ, பிரேக் டான்ச், ஃப்ரீ ஃபால், அரௌன்ட் தி வேர்ல்டு, டார்க் ரைட்ஸ், கொரில்லா வீடியோ கேம், கோஸ்ட் டிரெயின் மற்றும் முகம்போ குகை போன்றவை இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Official

தர்க்கா இ அலா ஹஸாரத்

தர்க்கா இ அலா ஹஸாரத்

சர்வதேச அளவிலான புகழை பரேலி நகரத்திற்கு தேடித்தந்துள்ள வரலாற்று சின்னமாக இந்த தர்க்கா இ அலா ஹஸாரத் அமைந்திருக்கிறது. நகரத்தின் சந்தடி நிறைந்த மொஹல்லா சௌதாக்ரான் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மசூதியானது புகழ் பெற்ற ஞானியான அலா ஹஸாரத் இமாம் அஹமத் ரஜா கான் என்பவரை கௌரவிக்கும் விதமாக கட்டப்பட்டிருக்கிறது. 1856-ம் ஆண்டு பிறந்த இந்த ஆன்மீக அறிஞர் அலா ஹஸாரத் எனும் பட்டத்தை அவரது காலத்தில் அளிக்கப்பெற்றுள்ளார். இஸ்லாமிய அன்மீக மரபுகளின் அறிஞராக அக்காலத்தில் இவர் விளங்கியுள்ளார். இஸ்லாமிய தத்துவங்களுக்காக ஒரு கல்வி மையத்தையும் இவர் உருவாக்கியுள்ளார்.

Aslam

தூபேஷ்வர்நாத் கோயில்

தூபேஷ்வர்நாத் கோயில்


தூபேஷ்வர்நாத் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறியப்படுகிறது. இது த்ரௌபதி மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய மஹாபாரத பாத்திரங்கள் சிவபெருமானுடைய ஆசியோடு அவதரித்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது. புராணங்களின்படி இந்த கோயில் ஸ்தலத்தில் அர்தி ரிஷியின் சீடராகிய தூமர் ரிஷி வெகு காலம் தவம் புரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் சிவபெருமான் சிவலிங்கரூபமாக அவர் முன் தோன்றி அவரது தவத்தை அங்கீகரித்துள்ளார்.

Read more about: travel, temple