» »உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா?

உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா?

Written By: Udhaya

பொதுவாகவே கடற்கரைகள் நம் ஆழ்மனது ஆசைகளை வெளிக்கொணர்ந்து, நம்மை குழந்தையாக மாற்றக்கூடியவை. எவ்வளவுதான் பதற்றங்கள் நிறைந்திருந்தாலும், கடற்கரை மணலில் காலார நடைபோட்டால் எல்லாம் பறந்து போகும். உங்கள் அன்பிற்குரியவருடன் கடற்கரையில் அமர்ந்து பேசிப்பாருங்கள். உங்கள் காதல் எல்லாவற்றையும் கடந்து அன்பை மட்டுமே யோசிக்கச்செய்யும். அந்த அளவுக்கு கடற்கரைக்கு சக்தி உள்ளது. உங்கள் மன ஓட்டத்தை மாற்றும் வல்லமை கொண்ட கடற்கரைகளுக்கு பயணம் போலாமா?

டிகா நகரம்

டிகா நகரம்

பல வருடங்களாக வார இறுதியைக் கழிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள டிகா நகரம். கொல்கத்தா மற்றும் கரக்பூருக்கு அருகில் உள்ள இந்நகரம் ரயில் மற்றும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்டை கடற்கரை இயற்கையான கடற்கரையில் இருந்து 2கிமீ தொலைவில் டிகா சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ள இரட்டை கடற்கரை அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் இருக்கும் இக்கடற்கரை எத்தனை சுற்றுலா பயணிகள் வந்தாலும் நிரம்பி வழியாமல் வசதியாக இருக்கிறது.

Swarnasubarna26 -

 கேஷுவரீனா

கேஷுவரீனா

குளிர்காலங்களில் இங்கு ஏராளமான பயணிகள் குவிகிறார்கள். புத்துணர்ச்சியூட்டும் விடுமுறை மதியவேளைகளை கடற்கரையில் கழிக்க சிறந்த இடமாக டிகா திகழ்கிறது. கடல்சார் உணவுகள் பரிமாறப்படும் டிகா கடற்கரைக்கு சென்று வர அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி சில ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் ஆகாது. கேஷுவரீனா தோட்டங்கள் இங்கு நிறைய காணப்படுகின்றன. பழைய கடற்கரையில் இருந்து புதிய கடற்கரைக்கு செல்லும் வழியெங்கும் கேஷுவரீனா செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது மதிமயக்கும் கடல்காட்சியும் இருக்கிறது.

UNknown

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஜுன்புர், ஷங்கர்பூர், சுபர்னரேகா நதி, தல்சாரி, மந்தார்மணி ஆகியவை அருகிலுள்ள மற்ற தளங்களாகும். குடும்ப சகிதமாகவும், ஜோடியாகவும் சென்று வர மீன்காட்சியகம், ஆராய்ச்சி மையம் என பலவகையான பொழுதுபோக்குகள் உள்ளன.
Sambit 1982

டிகாவின் கடைவீதிகள்

டிகாவின் கடைவீதிகள்

கடற்கரையெங்கும் உணவு, குளிர்பான கடைகள் நிரம்பி வழிகின்றன. உள்ளூர் பொருட்களும், கலாச்சார பொருட்களும் விற்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்டதைப் போல சிக்கனமான செலவில் திருப்திகரமான சுற்றுலாவை டிகா அளிக்கிறது. டிகா பயணப்படும் வழிகள் அருகிலுள்ள நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் மூலமாக டிகா இணைக்கப்பட்டுள்ளது
UNknown

பக்காலி

பக்காலி


பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம். கடற்கரையோடு கூடிய இரட்டை நகரம் இரட்டை நகரங்களான பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச் எனும் இரண்டு நகரங்களுக்கு இடையே 7 கி.மீ தூரத்துக்கு இந்த பக்காலி கடற்கரை தீவுப்பகுதி அமைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதி கடினமான தரையுடன் காட்சியளிப்பதால் கடலை ஒட்டி சைக்கிள் சவாரி மற்றும் ஓட்டப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட முடியும் என்பது ஒரு சுவாரசிய அம்சம்.
UNknown

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

மாநிலத்தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த கடற்கரைப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதும் சுலபமாக உள்ளது. சுற்றுலா அம்சங்கள் தனிமையான இடத்தில் அமைந்திருப்பதுதான் இந்த தீவுக்கடற்கரையின் பிரதான சிறப்பம்சமாக கருதப்படுகிறது. பொதுப்போக்குவரத்து வசதிகள் இங்குஅதிகமில்லை என்றாலும் வேன் ரிக்ஷாக்கள் இங்கு பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
Rocksmoker 007

ரம்மியமான தோற்றம்

ரம்மியமான தோற்றம்

ரிக்ஷாக்கள் மூலமாக ஹென்றி தீவு மற்றும் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரம் போன்றவற்றுக்கு நீங்கள் பயணம் செய்யலாம். ஹென்றி தீவில் கன்க்ரு, பாம், சுந்தரி மற்றும் இதர மரங்கள் ரம்மியமான தோற்றத்தை தரும் வகையில் வளர்ந்திருக்கின்றன. மாங்க்ரோவ் காடுகளும் இந்த தீவுப்பகுதியை ஒட்டி காணப்படுகின்றன. ஜம்புத்வீப் சுற்றுலா பக்காலி தீவுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஜம்புத்வீப் எனும் மற்றொரு அழகிய தீவுப்பகுதிக்கும் நீங்கள் பயணம் செய்யலாம்.
P.K.Niyogi

அற்புத அனுபவம்

அற்புத அனுபவம்

புத் புதி எனும் நாட்டுப்படகுகளின் மூலமாக இந்த தீவுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஜம்புத்வீப் தீவில் இறங்கி சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி இல்லை. படகில் இருந்தபடியே பயணிகள் தீவின் அழகை பார்த்து ரசிக்கலாம். எனினும் இந்த அற்புத அனுபவம் தவறவிடக்கூடாத ஒன்றாகும். பிரயாண வசதிகள் சாலைப்போக்குவரத்து, ரயில் மற்றும் விமான மார்க்கம் போன்ற மூவழிகள் மூலமாகவும் இந்த வித்தியாசமான தீவுக்கடற்கரைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

P.K.Niyogi

 தாஜ்பூர் கடற்கரை

தாஜ்பூர் கடற்கரை

அருகில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு அமைதி சூழலில், கடற்கரை ஓரத்தில் இயற்கையோடு தனித்திருக்க நீங்கள் விரும்பியதுண்டா? எனில் நீங்கள் வரவேண்டிய இடம் தாஜ்பூர் கடற்கரை அன்றி வேறில்லை. இந்த தாஜ்பூர் சுற்றுலாத்தலம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து சிறிது நேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளது. கடற்கரை எழில் இந்த தாஜ்பூர் கடற்கரையில் வித்தியாசமான அம்சங்கள் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

Biswarup Ganguly

மயக்கும் எழில்

மயக்கும் எழில்


கரைப்பகுதியை நோக்கி குவிந்த பிறைபோன்ற அமைப்பில் அல்லாமல் கடலை நோக்கி குவிந்த கரையமைப்புடன் காட்சியமைப்பதால் கடலின் அழகும் தொலைதூர தொடுவானமும் மயக்கும் எழிலுடன் பார்வையாளர்களை வசப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த கடற்கரையை சுற்றி பசுமையான வனப்பகுதி சூழ்ந்திருப்பது மற்றொரு தனித்தன்மையான அம்சமாகும். கடற்கரை மணலில் ஆயிரக்கணக்கான சிவப்பு நண்டுகள் ஒளிந்து வசிப்பதால் ரத்தச்சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதி ஒளிர்வதும் குறிப்பிடத்தக்கது.

Swarnasekhar Kumar

நேச்சர் கேம்ப்

நேச்சர் கேம்ப்

இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள முகத்துவாரத்தீவுப்பகுதியில் மீனவர் குடியிருப்புப்பகுதி ஒன்றும் உள்ளது. மீனவர் வாழ்க்கை முறையை நேரில் பார்க்க விரும்பும் பயணிகள் இந்த இடத்துக்கும் பயணம் செய்யலாம். நேச்சர் கேம்ப் எனப்படும் இந்த சுற்றுலா வளாகம் தாஜ்பூர் கடற்கரையை நோக்கியவாறு அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பயணிகள் வசதிக்காக பூங்காக்கள், ஊஞ்சல் இருக்கைகள், உணவு வசதிகள் மற்றும் உற்சாக பான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சவுக்கு மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் சூழ அமைந்திருக்கும் இந்த நேச்சர் கேம்ப் வளாகத்தில் பாதுகாப்பான வசதியான பொழுதுபோக்கை பயணிகள் அனுபவிக்கலாம்.
V3mpyrik

 சாகச விளையாட்டு அம்சங்கள்

சாகச விளையாட்டு அம்சங்கள்

சாகச விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த கடற்கரைப்பகுதியில் பாராகிளைடிங், ஆற்றுமிதவைப்படகு சவாரி, பனானா ரைட் மற்றும் பாறை ஏற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருக்கின்றன. இந்த கடற்கரையில் அதிகமான வழிகாட்டிகள் திரிவதால் அவர்கள் உங்களை தொந்தரவு செய்ய அனுமதிக்காமல் கவனமாக இருப்பதும் அவசியம். எப்படி செல்வது? தாஜ்பூர் சுற்றுலாத்தலத்துக்கு சாலை மார்க்கம், ரயில், விமானம் போன்ற மூவகை போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் பயணம் மேற்கொள்ளலாம்.

Moinak Debnath

Read more about: travel, beach