» »210 சித்தர்கள் வாழும் பிரம்மரிஷி மலைக்கு பின் மறைந்துள்ள ரகசியங்கள்

210 சித்தர்கள் வாழும் பிரம்மரிஷி மலைக்கு பின் மறைந்துள்ள ரகசியங்கள்

Posted By: Udhaya

முக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கவாய்ப்புண்டு. அவர் இன்றளவும் வாழும் பிரம்மரிஷி மலையில் நடக்கும் விநோத செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் காண்போம். அதுமட்டுமில்லாது, மலையேற்றம் என்பது தற்போதைய இளைஞர்களிடையே பரவி வரும் புதுப்பிக்கப்பட்ட கலாச்சாரமாகும். உண்மையில் நீங்களும் டிரெக்கிங் சென்று பாருங்கள் மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்

பிரம்மரிஷி மலை என்பது தலையாட்டி சித்தரின் இருப்பிடம் மட்டுமல்லாது, மொத்தம் 210 சித்தர்கள் இப்போதும் வாழ்ந்துவருவதாகவும், அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் பரவலாக பேச்சு இருக்கிறது. அதுபற்றி தெரிந்து கொள்வதற்காகவும், பிரம்மரிஷி மலையின் அழகை கண்டு பிரம்மிப்பதற்காகவும் இந்த பயணத்தைத் தொடர்வோம்.

 எலம்பலூர்

எலம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத் தலைநகரிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது எலம்பலூர். தேசிய நெடுஞ்சாலை 38 வழியாகச் செல்கையில் 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் பிரம்மரிஷி மலை உள்ளது.

Map

 தலையாட்டி சித்தர்

தலையாட்டி சித்தர்

உலகில் நடப்பவற்றை முன்கூட்டியே சொல்லும் சித்தர்களில் தலையாட்டிச் சித்தர் எழுதிய காலஞானம் நூலில் பின்னாள் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்த புயல், வெள்ளம், சுனாமி போன்றவை தவறாமல் நடந்ததாகவும் கூறுகின்றனர்.

PC:Youtube

சித்தர்கள் வாழும் மலை

சித்தர்கள் வாழும் மலை


இந்த மலையில் 210 சித்தர்கள் இன்றும் வாழ்வதாகவும், அவர்கள் பல விநோத செயல்பாடுகளை தொடர்வதாகவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு வலைகுரு சித்தர், கணபதி சித்தர், மகாலிங்க சித்தர் ஆகியோரது சமாதிகள் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரிலும் தலையாட்டி சித்தரின் வாக்கு அப்படியே பலிக்கிறது என்ற பேச்சும் நிலவுகிறது.

Offl site

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


சரி. பயணத்தைத் தொடர்வோமா? திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை எண் 38 இல் பயணித்தால் இந்த இடத்தை எளிமையாக அடையலாம். அதே நேரத்தில், இந்த இடம் பெரம்பலூரிலிருந்து 4கிமீ தொலைவிலும், அரியலூரிலிருந்து 36 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 65கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

அரியலூர் ரயல் நிலையமும், திருச்சி விமானநிலையமும் அருகிலுள்ளது.

 சாலை வழிப்பயணம்

சாலை வழிப்பயணம்


திருச்சியிலிருந்து வந்தீர்களென்றால், 62 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து வந்தீர்களாயின் 272கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த மலை.

 மலையேற்றம்

மலையேற்றம்

திருச்சியிலிருந்தோ சென்னையிலிருந்தோ வரும்வழியில் ரீஜினல் டிரான்ஸ்போர்ட் ஆபிஸ் ஒன்றை காணமுடியும். திருச்சி வழி வருபவர்கள் இந்த அலுவலகத்தை வலப்புறத்திலும், சென்னை வழி வருபவர்கள் இடப்புறத்திலும் காணமுடியும். இந்த இடத்திலிருந்து பெரம்பலூர் பைபாஸ் என்னும் சாலைக்கு மாற வேண்டும். அதாவது திருச்சி வழி வருபவர்கள் இடதுபுறமாகவும்,.சென்னை வழிவருபவர்கள் வலப்புறமாகவும் திரும்பவேண்டும்.

பிரம்மரிஷி மலை அன்புடன் வரவேற்கிறது

பிரம்மரிஷி மலை அன்புடன் வரவேற்கிறது


சிறிது நேரத்தில் பிரம்மரிஷி மலை உங்கள் கண்ணுக்குத் தெரியும். இல்லையென்றால் அங்குள்ளவர்களிடம் விசாரித்து செல்வது உங்கள் பயண நேர விரயத்தைத் தவிர்க்கும்.

மலையேறத் தொடங்குவோம்

மலையேறத் தொடங்குவோம்

நீங்கள் சொந்த வாகனத்தில் வந்திருந்தால், அதை இங்குள்ள மரத்தடியில் நிறுத்திவிட்டு, இந்த இடத்திலிருந்து மலையேற்றம் தொடங்குகிறது. கரடுமுரடான பாறைகள் சிறு சிறு கற்கள் நிறைந்த பாதை என்றாலும் ஏறுவதற்கு அவ்வளவு கடினமாக இருக்காது. எனினும் எச்சரிக்கையுடன் மலையேறவேண்டும்.

காதுகளில் விழும் கீதம்

காதுகளில் விழும் கீதம்

மலைமீதுள்ள கோயிலில் சிலசமயங்களில் ஒலிக்கும் பாடல் கீழே அடிவாரம் வரை கேட்கும். அதை கேட்டுக்கொண்டே நடந்தால் அசதி தெரியாது. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் நடந்து சென்ற இடங்கள் கிட்டத்தட்ட படிக்கட்டுகளைப் போலவே மாறிவிட்டது.

ஒற்றைப் பனமர நிழலில்

ஒற்றைப் பனமர நிழலில்

கோயிலை உயர்ந்து பார்க்கும்போது, அது ஒற்றைப் பனமரநிழலில் நிற்பதுபோல காட்சிதரும்.

திருமங்கலியம்மன்

திருமங்கலியம்மன்

இந்த மலையில் அமைந்துள்ளது திருமங்கலியம்மன் கோயில். இது தற்போது புணரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

தமிழ்மன்னர்கள் கட்டிய கோயில்

தமிழ்மன்னர்கள் கட்டிய கோயில்

இங்கு கிடைக்கப்பட்ட கல்வெட்டுகள், சின்னங்கள் வைத்துப் பார்க்கும்போது இது சோழமன்னர்கள் கட்டிய கோயிலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது 500 ஆண்டுகள் பழமையானது. அடர்ந்த காடுகளில் மனிதர்கள் செல்லமுடியா குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற மலைகளைப்போலல்லாமல், இந்த மலையில் சித்தர்களை எளிதாக தொடர்புகொள்ளமுடியும் என்றும் கூறுகிறார்கள்.

கொங்கநாவர் தூண்

கொங்கநாவர் தூண்

இப்படியே நடந்து மலைஉச்சியை அடைந்தால், அங்கு கொங்கநாவர் சித்தரின் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தின் போது விழா எடுக்கப்படுகிறது. ஆயிரம் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது. தமிழ்மாதமான கார்த்திகை பௌணர்மியன்று இவை நிகழ்கின்றன.

பால்ம்ரா பால்ம்

பால்ம்ரா பால்ம்


கொங்கநாவர் தூணைத் தொடர்ந்து நாம் பார்க்கவேண்டிய இடம் இதுவாகும். இதன் காட்சி மிகப் பிரம்மாதமாக இருக்கும். புகைப்படம் எடுப்பதற்கு சிறந்த இடமாகும்.

கருப்பசாமி கோயில்

கருப்பசாமி கோயில்

பிரம்மரிஷி மலையில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான கருப்பசாமியை கொண்டுள்ளது. வருங்காலத்துக்கான சில குறியீடுகளை இந்த கோயிலுக்கு சென்றால் அறியமுடியுமாம். உங்கள் வருங்காலம் சிறப்பாக அமைய இந்த கோயிலுக்கு செல்லலாம்.

 ஒளியாய் காட்சிதரும் சித்தர்கள்

ஒளியாய் காட்சிதரும் சித்தர்கள்


சபரிமலையில் எப்படி ஐய்யப்பன் ஒளியாய் காட்சிதருவார் என்ற நம்பிக்கை உள்ளதோ அதுமாதிரியான நம்பிக்கைதான் இதுவும். இங்கு, சித்தர்கள் ஒளியாய் காட்சி தரும் நாளாக கார்த்திகை தீப நாள் உள்ளது. அதன் நினைவாக திருவண்ணாமலை தீபத்தைப் போல ஒளியேற்றி வழிபடுகின்றனர்.

கீழ் மலை

கீழ் மலை

இங்கு வேறு சில இடங்களும் உள்ளன. இவை பெரும்பாலும் ஆன்மீக ரீதியான சுற்றுலாவுக்கு சிறந்ததாக உள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்கவும், சாகச பயணமாகவும் இங்கு வருகைதருகின்றனர்.

செல்வமகா வெற்றி கணபதி கோயில்

செல்வமகா வெற்றி கணபதி கோயில்

விநாயகர் இங்கு செல்வ வெற்றி கணபதி என்று அழைக்கப்படுகிறார். எந்த தொழில் தொடங்கும்முன்பும் இவரைத் தொழுதுவிட்டு சென்றால் லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கங்கனேஸ்வரர் கோயில்

கங்கனேஸ்வரர் கோயில்


இதுவும் சிவபெருமாளின் அவதாரமாகும். கங்கனேஸ்வரர் எனும் பெயரில் சிவன் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். காகபுஜன்டர் எனும் சித்தர் வழிபட்ட தலமாக இது புகழ்பெற்று விளங்குகிறது.

நாக கோயில்

நாக கோயில்

இங்கு சிறிய அளவிலான நாகக்கோயில் ஒன்றும் உள்ளது. இந்த இடத்தில் தியானம் செய்யவும் நிறையபேர் விரும்புகின்றனர்.

வாசகர்களே.. இதுபோன்ற மலைத்தொடர்கள் குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கீழே கமண்ட்டில் குறிப்பிடுங்கள். அல்லது எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உரிய புகைப்படத்துடன் இருந்தால், அவை உங்கள் பெயருடன் பதிவிடப்படும். கோயில்கள் மட்டுமல்லாமல், உங்கள் ஊர் அருகில் இருக்கு சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இடங்களையும் இங்கே பதிவிடுங்கள். நன்றி.. தொடர்ந்து தமிழ் நேட்டிவ் பிளானட்டுடன் இணைந்திருங்கள்.