
ஒரே நாளிலா? எப்படி இது சாத்தியம் என கேட்பார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏனென்றால் வயநாடு மலையேற்றம் தடை செய்யப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத் தீயினால் வயநாடு மலையேற்றம் மட்டும் அனுமதிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் புனரமைக்கப்பட்டு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வசம் வந்துள்ளது இந்த வயநாடு மலையேற்ற சொர்க்கம்.
அப்படி என்னய்யா ஸ்பெஷல் இங்கனு கேட்குறீங்களா? சொல்றோம். ஆனா இந்த கட்டுரைய படிச்சு முடிச்சதும் வயநாடு சுற்றுலாவுக்கு பிளான் போடமாட்டிங்கனு ஏதாச்சும் உத்திரவாதம் இருக்கா?

சாகசங்கள் நிறைந்த வயநாடு சுற்றுலா
வயநாடு என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுலா என்பதோடு நில்லாமல், பல வகையான சுற்றுலாக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கு சுற்றுலா மாவட்டமாகும்.
திரில் அனுபவங்களுக்கும். சாகசங்களுக்கும் பெயர் பெற்ற இந்த இடத்துக்கு உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது வந்துவிடவேண்டும்.

செம்பரா சிகரம்
கல்பெட்டா நகரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம்.

சோகத்தில் ஆழ்ந்த சுற்றுலா பயணிகள்
பெங்களூருவுக்கு எப்படி நந்தி மலையோ, அப்படி வயநாடு, கண்ணூர் வாசிகளுக்கு இந்த செம்பரா மலை. வார விடுமுறையை கழிக்கவேண்டியே இந்த இடங்களுக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் இந்த செம்பரா மலை காட்டுத் தீ காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பொலிவிழந்து காணப்பட்டது.

மகிழ்ச்சி
காட்டுத்தீ பாதிப்பிலிருந்து செம்பரா மலை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் பல சுற்றுலாப்பயணிகள் செம்பரா நோக்கி படையெடுக்கத்தொடங்கிவிட்டனர்.

இந்த வாரம்
செம்பரா மறு திறப்புக்கு பிறகு வரும் முதல் வார இறுதி என்பதால் இந்த வாரம் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்துங்கள்
காட்டுத்தீ வந்ததையடுத்து, இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், அரசு இங்கு வர ஒரு நிபந்தனை விதித்துள்ளது.
ஒரு நாளைக்கு 200 பேர் மட்டும்தான் செல்லமுடியும். அதுதான் அந்த நிபந்தனை. இதனால் நீங்கள் செல்லும் வாய்ப்பை அடைய முந்துங்கள்.

நுழைவு
காலை 7 மணி முதல் மதியம் 12 வரை நுழைவுக் கட்டணம் விநியோகிக்கப்படுகிறது.

இதய வடிவ குளம்
இந்த செம்பரா சிகரத்தில் இதய வடிவில் சுற்றிலும் பசுமையான சரிய வகை குளம் ஒன்றும் உள்ளது.

சிகரம்
நகரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த மலைச் சிகரம். குளத்திலிருந்து அரைகிலோ மீட்டர் நடந்தால் சிகரத்தை அடைந்துவிடலாம்

எப்படி செல்லலாம் ?
கல்பெட்டா அருகிலுள்ள மெப்படியிலிருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஜீப் வசதிகள் கிடைக்கும். இந்த மலையேற்ற பகுதி அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. எளிதாக செல்லும் அளவுக்கு இருப்பதால் சிறுவர்கள் கூட செல்லமுடியும்.