» »நூறு வருசத்துக்கு முன்னாடி நம்ம கோயம்புத்தூர் எப்படி இருந்துருக்கு பாருங்களேன்.. ப்பா!

நூறு வருசத்துக்கு முன்னாடி நம்ம கோயம்புத்தூர் எப்படி இருந்துருக்கு பாருங்களேன்.. ப்பா!

Written By: Udhaya

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு நாட்டின் தலைநகராகும். வானம் பார்த்த பூமி தான் என்றாலும் அங்கு வாழும் மக்களின் கடுமையான உழைப்பினால் பொன் விளையும் பூமியாக இன்று மாறியுள்ளது. தொழில்துறை, கல்வி, மருத்துவம், சுற்றுலா, போன்ற துறைகளில் மிகுந்த வளர்ச்சியடைந்த நகரமாக திகழும் கோவை மாநகரம் வாழ்வதற்கும் மிக இனிமையான இடங்களில் ஒன்றாகும். பல ஊர்களில் இருந்தும் இங்கே வரும் மக்கள் திரும்பிபோக மனமில்லாமல் கோயம்பத்தூரிலேயே தங்கி விடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னும் சில நாட்களில் கோவை மாநகரம் தனது 210ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறது. அதனை ஒட்டி கோவை நகரின் சில அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பை காண்போம் வாருங்கள்.

 பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :


கோயம்பத்தூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் பழமையான சைவ திருத்தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பழைய புகைப்படம்.

 இப்போது

இப்போது

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இப்போதுள்ள தோற்றம் இதுதான்.

Ssriram mt

கோவை மத்திய சிறை :

கோவை மத்திய சிறை :

தமிழ் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான கோவை மத்திய சிறைச்சாலையின் பழைய புகைப்படம் இது. வானில் இருந்து மொத்த சிறை வளாகமும் தெரியும்படி எடுக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 கோவை மத்திய சிறை இப்போ

கோவை மத்திய சிறை இப்போ

இப்போதுள்ள கோவை மத்திய சிறையின் தோற்றம். இது மிகவும் வளர்ந்துவிட்ட பகுதியாகிவிட்டது.

 அவினாசி சாலை :

அவினாசி சாலை :

இன்றைய கோவையின் நாடித்துடிப்பாக இருக்கும் அவினாசி சாலையின் அரிய புகைப்படம். எந்நேரமும் மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு காட்சியை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது அல்லவா?

அவினாசி சாலை இப்போ

அவினாசி சாலை இப்போ


பாருங்களேன்..கோவை நகரின் பரபரப்பான சாலை இது அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது என்று காணுங்கள்.

Ask27

ஆங்கிலேயர் காலத்து உணவகம்:

ஆங்கிலேயர் காலத்து உணவகம்:

ஆங்கிலேயர் காலத்தில் கோவையில் செயல்பட்டு வந்த பிரபலமான ஒரு உணகவத்தின் புகைப்படம். தற்போது கோவை நகரம் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வளர்ந்து, பல்வேறு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன அல்லவா.

 ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :

ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :

கோயம்பத்தூரின் அதி முக்கியமான பகுதிகளில் ஒன்றான ரேஸ் கோர்ஸில் 1870ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றின் புகைப்படம்.

இப்போ ரேஸ்கோர்ஸ்

இப்போ ரேஸ்கோர்ஸ்


இந்த காலத்தில் ரேஸ்கோர்ஸ் எப்படி இருக்குனு கொஞ்சம் பாருங்க.. இது வரைபடம்தான். ஆனால் வரைபடத்திலேயே நிறைய மாற்றங்கள் வந்திடிச்சி. அப்போ அப்படி இருந்த இந்த தேவாலயம் இப்போ எப்படி இருக்குனு பாருங்க.

இப்போ ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :

இப்போ ரேஸ் கோர்ஸ் தேவாலயம் :

ரேஸ்கோர்ஸ் தேவாலயம் ஆளே மாறிவிட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த தேவாலயம் கிறிஸ்துமஸ் நாட்களில் அப்படியே தகதக என ஜொலிக்கிறது.


csiallsoulschurch

ஸ்டேன்ஸ் மில் :

ஸ்டேன்ஸ் மில் :


கோயம்பத்தூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தைவை என்றால் அவை நிச்சயம் பஞ்சாலைகள் தான். அப்படி கோயம்பத்தூரில் முதன்முதலில் அமைக்கப்பட்ட பஞ்சாலைகளில் ஒன்றான 'ஸ்டேன்ஸ்' மில்லின் புகைப்படம்.

 ஸ்டேன்ஸ் மில் சாலை இப்போ

ஸ்டேன்ஸ் மில் சாலை இப்போ

இப்போது இந்த சாலையில் போக்குவரத்து எப்படி இருக்குனு பாத்தாலே நமக்கு இதோட வளர்ச்சி புரியும். பாருங்க இத்தன வருசத்துல கோயம்புத்தூர் எப்டி வளர்ந்துடிச்சினு.


srisrinivasaperumaltemplecoimbatore

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் :

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் :


பாப்பநாயக்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலின் 'கழுகுப்பார்வை' புகைப்படம். வானத்திலிருந்து எடுத்த இந்த படத்தை பாருங்கள். அழகாக காட்சியளிக்கிறதுதான்.

 ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் இப்போ

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் இப்போ

அட பாருங்களேன்.. எப்படி இருந்த இடம் இப்படி ஆகிடிச்சி. நல்ல கலர்புல்லா மாறிடிச்சில.

கோயம்பத்தூர் ரயில் நிலையம்

கோயம்பத்தூர் ரயில் நிலையம்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவை ரயில் நிலையத்தில் அரிய புகைப்படம்.

 கோயம்பத்தூர் ரயில் நிலையம் இப்போ

கோயம்பத்தூர் ரயில் நிலையம் இப்போ

இப்போதுள்ள ரயில் நிலையம் மிக மிக வளர்ச்சியடைந்த ஒரு மாநகரின் ரயில் நிலையம் போல் ஆகிவிட்டது. ஆம் நம்ம கோயம்புத்தூர்னா சும்மாவா.. ரயில் நிலையத்துக்கு வெளியே இருக்கு ரயிலை பார்த்து புகைப்படம் எடுத்துக்காம யாரும் போகமாட்டாங்களே...

Ragunathan

டவுன் ஹால் :

டவுன் ஹால் :

கோயம்பத்தூரின் மிகவும் நெரிசல் மிகுந்த பரபரப்பான பகுதிகளில் ஒன்றான டவுன் ஹாலின் பழமையான புகைப்படம்.

டவுன் ஹால் இப்போ

டவுன் ஹால் இப்போ


டவுன் ஹால் போனவங்களுக்குத் தெரியும். எப்படி இருக்குணு.. இந்த பழைய படத்தையும், இப்போதுள்ள படத்தையும் ஒ

Nandhan k dinesh

 ஒப்பணக்காரவீதி

ஒப்பணக்காரவீதி

கோவை டவுன் ஹால் பகுதியில் இருக்கும் ஒப்பனக்கார வீதியில் உள்ள மசூதியின் பழமையான ஓவியம்.

 ஒப்பனக்கார வீதி :

ஒப்பனக்கார வீதி :

இந்த இடம் இப்போது மிகவும் அதிக அளவு மக்கள் கூடும் இடமாகும்.

ஸ்டேன்ஸ் பள்ளிக்கூடம்

ஸ்டேன்ஸ் பள்ளிக்கூடம்

அந்த காலத்தில ஆரம்பிச்சி இப்ப வரைக்கும் சூப்பரா போய்ட்ருக்கும் ஸ்டேன்ஸ் பள்ளிதாங்க இது.

 ஒப்பணக்கார வீதி அப்போ

ஒப்பணக்கார வீதி அப்போ

இந்த வீதி எதுனு உங்களால கண்டிப்பா அடையாளம் கண்டுபிடிக்கமுடியாது.

நாஸ் திரையரங்கம்

நாஸ் திரையரங்கம்


நாஸ் திரையரங்கம் தான் இது... இது உங்கள்ல எத்தன பேருக்கு நினைவு இருக்கும்..

ராஜா தெரு

ராஜா தெரு

கோயம்புத்தூரில் அமைந்துள்ள டவுன்ஹாலை ஒட்டியவாறே அமைந்துள்ள தெருதான் இது.

காந்திபுரம் பேருந்து நிலையம்

காந்திபுரம் பேருந்து நிலையம்

அந்த காலத்து பேருந்து நிலையம் எப்படி இருக்கு பாருங்களேன்..

All Image Courtesy https://www.facebook.com/LovelyTiruppur/posts/823941644481223

Read more about: travel, temple, coimbatore