» »உலகிலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இந்தியாவில்தான் இருக்கு தெரியுமா?

உலகிலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இந்தியாவில்தான் இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோட்டாக் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்காவான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா இங்குதான் அமைந்துள்ளது. இந்த மிதக்கும் பூங்கா பற்றியும், அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றியும் இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா


இந்த இடத்திற்கு, வாடகைக்கார்களில் அல்லது பேருந்துகள் மூலமாக வரலாம். கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா என்பது இதன் தனிச்சிறப்பு வாய்ந்த பெருமையாகும். இங்குள்ள மக்களின் மொழியில் பும்டிக்கள் என்று அழைக்கப்படும் மிதக்கும் தீவுகள் இந்த ஏரி எங்கும் நிறைந்துள்ளன. இவற்றில் இங்குள்ள மீனவர்கள் வசித்துவருகிறார்கள்.

ideonexus

லோட்டக்

லோட்டக்

சில பும்டிக்கள், மீன் வளர்ப்பதற்கெனவே செயற்கையாக உருவாக்கப்பட்டவை. லோட்டக் ஏரிப்பகுதிக்கு வந்துவிட்டு, செந்திரா தீவினைக் காணாமல் வந்துவிட்டால் உங்கள் பயனம் நிறைவு பெற்றதாக இராது. லோட்டக் ஏரியில் உள்ள செந்திரா தீவானது ஒரு சிறப்பான சிற்றுலாத்தலமாகும். சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து தங்கிச் செல்வதை மிகவும் விரும்புகிறார்கள்.

ianaré sévi

படகு சவாரி

படகு சவாரி

இத்தீவில் படகு சவாரி செய்ய வசதி உள்ளது. இங்கு உள்ள உணவகமும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இவ்வுணவகத்திலிருந்து பார்த்தால், மிதக்கும் தீவுகள், நீல நிறத்திலுள்ள தெளிவான நீர், பத்துப் பன்னிரண்டு படகுகள் எனக் கண்ணைக்கவரும் காட்சிகளைக் கண்டு மகிழலாம். இவ்வேரியில், எண்ணற்ற இடம்பெயரும் பறவைகளும் உள்ளூர்ப்பறவைகளும் தஞ்சம் அடைந்துள்ளன.


Bhaskar Chowdhury

மான்கள்

மான்கள்

தென்பகுதியில், மான்கள் வாழ்கின்றன. பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், தற்போது சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் உள்ளன.

SCooper4711

சுற்றுலா

சுற்றுலா


இம்மாவட்டத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலங்களுள், இப்பூங்காவும் ஒன்று. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவினைச்சுற்றிலும் லோட்டக் ஏரி அமைந்து, கண்களுக்கு விருந்தாகும் காட்சியை அளிக்கிறது. மேலும் இந்த இடத்துக்கு அருகே பல சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. அவையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துவருகின்றன.

Kishalaya Namaram

தனிச்சிறப்பு

தனிச்சிறப்பு

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பூங்காவாகும். உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இதுவேயாகும். கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் ஒருங்கிணைந்த பகுதியாக, கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா விளங்குகிறது. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் தங்கா நகருக்கு அருகில் இது அமைந்துள்ளது. தற்போது இங்கு, எல்டு மான்கள் எனப்படும், கிளைகளுடன் கூடிய கொம்புகளை உடைய சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. இவை நடனமாடும் திறன் படைத்தவை என்பதால், இவற்றால், பிஷ்ணுபூருக்கும், மணிப்பூருக்கும் பெருமை கிடைக்கிறது.

Harvinder Chandigarh

சாங்கை மான்

சாங்கை மான்

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது முன்னதாக சாங்கை மான்களுக்கான சரணாலயமாக இருந்தது. இவை அழிந்துவரும் உயிரினங்கள் என்பதால் இவற்றைப்பாதுகாக்கும் நோக்கத்துடன், இப்பூங்காவானது 1977-ல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் பலவகையான பறவைகளும் காணப்படுகின்றன.

Harvinder Chandigarh

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவின் தனித்தன்மையான சுற்றுச்சூழல் அமைப்பினால் இது மிதக்கிறது. இங்கு உள்ள பெரும்பான்மையான தாவரங்கள், பும்டி என்றழைக்கப்படும் மிதக்கும் தாவரங்களாகும். சுற்றுலாப்பயணிகள், இம்பாலிலிருந்து 53 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இவ்விடத்தை வந்தடையலாம். அக்டோபருக்கும் பிப்ரவரிக்குமிடைப்பட்ட காலத்தில், இங்கு வருவது சிறந்ததாகும்.

Harvinder Chandigarh

பயணம்

பயணம்


மாநிலத் தலைநகரான இம்பாலிலிருந்து, தேசியநெடுஞ்சாலை எண் 150 பிஷ்ணுபூரை இணைக்கிறது. தேசியநெடுஞ்சாலை எண் 150 பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள முக்கியமான அனைத்து நகரங்களையும் கடந்து செல்கிறது

மணிப்பூர் மாநிலம் முழுவதுமே அகலரயில் பாதைகள் இல்லை. ஜிரிபாம் என்னு இடத்தை இணைக்கும் குறுகிய இரயில் பாதை ஒன்றுதான் மாநிலத்திலேயே உள்ள ஒரே ஒரு இரயில் பாதையாகும். இரயில் மூலம் விஷ்ணுபூர் வரவிரும்பும் சுற்றுலாப்பயணிகள், இங்கிருந்து 236 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திமாபூர்(நாகாலாந்து) என்னும் ஊருக்கு இரயில் மூலம் வரவேண்டும். அங்கிருந்து பிஷ்ணுபூருக்கு வருவதற்கு, வாடகைக்கார்கள் நிறைய உள்ளன.

ரயில் புக்கிங்கிற்கு

பிஷ்ணுபூரிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இம்பால் விமான நிலையம்தான் அருகிலுள்ள விமான நிலையமாகும். டெல்லி, குவஹாத்தி, மற்றும் கல்கத்தாவிலிருந்து, இம்பாலுக்கு அனைத்து விமான நிறுவனங்களும் விமானங்களை இயக்குகின்றன. இம்பால் விமான நிலையமானது வாகனங்கள் செல்லக்கூடிய அருமையான தார்ச் சாலைகளால், மாநிலத்தின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருப்பதால், இம்பாலிலிருந்து பிஷ்ணுபூர் செல்வது கடினமல்ல.

விமான புக்கிங்கிற்கு

Sudiptorana

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து ஒரு மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த பிஷ்ணுப்பூர். இது 32கிமீ தொலைவாகும்.

Read more about: travel, lake