» »கோவாவில் நீங்க நினைக்குறது மட்டுமில்ல இவைகளும் இருக்கு.....

கோவாவில் நீங்க நினைக்குறது மட்டுமில்ல இவைகளும் இருக்கு.....

Written By: Sabarish

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள்.

 மாபுஸாவில் வெள்ளிக்கிழமை சந்தை

மாபுஸாவில் வெள்ளிக்கிழமை சந்தை

மாபுஸாவின் வெள்ளிக்கிழமை சந்தையில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருட்கள், வேளாண்மை பொருட்கள், பழவகைகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதுமட்டுமில்லாமல் மாபுஸா நகரம் அதன் பல்வகை கடற்கரை உணவுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. பனாஜி உள்ளிட்ட கோவாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாபுஸாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர வாடகை கார்களின் மூலமும் நீங்கள் மாபுஸா நகரத்தை அடையலாம். ஆனால் ஒரு சில கார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீங்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.

Wikipedia

வாகத்தோர் பீச் உணவுகள்

வாகத்தோர் பீச் உணவுகள்

வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. வாகத்தோர் பீச்சை மாபுஸா நகரிலிருந்து அடையும் வழி முழுக்க வரிசையாக அமைந்திருக்கும் பெரிய பெரிய மாட மாளிகைகளும், போர்த்துகீசிய கட்டிடங்களும் உங்களை அப்படியே சொக்க வைத்து விடும்.

boldsky

 மலிவான மதுவுக்கு

மலிவான மதுவுக்கு

சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது. இந்தக் கடற்கரையிலிருந்து 50 அடி உயர அர்வேலம் நீர்வீழ்ச்சியை நீங்கள் சுலபமாக அடைந்து விடலாம். அதோடு அர்வேலம் அருவியை அடைந்த பின்பு நேரம் இருந்தால் நீங்கள் அதன் அருகிலுள்ள ருத்ரேஷ்வர் கோயிலுக்கும் சென்று வரலாம். சின்குவேரிம் கடற்கரையில் இருக்கக்கூடிய குடில்களில் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவோடு நீங்கள் அருமையான கோவான் உணவையும் சுவைத்து மகிழலாம். இந்தக் கடற்கரையை கேண்டலிம் பீச்சிலிருந்து வாடகை கார்கள் அல்லது ரிக்ஷா மூலமாக சுலபமாக அடைந்து விடலாம்.

Boldsky

 மலிவான ஆடைகளுக்கு

மலிவான ஆடைகளுக்கு


அகுவாடா பீச்சும் சரி, அகுவாடா கோட்டையும் சரி, கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்தில்தான் அமைந்திருக்கின்றன. அகுவாடா கோட்டையை சுற்றியுள்ள வீதிகளில் மாலை நேரம் வந்துவிட்டால் ஏராளமான செகண்ட் ஹெண்ட் மார்கெட்டுகள் புதிதாக முளைக்கத் துவங்கி விடும். இந்த கடைகளில் நீங்கள் பாரம்பரிய ஆடைகள் மற்றும் சில பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கிச் செல்லலாம்

Boldsky

 ஃபெர்ரி சாகச அனுபவத்துக்கு

ஃபெர்ரி சாகச அனுபவத்துக்கு

சாப்டெம் கிராமத்தை சியோலிம் பகுதியிலிருந்து ஃபெர்ரி சேவை மூலம் அடைவது பயணிகளுக்கு சிலிர்ப்பூட்டும் சாகச அனுபவத்தை கொடுக்கும். இதுதவிர சாலை வழியாக சாப்டெம் கிராமத்துக்கு வருவது ஒன்றும் கடினமான காரியமில்லை. குறிப்பாக மும்பை மற்றும் புனே நகரங்களிலிருந்து கோவா வருபவர்கள், வடக்கு கோவாவை அடையும் முன் சாப்டெம் நகரை தான் முதலில் அடைவார்கள்.

Read more about: travel goa summer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்