» » ராமேஸ்வரத்திலிருந்து இவ்வளவு அருகிலிருக்கும் இந்த தீவைப் பற்றி தெரியுமா? #தேடிப்போலாமா? 6

ராமேஸ்வரத்திலிருந்து இவ்வளவு அருகிலிருக்கும் இந்த தீவைப் பற்றி தெரியுமா? #தேடிப்போலாமா? 6

Written By: Udhaya

நம் நேட்டிவ் பிளானட் தமிழ் சுற்றுலா இணையத்தில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பற்றி பார்த்துவருகிறோம். அவற்றில் கோயில்களும், கோட்டைகளும், தீவுகளும், மலைகளும் காடுகளும் என எல்லாம் அடங்கியிருந்தன. இந்தியாவிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் வழி, எப்படி, எப்போது செல்லலாம் என்பதெல்லாம் நம் இணையத்தின் மூலம் தெரிந்துகொண்டு வருகிறோம். பயணப்படுதல் என்பது மிகவும் அலாதியான ஒன்று. அதிலும் தீவுகளுக்கு செல்வதென்றால் அந்த பயணத்தை நாம் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் தானே. சரி இந்த தீவைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? ராமேஸ்வரம் அருகிலுள்ள கச்சத்தீவு.

எங்குள்ளது

எங்குள்ளது


ராமேஸ்வரத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் அமைந்துள்ளது இந்த தீவு.. இந்த தீவு சரித்திர புகழ் வாய்ந்தது. இது இந்தியா இலங்கை இடையே அமைந்துள்ளதாலும், இரு நாடுகளுக்கிடையே அடிக்கடி பிரச்னைகளும் எழும். இந்நிலையில் தான் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. இந்த தீவுக்கு அருகாமையில் நிறைய தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.

அருகிலுள்ள தீவுகள்

அருகிலுள்ள தீவுகள்

ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் நிறைய தீவுகள் காணப்படுகின்றன. நல்லத்தண்ணி தீவு, அணைப்பார் தீவு, வலிமுனைத் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, ஷிங்கிள் தீவு, டெல்ப்ட் தீவு, காக்கரடிவ் தீவு, பழைத் தீவு என நிறையத் தீவுகள் காணப்படுகின்றன. இவைகளுக்கு செல்வது என்பது சற்று சிரமமான காரியம் என்றாலும் முடியாதது என்பதல்ல.,

தனுஷ்கோடி முனை

தனுஷ்கோடி முனை

தனுஷ்கோடி தீவின் கடைசி முனைதான் இந்த தனுஷ்கோடி முனை ஆகும். புகைப்படங்கள் எடுக்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும் இது. 1964'ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ஆழிப் பேரலைகள் தனுஷ்கோடி நகரத்தை மூழ்கடித்தது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைக்கும் இருப்புப்பாதை புயலில் அடித்துச் செல்லப்பட்டது.

அதன்பிறகு மாறியதுதான் நாம் இப்போது பார்க்கும் தனுஷ்கோடி.

 ராமேஸ்வரம் - தனுஷ்கோடி

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி

ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்நகரம் அமைந்திருக்கிறது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து 30 கி.மீ தொலைவில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது. Photo:M.Mutta

வரலாற்று முக்கியத்துவம்:

வரலாற்று முக்கியத்துவம்:

சீதையை கடத்திக்கொண்டு போய் ராவணன் இலங்கையில் சிறைவைத்திடவே அவரை மீட்க வானர சேனையுடன் ராமன் இலங்கையை அடைய தனுஷ்கோடியில் இருந்து கற்களால் கடலின் மேல் பாலம் அமைத்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டதை பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும் இலங்கைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஒரு நிலத்தொடர்பு இருந்ததற்கான அடையாளங்களை செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் நாம் காண முடியும். அதே போல இங்கிருக்கும் ஒருவகை கற்கள் அதிக எடையை தாங்க கூடியதாகவும் அதேசமயம் நீரில் மிதக்கும் தன்மையுடனும் இருக்கின்றன. Photo:Arunkumarbalakrishnan

கருப்பு டிசம்பர்:

கருப்பு டிசம்பர்:

இன்று போல தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத 1964இல் அதிகம் புயல் உருவாகாத தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உருவாகி மணிக்கு 250-350 கி.மீ வேகத்தில் டிசம்பர் மாதம் 22-23 தேதிகளில் தடுஷ்கொடியை கடந்த போது புயலின் கரங்களில் சிக்கிய எதுவுமே மிஞ்சவில்லை. அப்போது மெட்ராஸ் எக்மோரில் இருந்து பாம்பன் நோக்கி வந்து கொண்டிருந்த 115 பயணிகள் பயணித்த ரயில் பெரும் அலையால் மூழ்கடிக்கப்பட்டு ரயிலில் இருந்த அதனை உயிர்களையும் பலி வாங்கியது. Photo:Nitish

கோரத்தாண்டவம்!

கோரத்தாண்டவம்!

அந்த புயலில் மட்டும் ராமேஸ்வரம் தீவில் 1600 பேர் பலியாயினர். அந்த புயலுக்கு பின் தமிழக அரசால் கைவிடப்பட்ட நகரமாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இப்போது சில மீனவ குடுன்ம்பங்களை தவிர யாரும் அங்கே வசிப்பதில்லை. Photo: Flickr

இன்று!

இன்று!

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனுஷ்கோடியையும் பார்க்க வருவதால் ஓரளவு நல்ல சுற்றுலாவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருகின்றன. Photo:Nsmohan

சுவடுகள்!

சுவடுகள்!

அமைதியான நீர்ப்பரப்பை உடைய வங்காள விரிகுடாவும், சீறிப்பாயும் அலைகளை உடைய இந்தியப்பெருங்கடலும் இங்கே கலப்பதை காண முடியும். அதே போல புயலில் சிதலமடைந்த தனுஷ்கோடி சர்ச் மற்றும் பாம்பன் ரயில் நிலையத்தின் எச்சங்களும் இன்றும் இருக்கின்றன. Photo:Roberto and Bianca

 புதுமையான அனுபவம்!

புதுமையான அனுபவம்!

இவை தவிர அற்புதமான காட்சிகளை உடைய கடற்கரையும் இங்கே உண்டு. புதுமையான ஒரு அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் தனுஷ்கோடிக்கு அவசியம் வேண்டும். Photo:Ashwin Kumar

 சூடுபிடித்த சுற்றுலா

சூடுபிடித்த சுற்றுலா

கடந்த 20 ஆண்டுகளாகவே படிப்படியாக வளர்ந்துவிட்ட தனுஷ்கோடி தற்போது தமிழ்நாட்டின் மிகமுக்கிய சுற்றுலாத் தளமாகவிளங்குகிறது. பொழுது போக்கிற்காகவும், இன்பமான பயணத்திற்காகவும் இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடியை மெருகேற்றி வருகின்றனர். Chandra

நெகிழி அரக்கன்

நெகிழி அரக்கன்

உலகையே ஆட்டிப்படைக்கும் நெகிழி அதாவது பிளாஸ்டிக்தான் தனுஷ்கோடியின் முதல் எதிரி என்று சொல்லலாம். பெரும்பாலும், மலைப்பிரதேசங்களில் இருக்கும் பிளாஸ்டிக் கட்டுப்பாடு இங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. TNSE Arumbumozhi vlr

இக்கட்டான தருணங்கள்

இக்கட்டான தருணங்கள்

பிளாஸ்டிக் மட்டுமல்லாது. 100 பேர் வரும் இடத்திற்கு ஆயிரம் பேர் வருகை தருவதால் நிலவியல் அமைப்பும், வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் சச்சரவு, குடிநீர் தேவை, கொஞ்சமும் ஒவ்வாத விசயங்களாகிப் போகின்றன. மேலும் அடிக்கடி நிகழும் கடற்கரை மாற்றங்களும், புவியியல் அமைப்பில் இந்திய தீபகற்பத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நகரம் அழிவதோடு சுற்றியுள்ள ராமேஸ்வரம் போன்றவற்றுக்கும் பேராபத்தை விளைவிக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். rajaraman sundaram

செல்லத்தடை

செல்லத்தடை

கச்சத்தீவு இலங்கை வசம் இருப்பதால் நம்மால் அங்கு செல்லமுடியாது. ஆனால் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் இந்த இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அதுதான் கச்சத்தீவு திருவிழா.

இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவுக்கு குறிப்பிட்ட நபர்கள்தான் செல்லமுடியும் என்பதால், முன்கூட்டியே திட்டமிட்டு அனுமதி பெற்றுதான் செல்லவேண்டும்.

Mayuri Dawande

 கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு திருவிழா

கச்சத்தீவு திருவிழா முடிவு செய்யப்பட்ட பிறகு, இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் இதற்கான அழைப்பிதழை அனுப்புவார். இதைக்கொண்டு ராமேஸ்வரம் பங்கு தந்தை யாரெல்லாம் செல்வது என்பது குறித்து சபையில் ஆலோசனை நடத்துவார் என்கிறார்கள் அப்பகுதியினர்.

 புனித அந்தோனியார்

புனித அந்தோனியார்


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிரச்னைக்குரிய தீவாக இந்த கச்சத்தீவு இருந்தாலும், இரு நாட்டு எல்லைப்புற மக்களும் இதை புனிதமானதாகவே பார்த்துவருகின்றனர். அதற்கு நிச்சயமாக அந்தோணியார் ஆலயம்தான் காரணமாகும். இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்பிரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும்.

இந்த தீவின் மர்மக்கதை தெரியுமா?

இந்த தீவின் மர்மக்கதை தெரியுமா?

1974ம் ஆண்டு வரைக்கும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவு, கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது. இது 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இப்போது இந்த தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை.

இந்த தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்பது இங்குள்ள பலரின் நியாயமான கோரிக்கையாகும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதற்கான பல ஆதாரங்கள் இருந்தும். இன்றுவரை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக இருப்பது, மிக பெரிய மர்மமாகவே பார்க்கப்படுகிறது.

 ராமேஸ்வரம் போகலாம்

ராமேஸ்வரம் போகலாம்

இந்த தீவுக்கு போகமுடியாவிட்டாலும், ராமேஸ்வரம் அருகிலுள்ள பல இடங்களைச் சுற்றலாம். அது மிகவும் அழகான பயணமாக அமையும்.

Read more about: travel, temple