» »கம்பம்தான் கடவுள்... சிலையே இல்லாத பெருமாள் கோயில் #Travel2Temple 5

கம்பம்தான் கடவுள்... சிலையே இல்லாத பெருமாள் கோயில் #Travel2Temple 5

Written By: Udhaya

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில், 250ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைமையான கோயில் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் அம்மன் ஸ்ரீதேவியும் பூதேவியுமாவார்கள். இந்த கோயிலின் தல விருட்சமரம் மகாலிங்கமரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தீர்த்தங்கள் என எதுவும் இல்லை.

வெய்யில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதக்கும் அதிசய கோயில் #Travel2Temple 4

திருவிழா

திருவிழா


சித்திரை மாதம் நடைபெறும் தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அட்சயத் திருதியை அன்று நடைபெறும் சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வு, ஆடி 18பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, திருகார்த்திகை, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, தேர்த்திருவிழா ஆகியன இந்த கோயிலில் நடைபெறும் சிறப்பான விழாக்களாகும்.

நடைதிறப்பு

நடைதிறப்பு


காலை 6.30மணிக்கு திறக்கும் இந்த கோயிலின் நடை மதியம் 12.30 மணி வரையிலும், பின் மாலை 3க்கு திறக்கும் நடை, இரவு 9 வரையிலும் திறந்திருக்கும்.

இந்த கோயிலின் தாயாருக்கு தனிச் சந்நிதி இல்லை. உற்சவர் கலியுக வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாலிக்கிறார்.

வழிபாடு

வழிபாடு

இந்த கோயிலைச் சுற்றிலும் ராட்சத அளவிலான தானியக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்களை தருவதாக வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோயிலில் திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை.

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

குறிப்பிட்ட வருடத்தில் விளைச்சல் நன்றாக இருந்தால் தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். நோயுற்ற கால்நடைகள் பிணி போக்கவும், கால்நடைகளின் முதல் கன்று கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள்.

 புராணக்கதை

புராணக்கதை

250 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் ஒரு மாடு வளர்ப்பவர் இருந்தார். அவருடைய மகனின் பொறுப்பில் மாடுகளை விட்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் மாட்டின் கன்று ஒன்று காணாமல் போய்விட்டதாம். இதை அறிந்து அழுத அவரது மகனின் கனவில் தோன்றிய இறைவன் கன்று இருக்கும் இடத்தைக் கூறியதாம். இதனைத் தொடர்ந்து அந்த கன்று இருந்த இடத்துக்குச் சென்ற மகன், அங்குள்ள ஒரு கம்பத்தில் பால் வருவதைக் கண்டான். இதுதான் தற்போது கோயிலாக கட்டப்பட்டு கும்பிடப்படுகிறது.

சிறப்பு

சிறப்பு

மேற்சொன்ன கதையில் கூறியவாறு அந்த கம்பத்தைதான் தெய்வமாக கருதி வழிபடுகிறார்கள். அந்த கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கிக்கொண்டிருக்கிறார். கம்பம் 12அடி நீளம் கொண்டதாகும். இந்த கோயிலில் வேறு யாருக்கும் சிலைகள் இல்லை. பூசைகளும் இல்லை.

 எப்படி செல்வது?

எப்படி செல்வது?


அரியலூரிலிருந்து ஏறக்குறை 5கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்,. கல்லங்குறிச்சி சாலையில் பதிமூன்று நி்மிட பயணத்தில் கோயிலை அடையலாம்.

வெய்யில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதக்கும் அதிசய கோயில் #Travel2Temple 4

Read more about: travel temple ariyalur

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்