Search
  • Follow NativePlanet
Share
» »144 ஆண்டுகளுக்குப்பின் காவிரியில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா?

144 ஆண்டுகளுக்குப்பின் காவிரியில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா?

144 ஆண்டுகளுக்குப்பின் காவிரியில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா?

ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா ஆகும். இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்..

 காவிரி புஷ்கர விழா

காவிரி புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காவிரி புஷ்கர விழா நடைபெறவுள்ளது.

Dr Ajay Balachandran

 எப்போது

எப்போது

துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது.

Rayabhari

மகா புஷ்கரம்

மகா புஷ்கரம்


144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா மகா புஷ்கரம் விழாவாக கருதப்படும். அவ்வகையிலும், காவிரியில் வரும் 12ஆம் தேதி தொடங்கும் விழா, மகா புஷ்கரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.

Mr.S.Koilraj

 எங்கே?

எங்கே?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காஞ்சி காமகோடி பீடம் சார்பில் விழாக் குழு அமைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Rsrikanth05

 தென்னகத்து கங்கை

தென்னகத்து கங்கை

கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

Ranjithkumar.i

 அடுத்து எப்போது?

அடுத்து எப்போது?

பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பிரபலங்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு இவ்விழா 2161-ம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Arunankapilan

 மயிலாடுதுறையை சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்

மயிலாடுதுறையை சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்

காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் உள்ள எண்ணற்ற மற்றும் குறிப்பிடத்தக்க இந்து கோவில்கள் மயிலாடுதுறையை பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்க வைக்கின்றன. ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில், புனுகீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில், குறுங்கை சிவன் கோவில் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் ஆகியவை தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமுள்ள பக்தர்களையும் கவர்ந்திழுக்கும் கோவில்களாகும். இங்கிருக்கும் 9 கோவில்களும் பக்தர்களுக்கு அருள் தரும் வகையில் 'நவக்கிரக' சுற்றூலவிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

Ssriram mt

 பிற கோயில்கள்

பிற கோயில்கள்

சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெங்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம் மற்றும் கீழபெரும்பள்ளம் ஆகியவை மயிலாடுதுறையின் புனித சுற்றுலா வளையத்திற்குள் வரும் முக்கியமான சுற்றுலாத்தலங்களாகும். மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் சூரியனார் கோவிலை சுற்றிய இந்த புனித சுற்றுலா வளையத்தில் பிற கோவில்களும் கட்டப்பட்டுள்ளன.

EnforcerOffice

 திங்களூர் சந்திரர் கோவில்

திங்களூர் சந்திரர் கோவில்

மயிலாடுதுறையிலிருந்து 40 கிமீ மேற்காக அமைந்துள்ள திங்களூர் சந்திரர் கோவில் பக்தர்களின் மனோரீதியான குறைகளை களையும் இடமாக உள்ளது.

Rsmn

 வைத்தீஸ்வரன் கோவில்

வைத்தீஸ்வரன் கோவில்


மயிலாடுதுறையிலிருந்து 12 கிமீ கிழக்காக இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தான் இராமாயணத்தில் இராவணனால் வதம் செய்யப்பட்ட கழுகு அரசன் ஜடாயு மோட்சமடைந்த இடமாகும். இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் 'ஜடாயு குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமான் பக்தர்களின் நோய்களை தீர்ப்பவராவார்.

வணக்கம்

 சைவத் திருமுறைகள்

சைவத் திருமுறைகள்

மயிலாடுதுறையிலிருந்து 24 கிமீ தொலைவில் கிழக்கு திசையில் இருக்கும் திருவேற்காடு கோவில் 'சைவத் திருமுறைகள்' என்றும் அழைக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் நல்லதாக அமைய வேண்டுமென்பதற்காக மாணவர்கள் இக்கோவிலுக்கு வருவது இதன் சிறப்பு!

Ssriram mt

 குரு தேவர்

குரு தேவர்

குரு தேவருக்காக, மயிலாடுதுறையிலிருந்து 40 கிமீ தொலைவில் ஆலங்குடியிலுள்ள கோவிலில் குரு தேவர் பழைய வழக்கப்படி சிலையாக வைக்கப்படாமல் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். மயிலாடுதுறைக்கு 20 கிமீ தொலைவில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள கோவில் காஞ்சனூர் சுக்கிரன் கோவிலாகும். சுக்கிரரின் அருள் பெறுபவர்களை செல்வமும், வளமும் சூழ்ந்திருக்குமென்பது பொதுவான நம்பிக்கை!

Rsmn

 திருநள்ளாறு

திருநள்ளாறு

மயிலாடுதுறையிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருநள்ளாறு சனி பகவானுக்காக முழுமையாக கட்டப்பட்டுள்ள கோவில்களில் ஒன்றாகும். நள மகாராஜவைப் பிடித்துக் கொண்டு பெரும் தீங்கு செய்து வந்த சனியின் கொடுமைகளிலிருந்து அவரை விடுவித்ததன் காரணத்தால் நள + ஆறு = திருநள்ளாறு என்று இரு வார்த்தைகளைக் கொண்டு இந்நகரத்தின் பெயர் வைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள நள தீர்த்தத்தில் மூழ்கி எழுவதன் மூலம் சனி பகவானின் கொடுமையான தீங்குகளும் மற்றும் முன் ஜென்ம பாவங்களும் விலகும் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Aravind Sivaraj

 திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம்

கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானுக்கான கோவிலாகும். எனினும், ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் நடத்தப்படும் பாலாபிஷேகத்தால் ராகு கடவுளும் புகழ் பெற்றவராக இக்கோவிலில் உள்ளார். இதில் கவனிக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெண்மை நிற பாலை ராகுவின் மேல் ஊற்றும் போது, அது நீல நிறமாக மாறி அவருடைய உடலை அரவணைத்துச் செல்லும், பின் தரையைத் தொடும் போது மீண்டும் அதே வெண்மை நிறத்தைப் பெறுவதுதான்!

 நவகிரக சுற்றுலா

நவகிரக சுற்றுலா

பக்தர்கள் நவகிரக சுற்றுலாவின் போது இந்த ஒன்பது கிரக / நட்சத்திர கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டுவர். இங்கு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், இந்த நவகிரகங்களை வேண்டுவதால் உண்மையிலேயே வளமான, நலமான மற்றும் நெடிய வாழ்க்கை கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

VasuVR

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X