» »சிந்துசமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் - மத்திய அரசை ஆட்டிப்பார்த்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருமா?

சிந்துசமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ் - மத்திய அரசை ஆட்டிப்பார்த்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருமா?

Written By: Udhaya

சிந்துவெளி நாகரிகம் என்பது உலகின் தொன்மை வாய்ந்த நாடுகளாக கருதப்படும் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழையான நாகரிகங்களுக்கு ஒப்பான தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை ஒட்டித் தழைத்தோங்கியிருந்த இந்த சிந்துவெளி நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், மிகப்பெரிய சதி ஒன்றினால் அழிந்துபோனதாக தெரியவருகிறது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்று சிந்து சமவெளியில் பேசப்பட்டது தமிழ் தான் என்கிற செய்தி வந்துள்ளது.

கீழடி எங்குள்ளது

கீழடி எங்குள்ளது


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது கீழடி எனும் ஊர். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். மதுரையிலிருந்து 12கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி, தமிழர்களின் ஆதிகால வாழ்க்கையைப் பற்றி இந்த காலத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Ssriram mt

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி

இந்திய தொல்லியல் துறை சார்பாக ஆய்வு செய்யப்பட்ட இந்த இடம் தமிழகத்திலேயே மிகப் பெரிய அகழ்வு ஆராய்ச்சி செய்யும் இடமாகும். இங்கு 40க்கும் அதிகமான குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் பல பொருள்கள் கிடைக்கப்பெற்றன.

 என்னென்ன

என்னென்ன

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டைகள், சதுரங்ககாய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் கருவி போன்றவை இங்கு கிடைத்தன. வீடுகள் சுடு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஓடுகள் வேயப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை

வீடுகளுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள், கழிவறைகள், குளியலறைகள் என அந்த காலத்திலேயே தமிழன் சிறந்துவிளங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிகப்பு நிறங்களிலான 1000க்கும் அதிகமான எடை கொண்ட மண் ஓடுகள் இந்த ஆராய்ச்சிகளின்போது கிடைத்துள்ளன.

சதி யார் செய்தது

சதி யார் செய்தது

இந்நிலையில்தான் கீழடி ஆய்வாராய்ச்சியை திடீரென்று நிறுத்திவிட்டது மத்திய அரசு. இது எதனால் எனும் கேள்வி இருந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழர்களில் சிலர் இது மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு என்று கூறுகின்றனர். ஏற்கனவே தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் நல்லது செய்யவேக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது மத்திய அரசு. இதில் தமிழர்கள்தான் பூர்வகுடிகள் என்று தெரிந்துவிட்டால் என்னசெய்வது.. அதனால்தான் இப்படி செய்கிறது என்று அவர்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்


இதேபோல் கோவை மாவட்டம், ஆனைமலை, மதுரை கோவலன் பொட்டல், விருதுநகர் திருத்தங்கல், ராமநாதபுரம் தேரிருவேலி, கொடுமணல், மாங்குடி என நிறைய இடங்களில் இந்த ஆய்வு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் சிந்துசமவெளி குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சிந்து சமவெளியில் மக்கள் பேச்சுப்புழக்கத்தில் இருந்தது தமிழ் மொழி என்பது தெரியவந்துள்ளது.

Ssriram mt

திருப்புவனம் புஷ்பனேஷ்வரர் கோயில்

திருப்புவனம் புஷ்பனேஷ்வரர் கோயில்

அருள்மிக புஷ்பவனேஸ்வரர் கோயில் திருப்புவனத்தில் அமைந்துள்ளது. இதன் மூலவர் பூவணநாதர் ஆவார். நாயகி சவுந்தரநாயகி, தலவிருட்சம் பலா ஆகும். இந்த கோயில் 1000 முதல் 2000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக தெரிகிறது. புராணகாலத்தில் திருப்பூவணம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் திருப்புவனம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.

TRYPPN

தலச்சிறப்பு

தலச்சிறப்பு

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவிளையால் புராணத்தின்படி, ரசவாதம் செய்த படலம். காலையில் 6 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 8 மணிக்கு அடைக்கப்படுகிறது இடையில் 11 மணி முதல் 4 மணி வரையிலும் அடைக்கப்பட்டிருக்கும். இது பாண்டிய மன்னர்கள் கட்டிய கோயில் ஆகும். இது அவர்களின் பதின்மூன்றாவது கோயில்.

மற்ற தெய்வங்கள்

மற்ற தெய்வங்கள்

இந்த தலத்தில் கோபுர விநாயகர்ஸ குடைவரை விநாயகர், அனுமதி பெற்றுக்காரியத்தில் இறங்க அனுக்ஞை விநாயகர், மகாகணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் விநாயகர், சூரியன் வழிபட்ட பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் இந்த கோயிலில் இருக்கிறார்கள்.

குறிப்பு: இந்த கோயில் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் புகைப்படத்துடன் தகவல்களையும் எங்களுக்கு அனுப்பி, நமது தளத்தில் அந்த தகவலை இடம்பெறச்செய்யலாம்.

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சிந்துசமவெளியில் இருக்கும் எழுத்துக்களும், கீழடியில் அமைந்துள்ள இந்த கோயிலில் காணப்படும் எழுத்துக்களையும் சேர்த்துபார்க்கும்போது ஒத்துப்போகிறது என்பதே பிரபல சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸின் வாதம். இதன்மூலம் சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த அனைத்து எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள்தான் என்கிறார் இவர். எல்லாம் சரி.. மத்திய அரசு எங்கே இதையெல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போகிறது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்....

M.Imran

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்