» »கஞ்சனூருக்கு புண்ணிய பயணம் செல்வோம்!

கஞ்சனூருக்கு புண்ணிய பயணம் செல்வோம்!

Posted By: Udhaya

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர ஸ்வாமி கோயிலுக்காக பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றது.

அக்னீஸ்வரர் கோவில்

அக்னீஸ்வரர் கோவில்

இந்த அக்னீஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் வெள்ளி, அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய ஸ்தலமாகும். காவிரி டெல்டா மாகானத்தில் இருக்கும் புகழ்பெற்ற 9 நவக்கிரக கோவில்களுள் இதுவும் ஒன்று.

வரலாறு

வரலாறு

கஞ்சனூரின் வரலாறு அக்னீஸ்வர ஸ்வாமி கோவிலில் சிவபெருமானே வெள்ளி கிரகத்தை குறித்து சுருக்கமான சொற்பொழிவு அளிப்பதாக கூறுகின்றனர். இப்புனிதக்கோவில் சூரியனார் கோவிலிக்கு அருகே இருக்கிறது. இது நவக்கிரக கோவிலாகவும்/ஸ்தலமாகவும் இருக்கிறது.

கோபுரங்கள்

கோபுரங்கள்

தெற்கு கதவு வழியாக பக்தர்கள் இந்த கோவிலுக்குள் நுழைய வேண்டும். சிவன் மற்றும் பார்வதி தெய்வங்களின் சிலைகள் வலது பக்கத்திலும், விநாயகர் சிலை இடது பக்கத்திலும் வைக்கப்பட்டு இருக்கின்றன. கிழக்கு திசையை பார்த்தபடி இருக்கும் 5 அடுக்கு கோபுரங்களோடு இருக்கும் இந்த கோவிலின் கட்டமைப்பு கவர்ச்சிகரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றது.

அருகாமையில்

அருகாமையில்


கஞ்சனூரிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கஞ்சனூர் ஒரு நவக்கிரக ஸ்தலம். அதோடு திருநல்லார் (சனீஸ்வரர்), கஞ்சனூர் (வெள்ளி அல்லது சுக்ர தேவன்), திருவேங்கடு (புதன் அல்லது புதனீஸ்வரர்), சூரியனார் கோவில் (சூரியன் அல்லது சூரிய தேவன்), திங்களூர் (நிலா அல்லது சந்திர தேவன்), கீழ்பெரும்பள்ளம் (கேது தேவன்) ஆகிய 8 நவக்கிரக ஸ்தலங்களும் கஞ்சனூருக்கு அருகாமையிலேயே இருக்கின்றன.

கஞ்சனூரை அடைவது எப்படி

கஞ்சனூரை அடைவது எப்படி


கும்பகோணம் ரயில் நிலையம் மற்றும் திருச்சி சந்திப்பு ஆகியவை கஞ்சனூருக்கு அருகே இருக்கும் முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். கும்பகோணம் அல்லது திருச்சியில் இருந்து பேருந்துகள் அல்லது சொகுசு வாகனங்கள் மூலமாக கஞ்சனூரை அடையலாம். கஞ்சனூர் வானிலை கஞ்சனூரின் வானிலை ஆண்டு முழுவதும் இனிமையாகவும், கதகதப்பாகவும் இருக்கிறது.

 காவிரி

காவிரி


காவிரி நதியின் வடக்கு கரையோரத்தில் கஞ்சனூரின் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது கும்பகோணத்தில் இருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. இக்கோவில் வெள்ளி கிரத்திற்கு (சுக்ர தேவன்) அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

கற்பகாம்பாள்

கற்பகாம்பாள்

இது 9 நவக்கிரக கோவில்களில் 6வது நவக்கிரக ஸ்தலம் ஆகும். இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவனும் பார்வதியும். இதில் சிவபெருமான் இங்கே அக்னீஸ்வரர் வடிவத்திலும், பார்வதி கற்பகாம்பாள் வடிவத்திலும் பக்தர்களால் வணங்கப்படுகிறார்கள்.

பரிகாரங்கள்

பரிகாரங்கள்

ஒருவருடைய ஜாதகத்தின் காரணமாக சுக்கிரன் அல்லது வெள்ளி கிரகம் அவர்களுக்கு தீங்கு இழைக்காதபடி, பரிகாரங்கள் செய்வதற்காக இங்கே திரளான மக்கள் கூடுகின்றார்கள். சிவனும் பார்வதியும் இவ்விடத்தில் திருமணம் செய்வதை பிரம்மா தன் கனவில் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்விடத்தில் அக்னீ சிவபெருமானை குறிப்பதால், அக்னீஸ்வரர் என்கிற பெயர் உருவானது. பிரம்மதேவன் வழிபட்ட பிரம்ம லிங்கம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

சிவபெருமான்

சிவபெருமான்

சிவபெருமானே இங்கு சுக்ரனாக இருப்பதாக கூறப்படுவதால், இங்கே சுக்ரனுக்கு என்று ஒரு தனிப்பட்ட சந்நிதி இல்லை. அக்னீஸ்வரர் கோவிலில் 2 பிரகாரங்கள் இருக்கின்றன. காளிகாமர் மற்றும் மனகஞ்சரரர் ஆகியவை இவ்விடத்தின் மற்ற தளங்கள் ஆகும். விஜயநகர் மற்றும் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளையும், சிவகாமி மற்றும் நடராஜர் சிலைகளையும் இக்கோவிலில் காணலாம். நடராஜர் சபாவை முக்தி மண்டபம் என்று அழைப்பார்கள்.

Read more about: travel, temple