» »கங்கையே வந்து நீராடும் நதி எது தெரியுமா?

கங்கையே வந்து நீராடும் நதி எது தெரியுமா?

Written By: Udhaya

நர்மதா படித்துறை என்பது 18 ஆம் நூற்றாண்டில், கட்டப்பட்ட பழமையான ஒரு இடமாகும். இது ஹோல்கர் மாநிலத்தின் அப்போதைய ஆட்சியாளராக விளங்கிய மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த இடத்துக்கு நாம் பயணம் செய்து அங்குள்ள சுற்றுலா அம்சங்களைக் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

கங்கையே குளிக்கும் நதி

கங்கையே குளிக்கும் நதி

நர்மதா நதி இந்தியாவின் புண்ணிய தீர்த்தங்களுள் மிகவும் புனிதமானதாக நம்பப்படுகிறது. எப்போது கங்கை தான் அசுத்தமாக இருப்பதாக உணர்கிறாளோ அப்போதெல்லாம், இரவு நேரத்தில் ஒரு கறுப்புப் பசுவின் வடிவெடுத்து, நர்மதா நதியில் வந்து நீராடி தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இங்கு சுற்றிலும் நீர் இருப்பதால் மிகவும் பசுமையான தோற்றத்துடன் காணப்படுகிறது. இது சுற்றுலாவுக்கு ஏற்ற தரமான இடமாகும்.
Dchandresh

அலைமோதும் கூட்டம்

அலைமோதும் கூட்டம்

நர்மதா படித்துறை எப்போதும் இங்கு புனித நீராட வரும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படும். இப்படித்துறையிலிருந்து தெரியும் நதியின் தோற்றம் காணக் கண்கொள்ளாத காட்சியாகும். இந்த நதியை காண மட்டுமல்லாது ஆன்மீக காரணங்களுக்காகவும் இந்த இடத்துக்கு மக்கள் வருகை தருகின்றனர். பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த இடத்துக்கு சென்று வந்தால் புண்ணியமாம்.
Dchandresh

நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த நதி

நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த நதி

இந்நதி மாநிலம் முழுவதும் தன் இயற்கை கொடையை இட்டுச் செல்வதனால் இது மத்தியப்பிரதேச மாநில மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ளது. தனித்தன்மையோடு மிளிரும் நர்மதா படித்துறை, மஹேஷ்வரின் புனிதமான பகுதியாக தொன்று தொட்டே அறியப்பட்டு வருகிறது. மஹேஸ்வரின் புனிதப்பகுதி என்பதால் அவரை வணங்குவோரின் விருப்பத்துக்கு உரிய இடமாகவும் உள்ளது.

Rbsrajput

ஆன்மீகம்

ஆன்மீகம்


தீவிர பக்தி மற்றும் தூய்மையின் அடையாளமாகப் போற்றப்படும் நர்மதா நதி தீர்த்த யாத்திரையை உத்தேசித்து இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் மலைத்துப் போகின்றனர். இங்கு ஆன்மீகக் காரணங்களுக்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவுக்காகவும் நிறைய பேர் வருகை தருகின்றனர்.

Ssriram mt

அருகாமை இடங்கள்

அருகாமை இடங்கள்


நர்மதா படித்துறைக்கு அருகாமையில் பல கோயில்கள் இருக்கின்றன. மேலும் இந்த ஆற்றின் கரையோரத்தில் நிறைய சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. முக்கியமாக ராம் மந்திர், நர்மதா காட் சிவ்னி, மாங்க்ரோல் நர்மதா காட், அசிகன்ஞ் நர்மதா காட் என குறிப்பிட்ட இடங்கள் இருக்கின்றன.

அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்

மகேஸ்வருக்கு அருகில் ஹோல்கா கோட்டை1 கிமீ தொலைவிலும், மந்த்லேஸ்வர் 9கிமீ தொலைவிலும், ஜலேஸ்வர் 1 கிமீ தொலைவிலும், ராஜ்வாடா 1 கிமீ தொலைவிலும், கார்கன் 39 கிமீ தொலைவிலும், பந்திரிநாத் கோயில் மிக அருகிலும், அகில்யேஸ்வர் கோயில், ஓம்கரேஸ்வர் 59 கிமீ தொலைவிலும் , கஸ்ராவாட் 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

உணவும் இருப்பிடமும்

உணவும் இருப்பிடமும்


இந்த பகுதிக்கு அருகில் தங்குவதற்கும், உணவுக்காகவும் விடுதிகள் அதிகம் இல்லை. ஸ்நாக்ஸ் விடுதிகளும், கடைகளும் காணப்படுகின்றன என்றாலும் வசதியாக இருக்க விரும்புவோம் அருகிலுள்ள மகேஸ்வருக்கு செல்வது சிறந்தது. மேலும் இங்கு எளிதில் உங்கள் தேவைகள் தீர்க்கப்படும்.

விமானம் மூலமாக எப்படி செல்வது?

விமானம் மூலமாக எப்படி செல்வது?

விமானம் மூலமாக செல்ல விரும்புபவர்கள் சென்னையிலிருந்து இந்தூருக்கு பயணிக்கவேண்டும். அல்லது கோயம்புத்தூரிலிருந்தும் பயணிக்க முடியும். அங்கிருந்து வாடகை வண்டிகள் மூலமாக மகேஸ்வரை அடையலாம். மகேஸ்வரிலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள படித்துறை.

அருகாமை விமான நிலையம் - தேவி அகில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் - மகேஸ்வரிலிருந்து 65கிமீ தொலைவு

ரயில் மூலமாக எப்படி அடைவது

ரயில் மூலமாக எப்படி அடைவது


சென்னையிலிருந்து இந்தூர் ரயில் வழியாக 1489கிமீ ஆகும். மேலும் அங்கிருந்து 90கிமீ தொலைவில் மகேஸ்வர் அமைந்துள்ளது. இல்லையேல்

சென்னை - உஜ்ஜைன் - மகேஸ்வர்

சென்னை - புசாவல் - மகேஸ்வர்

சென்னை - ஜல்கான் - மகேஸ்வர்

ஆகிய வழித்தடங்களிலும் பயணிக்கலாம். மேலும் ரயில் மற்றும் மற்ற வசதிகள் உங்கள் திட்டமிடலைப் பொறுத்ததாகும்.

பேருந்து மூலமாக

பேருந்து மூலமாக

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலமாக நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்தில் பயணம் செய்வதென்பது மிகவும் துரதிஷ்டவசமானது அதுவும் நம் நாட்டில் வெகுதூர பேருந்து பயணம் அறிவுரைக்கதக்கதல்ல. ஒருவேளை பேருந்தில் பயணிக்க திட்டமிட்டால், உங்களுக்கு நெருக்கமானவர்களின் பரிந்துரைகளையும் கேட்டு நல்ல நிறுவன பேருந்தில் பயணிக்கவும்.

சுயவாகனம்

சுயவாகனம்

சுயவாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் தூரம். கிட்டத்தட்ட 1499கிமீ தூரம் பயணிக்கவேண்டியிருப்பதால் இடையில் மற்ற இடங்களுக்கு திட்டமிடாமல் பயணிப்பது சிறந்ததல்ல. இந்த வழித்தடத்தில் இருக்கும் மற்ற இடங்கள் என்னென்ன, அதன் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த முகவரியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் பதிவுகளுக்கு

மேலும் பதிவுகளுக்கு


புதிய பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் மிதக்கும் சிலைகளை கொண்ட இடம் எது தெரியுமா?

தமிழர் திருநாள் சிறப்பு: எந்தெந்த இடங்களில் எங்கெங்கு ஷாப்பிங் செய்யலாம்?

தமிழ்நாட்டின் கடற்கரைகளுக்கு ஒரு பயணம்!

விஜய்கர் கோட்டைக்கு ஒரு வியப்பூட்டும் பயணம் போலாமா?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்