Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு முறை சென்றால் ஒட்டுமொத்த பிணியையும் போக்கும் தலம் இது!

ஒரு முறை சென்றால் ஒட்டுமொத்த பிணியையும் போக்கும் தலம் இது!

ஒரு முறை சென்றால் ஒட்டுமொத்த பிணியையும் போக்கும் தலம் இது!

By Udhaya

இஸ்லாமிய தலம்தான் என்றாலும், அனைத்து மதத்தவர்களும் செல்லும் இடம் இது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கா என்றவுடனே உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் நாகூர் தர்கா.... இந்த தர்காவுக்கு சென்று வந்தால் நோயிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இதனாலேயே சாதி, சமயம் மறந்து இந்த தர்காவுக்கு செல்கின்றனர் பக்தர்கள்.

பயண வசதிகள்

பயண வசதிகள்

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலிருந்து மிகச்சுலபமாக நாகூர் நகரத்துக்கு வரலாம். நாகூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு ரயில் சேவைகள் உள்ளன. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் நாகூருக்கு அருகிலுள்ள முக்கிய விமான நிலையங்களாகும். பருவநிலை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நாகூர் கடற்கரைப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது.

sundaramrajaraman

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் அமைந்திருக்கிறது. வங்காள விரிகுடாவை ஒட்டிய கடற்கரை நகரமான இது நாகப்பட்டிணத்திற்கு வடக்கே 4 கி.மீ தூரத்திலும் காரைக்காலுக்கு தெற்கே 16 கி.மீ தூரத்திலும் உள்ளது. சென்னையிலிருந்து நாகப்பட்டினம் செல்ல பல வசதிகள் இருக்கின்றன. நாகப்பட்டினம் பகுதிக்கு முன்னதாகவே இந்த தர்கா அமைந்துள்ளது.

Ssriram mt

யுவான்சுவாங்

யுவான்சுவாங்

வரலாற்றுக்காலத்தில் இந்த ஊரில் ஒரு புத்த விஹாரம் இருந்ததாக சீனப்பயணி யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார். 690 முதல் 728ம் ஆண்டு வரை இந்த ஊர் ராஜசிம்மர் எனும் பல்லவ மன்னரால் ஆளப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது பல்லவர்கள் புத்த சமயத்தைப் பின்பற்றி இருக்கலாம் என்று சில சான்றுகள் கூறுகின்றன. மேலும் அவர்கள் இந்துகோயில்கள் பல கட்டியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

sundaramrajaraman

நாகூருக்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்

நாகூருக்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்

நாகூரில் உள்ள ஒரு தர்க்கா இந்த ஊரின் முக்கிய அடையாளமாகவும் பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக மையமாகவும் திகழ்கிறது. இந்த இஸ்லாமிய தர்க்காவானது மீரான் சாஹிப் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாத்ஷா எனும் யோகிக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், ஃபாத்திமா ஜாமியா மஸ்ஜித் மற்றும் தீருபள்ளி மஸ்ஜித் ஆகியன நாகூரில் உள்ள இதர முக்கியமான மசூதி பள்ளிவாசல்களாகும்.

Raja1111

பட்டிணஞ்சேரி

பட்டிணஞ்சேரி


நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நாகூர் பட்டிணஞ்சேரி எனும் மீனவ கிராமத்தில் சீராளம்மன் கோயில் எனும் முக்கியமான கோயிலும் உள்ளது. சீராளம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் விமரிசையான உற்சவம் 10 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நாகூரில் கந்தூரி திருவிழாவும் விசேஷமாக நடத்தப்பட்டு வருகிறது.
Ssriram mt

மற்ற கோயில்கள்

மற்ற கோயில்கள்

மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் ஆகியனவும் நாகூரில் அமைந்திருக்கின்றன. இப்படி பல கோயில்கள் மற்றும் மசூதிகள் மட்டுமல்லாமல் இங்குள்ள கடற்கரைப்பகுதியும் ஒரு முக்கியமான சுற்றுலாப்பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது. வருடமுழுதும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாகூருக்கு வருகை தருகின்றனர்.

Ssriram mt

நாகூர் கடற்கரை

நாகூர் கடற்கரை

தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இந்த நாகூர் கடற்கரை அமைந்துள்ளது. நாகூர் நகரம் இந்த கடற்கரைக்காகவே பிரசித்தி பெற்றிருக்கிறது. உள்ளூர் நகராட்சியால் இந்த கடற்கரை வெகு அழகாக பரமாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் இந்த கடற்கரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு உள்ளூர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் பொழுதுபோக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. குதிரைச்சவாரி போன்ற பொழுது அம்சங்களும் இங்கு உள்ளன. இந்த கடற்கரையிலிருந்து கடலை பார்த்து ரசிக்கும் அனுபவம் நிச்சயம் மனதுக்கு உவகையூட்டும் என்பதில் ஐயமே இல்லை.

Ssriram mt

Read more about: travel temple tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X