» »பாரதீப் - துறைமுக நகரத்துக்குள் ஒரு பயணம்

பாரதீப் - துறைமுக நகரத்துக்குள் ஒரு பயணம்

Posted By: Udhaya

பாரதீப் ஒடிசா மாநிலத்திதின் ஜகட்ஸ்ஹிங்புர் மாவட்டத்தில் உள்ள விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். பாரதீப் நகரம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கி.மீ தொலைவிலும், கட்டாக் ரயில் நிலையத்தில் இருந்து 95 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பாரதீப் துறைமுகம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள துறைமுக நகரங்களில் மிக முக்கியமானது. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள பழமையான துறைமுகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. பாரதீப் நகரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இங்கு எஃகு ஆலைகள், அலுமினா சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோகெமிக்கல் வளாகம், அனல் மின் நிலையங்கள் ஆகிய அனைத்தும் இந்த இடத்தில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற தொழில்கள் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ள அனைவருக்கும் பாரதீப் சுற்றுலா நிறைய வாய்ப்புகளை வழங்குகின்றது. இங்குள்ள் இயற்கை அழகு, பிரம்மாண்டமான கடற்கரை, வெப்பமண்டல சூரியன், பச்சை காடுகள், இயற்கை நீரோடைகள் ஆகிய அனைத்தும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இயற்கையுடன் சல்லாபத்தில் ஈடுபடுவதற்கு உண்டான ஒரு உன்னத வாய்ப்பை வழங்குகின்றது.

 பாரதீப் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

பாரதீப் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இந்த இடம் ஒரு குடும்பச் சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த இடமாகும். இங்கு எவ்வளவு நேரம் வேண்டுமானலும் நீந்தி மகிழலாம் அல்லது பளபளக்கும் கடற்கரை நீரில் கால் நனைத்து விளையாடலாம்.

பார்வையாளர்கள் மேலும் சுத்தமான மற்றும் பசுமையான ஸ்ம்ருதி உதயன் பூங்காவில் தங்களுடைய நேரத்தை கழிக்கலாம். இந்த பூங்காவானது , 1990 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட புயலில் உயிரிழந்த பாரதீப் மக்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள இசை நீரூற்று ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.

காஹிர்மாதா கடற்கரை அரிய வகை வெள்ளை முதலைகளின் இருப்பிடமாக விளங்குகின்றது. இந்தக் கடற்கரை மேலும் வெள்ளை மானிட்டர் பல்லிகள், கடல் ஆமைகள், இடம் பெயரும் பறவைகள் மற்றும் மான் போன்றவைகளுக்கு இருப்பிடமகவும் திகழ்கின்றது. இங்குள்ள பிஹிடர்கனிக தேசிய பூங்கா என்பது ஒரு சதுப்பு நில காடாகும். இங்கு நதிகள் மற்றும் ஓடைகள் குறுக்கும் நெடுக்குமான பாதைகளாக உள்ளன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மனிதன், இயற்கை மற்றும் விலங்குகள் நல்லிணக்கம் வாழ்ந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கு பின் நோக்கி செல்லலாம். இங்குள்ள பாரதீப் அக்வாரியத்தில் சுமார் 28 தொட்டிகள் இருக்கின்றன. அவற்றில் பல்வேறு அரிய வகை மீன்கள் உள்ளன. அவற்றை காணும் எந்த ஒரு சுற்றுலா பயணியும் அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்து விடுவார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ஆண்டு தோறும் நடக்கும் பாரதீப் ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தை கண்டிப்பாக கண்டுகளிக்க வேண்டும். அந்த தோரோட்டத்தில் ஜகன்நாதரின் தேரை பல்வேறு ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பங்கேற்பது ஒரு அரிய காட்சியாகும். அந்த தேரோட்டத்தில் நாம் அனைவரும் ஒரு உண்மையான மதச்சார்பற்ற இந்தியாவை பார்க்க முடியும்.

பாரதீப் சுற்றுலாவில் சுற்றுலா லைட் ஹவுஸ் மற்றும் நேரு பங்களா போன்றவை மிக முக்கிய இடம் வகிக்கின்றன. அவைகல் பாரதீப்பில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளன. இங்குள்ள அனுமன் கோவில் பாரதீப்ப்ன் பல்வேறு சிறப்புகளில் ஒன்றாக திகழ்கின்றது.

Subas Chandra Rout

நாவில் நீர் சுரக்கச் செய்யும் கடல் உணவுகள்!

நாவில் நீர் சுரக்கச் செய்யும் கடல் உணவுகள்!

கடல் உணவை நீங்கள் நாளின் எந்த நேரத்திலும் சுவைத்து மகிழலாம். இங்கு சிறந்த மீன் மற்றும் இறால்கள் கிடைக்கின்றன. பாரதீப் லஸ்ஸி அல்லது கவெஸ்கர் லஸ்ஸி என்பது தேங்காயிலிருந்து தயாரிக்க்கப்படும் ஒரு முக்கிய பானம் ஆகும். மதுபான் சந்தை கட்டிடத்தில் உள்ள தில்லி தர்பாரில் ஒரு பிளேட் பிரியாணி வாங்கிச் சுவைத்தீர்கள் எனில் நீங்கள் கண்டிப்பாக இன்னும் அதிகமாக கேட்பீர்கள். இங்கு பிரபல பிரயாணி 99 அதிக அளவில் விற்பனை ஆகின்றன.

Frits Hoogesteger

 சிறந்த பருவம்

சிறந்த பருவம்

பாரதீப்பிற்கு சுற்றுலா செல்ல நவம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமே மிகவும் சிறந்தது. இந்த மாதங்களில் பாரதீப்பின் வானிலை மிகவும் குளிர்ந்து மற்றும் இதமாக காணப்படுவதால் இந்தப் பருவத்தில் பாரதீப்பிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். எனினும் இந்தப் பருவத்தில் இரவு நேரங்களில் அதிக குளிர் நிலவுவதால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்களுடன் கம்பளி ஆடைகளை உடன் எடுத்துச் செல்வது நல்லது.

 பாரதீப்பை எவ்வாறு அடைவது?

பாரதீப்பை எவ்வாறு அடைவது?

நீங்கள் புவனேஸ்வர் விமான நிலையம் அல்லது கட்டாக் ரயில் நிலையத்தை அடைந்தால் பாரதீப்பை அடைவது ஒரு விஷயமே இல்லை. அங்கிருந்து நீங்கள் பேருந்தை பயன்படுத்தி எளிதாக பாரதீப்பை அடையலாம். பாரதீப் தேசிய நெடுங்சாலை 5A மூலம் ஒடிசாவின் அனைத்து முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்ட்டட்டுள்ளது. மேலும் ரயில் மூலமாகவும் பாரதீப் நன்கு இணைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் புவனேஸ்வர் அல்லது கட்டாக் வழியாகவே பாரதீப் செல்ல விரும்புகின்றார்கள். மார்ச் மற்றும் நவம்பருக்கு இடைப்பட்ட பருவமே இங்கு சுற்றுலா வருவதற்கு சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

விமானம் மூலம்.

பாரதீப்பிற்கு அருகில் புவனேஸ்வர், பிஜு பட்நாயக் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் பாரதீப்பில் இருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பாரதீப்பை அடைய அரசு மற்றும் தனியார் பேருந்துள் அல்லது டாக்சிகள் உள்ளன.

ரயில் மூலம்.

பாரதீப்பில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் புவனேஸ்வர் அல்லது கட்டாக் மூலமாகவே இந்த இடத்திற்கு வர விரும்புகிறார்கள். கட்டாக்கில் உள்ள ரயில் நிலையம் பாரதீப்பில் இருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கட்டாக்கில் இருந்து பாரதீப்பிற்கு சீரான இடைவேளியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே கட்டாக்கில் இருந்து பாரதீப்பை அடைவது மிகவும் எளிது.

சாலைமூலம்

பாரதீப்பை சாலை போக்குவரத்து மூலம் எளிதாக அடையலாம். தேசிய நெடுங்சாலை 5 பாரதீப்பை ஒரிசாசின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றது. இதன் விளைவாக, பாரதீப்பை ஒரிசாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் எளிதாக அணுகலாம். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து இந்த இடத்திற்கு செல்ல வாடகை கார்கள் மற்றும் பஸ்கள் எளிதாக கிடைக்கின்றன.

Read more about: travel port

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்