» »ஆறு தலைமுறை சாபம்! அடங்காத நாதினி - இது பத்மாவதி பார்ட் 2 #தேடிப்போலாமா 7

ஆறு தலைமுறை சாபம்! அடங்காத நாதினி - இது பத்மாவதி பார்ட் 2 #தேடிப்போலாமா 7

Written By: Udhaya

மேவார் நாட்டின் அரசனான மகரானா ஜவ்ஹான் சிங், கயிறு மேல் நடக்கும் பெண் ஒருவரிடம் அந்நாட்டின் ஒரு கிராமத்தில் ஏரியின் இருபுறங்களிலும் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடந்தால் தன் நாட்டில் பாதியை எழுதி தருவதாக கூறியுள்ளார். இதனை ஒப்புக்கொண்ட அந்த பெண் கயிற்றின் மீதேறி ஒருபுறமிருந்து மறுபுறம் நடக்க தொடங்கினாள். சதியின் காரணமாக ஏரிக்குள் விழுந்து இறந்துவிட்டாள். இறப்பதற்கு முன் அவள் விட்ட சாபம் அந்த ராஜ வம்சத்தினரையே நிலைகுலையச் செய்தது. அந்த சாபம் என்ன அது எந்த இடம் அந்த இடத்தின் சுற்றுலா அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 பிச்சோலா ஏரி

பிச்சோலா ஏரி

1362ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏரி, உதய்ப்பூர் எனும் சரித்திர நகரம் உருவாவதற்கு முன்னரே அமைக்கப்பட்ட ஏரி இதுவாகும். பிச்சோலி எனும் கிராமத்தின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி.

இந்த ஏரியின் ரம்மியமான சூழலில் மனதைப் பறிகொடுத்த மஹாராணா உதய் சிங் இதன் கரையிலேயே ஒரு அழகிய நகரத்தை நிர்மாணிக்க முடிவெடுத்தபின்னர் பிறந்ததுதான் உதய்பூர் நகரம்.அதிகபட்சமாக 8.5 மீ ஆழத்தை கொண்ட இந்த ஏரி 696 ஹெக்டேர் பரந்துள்ளது. காலப்போக்கில் இந்த ஏரியைச் சுழ்ந்துள்ள பகுதியில் கோயில்கள், அரண்மனைகள் மற்றும் மாளிகைகள் உருவாக்கப்பட்டன.

Uri Sittan Tripo

டோங்கா எனும் குதிரை வண்டி

டோங்கா எனும் குதிரை வண்டி


இந்த ஏரிக்கு செல்வதற்கு டோங்கா எனும் குதிரை வண்டி, டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்றவற்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.பிச்சோலா ஏரிக்குள்ளேயே நான்கு தீவுத்திட்டுகள் அமைந்துள்ளன. இவற்றில் ஜக் நிவாஸ் எனப்படும் தீவில் ஏரி அரண்மனையும், ஜக் மந்திர் எனும் தீவில் அதே பெயரில் அழைக்கப்படும் ஒரு கோயிலும் அமைந்துள்ளன.

Vishal0soni

 மோகன் மந்திர்

மோகன் மந்திர்

மோகன் மந்திர் என்றழைக்கப்படும் தீவிலிருந்து கன்காவ்ர் எனும் வருடாந்திர திருவிழாக்கொண்டாட்டத்தை கண்டுகளிக்கலாம். அர்ஸி விலாஸ் எனும் தீவு ஒரு சிறு அரண்மனையுடன் வெடிமருந்துக் கிடங்காக பயன்பட்டிருக்கிறது. கொண்டை வாத்து, நீர்க்கோழி, வெள்ளைக்கொக்கு, ஆலா (புறாவைப்போன்ற பறவை), நீர்க்காகம் மற்றும் மீன்கொத்தி போன்ற பறவைகள் இந்த அர்ஸி விலாஸ் தீவிற்கு வருகை தருகின்றன.

Bernard Gagnon

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இந்த ஏரிக்கு அருகே நிறைய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. நேருகார்டன், நாக்டா, அஹார், தொல்லியல் அருங்காட்சியகம், ஷில்ப்கிராம், மஹாரானா பிரதாப் மெமோரியல், மக்லா மக்ரா, உதய்ப்பூர் போக் மியூசியம், உதய்சாகர், கும்பல்கர் காட்டுயிர் சரணாலயம்ஸ குலாப் பாக், ராஜ் அங்கண், தில்குஷ், ஹல்டிகாட்டி, லேக்பேலஸ், லட்சுமி சவுக், ஏக்லிங்க்ஜி கோயில், பாகோர் கி ஹவேலி, படா மஹால், பதேஹ் பிரகாஷ் அரண்மனை, பதேஹ் சாகர், ஜக் மந்திர், ஜகதீஷ் கோயில், சிட்டி பேலஸ், சஜ்ஜன்கர் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன.

மஹாராணா பிரதாப் நினைவகம்

மஹாராணா பிரதாப் நினைவகம்


மஹாராணா பிரதாப் மெமோரியல் எனப்படும் இந்த நினைவகம் மோத்தி மாக்ரி அல்லது முத்து மலை என்றழைக்கப்படும் குன்றின்மீது ஃபதேஹ் சாஹர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பெயர் பெற்ற வீரரான மஹாராணா பிரதாப் மற்றும் சேதக் எனப்படும் அவரது குதிரைக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னமாகும். இந்த நினைவகத்தில் பயணிகள் மஹாராணா பிரதாப் மற்றும் சேதக் இருவரின் தத்ரூப சிலைகளைப்பார்க்கலாம். இங்கு மலைக்கு அருகிலுள்ள ஜப்பானிய பாறைத்தோட்டமும் பயணிகள் காணவேண்டிய முக்கிய அம்சமாகும். உதய்பூரின் சிதிலமடைந்த கோட்டை ஒன்றையும் இந்த ஸ்தலத்தில் காணலாம்.

லேக் பேலஸ்

லேக் பேலஸ்


லேக் பேலஸ் என்றழைக்கப்படும் இந்த ஏரி அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீரமான மாளிகை ஆகும். 1743ம் ஆண்டு மஹாராணா ஜகத் சிங் இந்த அரண்மனையை கோடை வசிப்பிடமாக கட்டியுள்ளார். இது தற்சமயம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றமடைந்துள்ளது. நுட்பமான கட்டிடக்கலை அம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த இந்த மாளிகை திகழ்கிறது.உலகிலுள்ள வசீகர அரண்மனைகளில் இது ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. அழகிய தூண்களுடன் கூடிய மேல்தளங்கள், சாரங்களுடன் காட்சியளிக்கும் முற்றங்கள், தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகள் போன்றவை இந்த அரண்மனையின் எழில் அம்சங்களாகும். இந்த அரண்மனையிலுள்ள அறைகள் இளஞ்சிவப்பு ரத்தினக்கற்கள், வண்ணந்தீட்டப்பட்ட கண்ணாடிகள், விதான வளைவு அமைப்புகள் மற்றும் பசுமையான தாமரை இலைகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.இந்த அரண்மனை விடுதிக்குள் குஷ் மஹால், படா மஹால், தோலா மஹால், ஃப்பூல் மஹால் மற்றும் அஜ்ஜன் நிவாஸ் போன்ற தங்கும் குடியிருப்புகள் உள்ளன. மதுக்கூடம், நீச்சல் குளம் மற்றும் ஆலோசனைக்கூடம் போன்ற வசதிகளும் இங்கு உள்ளன.

 ஏக்லிங்க்ஜி கோயில்

ஏக்லிங்க்ஜி கோயில்

ஏக்லிங்க்ஜி கோயில் உதய்பூரிலிருந்து நகர மையத்திலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள புரதானமான பிரசித்தியான கோயில் ஆகும். சிவபெருமானுக்கான இந்த கோயில் ஆச்சார்யா விஸ்வரூபாவால் 734ம் வருடம் கட்டப்பட்டுள்ளது. 2500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகத்தில் 108 சன்னதிகள் அமைந்துள்ளன.நான்கு முகங்களோடு 50 அடி உயரத்தில் காட்சியளிக்கும் கல்லால் ஆன சிவபெருமானின் சிலை இக்கோயிலின் விசேஷ அம்சமாகும். மஹாதேவ சௌமுகி என்றழைக்கப்படும் இந்த சிவபெருமான் சிலையின் நான்கு முகங்களும் நான்கு திசைகளிலும் நோக்கியவாறு உள்ளன. இந்த முகங்கள் வடக்குத்திசைக்குரிய விஷ்ணு, கிழக்குத் திசைக்குரிய சூரியன், தென் திசைக்குரிய ருத்ரன் மற்றும் மேற்குத்திசைக்குரிய பிரம்மன் என்பனவாகும். சிவனின் வாகனமாகிய நந்தியின் சிலை கோயிலின் பிரதான வாயிலுக்கருகில் அமைக்கப்பட்டுள்ளது

பாகோர் கி ஹவேலி

பாகோர் கி ஹவேலி

பாகோர் கி ஹவேலி எனும் கோட்டை மாளிகை பிச்சோலி ஏரிக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. புராதன அழகு கொண்ட இம்மாளிகை மேவார் ராஜ சபையின் பிரதான மந்திரியாகிய அமீர் சந்த் பத்வா'வால் கட்டப்பட்டுள்ளது. நுட்பமான மரவேலைப்பாடுகள் மற்றும் கண்ணாடி அலங்காரங்கள் இந்த 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹவேலி மாளிகையின் சிறப்பம்சங்களாகும். பாகோர் மஹாராணா சக்தி சிங் இந்த ஹவேலியின் பிரதான கட்டமைப்புடன் மேலும் மூன்று அடுக்குகளை 1878ம் ஆண்டு கட்டியுள்ளார்.1986ம் ஆண்டில் இம்மாளிகை மேற்குப்பிராந்திய பண்பாட்டியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனுள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் மேவார் வம்சத்தின் ராஜ நாகரீகம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் போன்றவை சுவரோவியங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Apoorvapal

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை

ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை பிச்சோலா ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது தற்சமயம் ஒரு பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது மேவார் அரசரான மஹாராணா ஃபதேஹ் சிங் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

Avanindra Dugar

 ஃபதேஹ் சாஹர்

ஃபதேஹ் சாஹர்

ஒரு பேரிக்காய் வடிவில் காணப்படும் ஃபதேஹ் சாஹர் எனும் இந்த ஏரி 1678ம் ஆண்டில் மஹாராணா ஃபதேஹ் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். உதய்பூரிலுள்ள நான்கு ஏரிகளில் ஒன்றான இது அந்நகரத்தின் பெருமைகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. இதன் ரம்மியமான நீல நிற நீர்த்தேக்கம் மற்றும் பசுமையான சுற்றுப்புறம் இவற்றின் காரணமாக இது இரண்டாவது காஷ்மீர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரிக்குள்ளேயே மூன்று தீவுத்திட்டுகளும் அமைந்துள்ளன.ராணி விக்டோரியாவின் மகனாகிய கன்னாட் பிரதேச பிரபு இந்த ஏரி நிர்மாணத்திற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். இந்த ஏரி ஒரு கால்வாயின் மூலம் பிச்சோலா ஏரி மற்றும் ரங் சாஹர் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபதேஹ் சாஹர் ஏரிக்கரையில் ராம் பிரதாப் அரண்மனை அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரிக்கு பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோ மற்றும் தோங்கா மூலம் சென்றடையலாம்.

ஜக் மந்திர்

ஜக் மந்திர்

ஜக் மந்திர் பிரபல்யமாக ஏரித்தோட்ட அரண்மனை என்றே அழைக்கப்படுகிறது. இது பிச்சோலா ஏரியிலுள்ள நான்கு தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ளது. மேவார் வம்சத்தின் மூன்று சிசோடியா ராஜபுத்திர மன்னர்கள் இந்த அரண்மனையை கட்டி முடித்துள்ளனர்.1551ம் ஆண்டு மஹாராணா அமர் சிங் முதலில் இந்த அரண்மனையி கட்ட ஆரம்பித்துள்ளார். அவருக்கு பின்னர் மஹாராணா கரண்சிங் 1620 முதல் 1628 வரை அப்பணியை தொடர்ந்துள்ளார். இறுதியாக மஹாராணா முதலாம் ஜகத்சிங் (1628-1652) இந்த அரண்மனையின் இறுதிப்பணிகளை முடித்துள்ளார். இதற்கு கடைசி மன்னரான மஹாராணா ஜகத் சிங்கின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனையில் உள்ள குல் மஹால் எனும் மாளிகை முகலாய இளவரசர் குர்ரம் என்பவருக்காக கட்டப்பட்டுள்ளது. இங்கு இஸ்லாமிய பாணியில் பிறையுடன் அமைந்த குமிழ்மாட கோபுரம் உள்ளது.

ஜகன்னாத் ராய் கோயில்

ஜகன்னாத் ராய் கோயில்

முன்னர் ஜகன்னாத் ராய் கோயில் என்றழைக்கப்பட்ட இந்த ஜகத்தீஷ் கோயில் உதய்பூரிலுள்ள சிட்டி பேலஸ் எனும் அரண்மனையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. விஷ்ணுக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் உதய்பூர் நகரத்தில் இருப்பதிலேயே பெரிய கோயிலாகும். இந்தோ ஆரிய கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் இந்த கோயில் மஹாராணா ஜகத்சிங் மன்னரால் 1651ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள விஷ்ணு சிலை நான்கு கரங்களுடன் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.இந்த கோயிலானது மூன்று அடுக்குகளுடனும், அலங்கார வடிப்புகளைக்கொண்டுள்ள தூண்களுடனும் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மேற்கூரைகளுடனும் காட்சியளிக்கின்றது.

 சிட்டி பேலஸ்

சிட்டி பேலஸ்


சிட்டி பேலஸ் அரண்மனை உதய்பூரிலுள்ள அற்புதமான மாளிகைகளில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. சிசோடிய ராஜபுதன வம்சத்தின் தலைமைப்பீடமாக இந்த அரண்மனையை 1559ம் ஆண்டில் மஹாராணா உதய் மிர்ஸா சிங் நிர்மாணித்துள்ளார். இது பிச்சோலா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. சிட்டி பேலஸ் அரண்மனை வளாகம் 11 அரண்மனைகளை தன்னுள் கொண்டுள்ளது.இந்த அரண்மனையின் கட்டமைப்பு முகலாய மற்றும் ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாணியின் கலவையான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் உச்சியின் கட்டப்பட்டுள்ளதால் இங்கிருந்து மேலிருந்து கீழாக மொத்த நகரத்தையும் பார்க்க முடிகிறது.

சஹேலியான் கி பாரி

சஹேலியான் கி பாரி

சஹேலியான் கி பாரி எனும் பெயருக்கு ‘சேடிப்பெண்களின் தோட்டம்' என்பது பொருளாகும். இந்த தோட்டம் ராஜகுல பெண்களுக்காக மஹாராணா சங்க்ராம் சிங் அவர்களால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மன்னரே இந்த வனப்பு பொருந்திய தோட்டத்தை வடிவமைத்து 48 சேடிப்பெண்களுடன் மணவாழ்க்கையை துவங்கியிருந்த தன் ராணிக்கு பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. ஃபதேஹ் சாஹர் ஏரியில் கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தோட்டம் அழகான நீரூற்றுகளுக்கும், செழுமையான பச்சைப்புல்வெளிகளுக்கும் மற்றும் வெள்ளைப்பளிங்குக்கல் வேலைப்பாடுகளுக்கும் புகழ் பெற்றுள்ளது.இந்த தோட்டத்தின் பிரதான அம்சம் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட நீரூற்று சாதனங்களாகும். இங்குள்ள எல்லா நீரூற்றுகளும் பறவைகள் தங்கள் மூக்கிலிருந்து நீர் சொரிவது போல் அமைக்கப்பட்டுள்ளன.

மழை அரண்மனை

மழை அரண்மனை


சஜ்ஜன்கர் அல்லது மழை அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை உதய்பூரின் அற்புத மாளிகைகளில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 944 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரிலுள்ள பன்ஸ்தாரா சிகரத்தின்மீது இந்த அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேவார் வம்சத்தின் மஹாராணா சஜ்ஜன் சிங் இந்த அரண்மனையை 1884ம் ஆண்டில் மழை மேகங்களை பார்வையிடுவதற்காக உருவாக்கியுள்ளார்.இந்த அரண்மனை முழுவதும் வெள்ளை பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பயணிகள் பிச்சோலா ஏரி மற்றும் சூழ்ந்துள்ள பிரதேசத்தின் அழகை நன்கு பார்த்து ரசிக்கலாம். அரண்மனையிலுள்ள தாங்கு தூண்களில் பலவிதமான இலைகள் மலர்கள் போன்ற புடைப்பு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒன்பது அடுக்குகளை இந்த அரண்மனை அக்காலத்தில் ஒரு வான சாஸ்திர மையமாக மன்னரால் மழைக்கால மேகங்கள் மற்றும் இயல்புகளை ஆய்வு செய்ய பயன்பட்டிருக்கிறது.

Read more about: travel, fort, udaipur