» » இயேசு அறையப்பட்ட சிலுவை தமிழகத்தில்தான் இருக்கிறது தெரியுமா?

இயேசு அறையப்பட்ட சிலுவை தமிழகத்தில்தான் இருக்கிறது தெரியுமா?

Posted By: Udhaya

பூண்டி மாதா கோயிலுக்கு செல்வது எப்படி, அருகில் காண வேண்டிய இடங்கள் என சுற்றுலா அம்சங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பூண்டி மாதா கோயில்

பூண்டி மாதா கோயில்


பூண்டி மாதா கோயில் அல்லது பேராலயம் தமிழகத்தின் மிகப்பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Arulraja

தஞ்சாவூர்

தஞ்சாவூர்


பூண்டி மாதாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் தஞ்சாவூர் பற்றி தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


‘தஞ்சகாசுரன்' என்ற பெயரைக்கொண்ட ஒரு அசுரனை மஹாவிஷ்ணு தஞ்சாவூர் ஸ்தலத்தில் வதம் செய்ததாகவும், அதனாலேயே இவ்வூருக்கு தஞ்சாவூர் என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது (சிவபெருமான் தான் இவனை வதம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது). காவிரி ஆற்றுப்படுகையில் குளிர்ச்சியான வளம் கொழிக்கும் பகுதி என்பதால் இந்த இடத்துக்கு ‘தண் - செய்யூர்' என்ற பெயர் வழங்கி அது தஞ்சாவூர் ஆக திரிந்திருக்கலாம் என்பது மற்றொரு ஊகமாக முன் வைக்கப்படுகிறது.

Nileshantony92

 பயண அம்சங்கள்

பயண அம்சங்கள்


தஞ்சாவூர் 36 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, ஈரோடு, வேலூர், கொச்சி, ஊட்டி போன்ற நகரங்களோடு நல்ல சாலை வசதிகளால் இது இணைக்கப்பட்டிருக்கிறது. நகரத்திற்குள் பயணிக்க அரசுப்போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து நவீன சொகுசுப்பேருந்து சேவைகளும் உள்ளன.

Nileshantony92

 ஆறுகளுக்கிடையே

ஆறுகளுக்கிடையே

இந்த தலம் கொள்ளிடம் ஆற்றுக்கும் காவிரி ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்டது இந்த தலம் என்று கூறப்படுகிறது.

 சிலுவையில் இயேசு

சிலுவையில் இயேசு

சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததாக கூறுவர். அந்த சிலுவையின் சிறுபகுதி இங்கு பாதுகாக்கப்படுகிறது.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

இந்த ஊருக்கு அருகே திருக்காட்டுப்பள்ளி எனும் இடம் உள்ளது. இங்கு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு பேருந்தில் வந்தடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் பூதலூர். திருச்சி விமான நிலையம் அருகில் அமைந்துள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்