» » பிருந்தாவனத்தில் இப்படி ஒரு விசயம் இருக்குறது உங்களுக்கு தெரியுமா?

பிருந்தாவனத்தில் இப்படி ஒரு விசயம் இருக்குறது உங்களுக்கு தெரியுமா?

Written By: Udhaya

பெயரிலேயே வனம் கொண்டுள்ள இது இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படுகிறது.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் கடவுளான கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் பிருந்தாவனம் என்று நம்பப்படுகிறது. கண்ணனின் இளமைக் கால வாழ்க்கை யோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக விரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இங்கு ராதை மற்றும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இங்கு இந்துமத குறிப்பாக வைணவம், கௌடிய வைணவ மத பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.

பெயர்க் காரணம்

பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சமஸ்கிருத மொழியில் பிருந்தா என்றால் துளசி எனவும் வனம் என்றால் காடு எனவும் பொருள். இன்றுமிப்பகுதியிலுள்ள நிதிவனம் மற்றும் சேவாகஞ்ச் இரண்டும் துளசிச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.


எப்படி செல்லலாம்?

டில்லியில் இருந்து ஆக்ரா செல்லும்வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, "கிருஷ்ண ஜென்மபூமி'' அல்லது விரஜ பூமி என்கின்றனர். இவை முக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, "ஜென்மபூமி' என்று பெயரிட்டுள்ளனர். இங்கு ஓடும் யமுனை நதி கங்கையைப் போன்று புனிதமானதாக வணங்கப்படுகிறது. இந்த நதியை, "தூய பெருநீர் யமுனை' என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனம் உள்ளது.

பிரேம் மந்திர் காதல் ஆலயம்

பிரேம் மந்திர் காதல் ஆலயம்

காதல் ஆலயம் அல்லது பிரேம் மந்திர் எனப்படும் கோயில் இந்த ஊரில் மிகவும் பிரபலம்.

KuwarOnline

மதன்மோகன் கோயில்

மதன்மோகன் கோயில்

மதன்மோகன் கோயிலுக்கு செல்லுங்கள். மகிழ்ச்சியுடன் திரும்புங்கள்.

Atarax42

சேவாகுஞ்ச பிருந்தாவனம்

சேவாகுஞ்ச பிருந்தாவனம்

செடிகள் அடர்ந்த காடுகளைப்போன்று பிருந்தாவனம் இந்த சேவாகுஞ்ச பிருந்தாவனம்..

Atarax42

 பிரேம் கோயில்

பிரேம் கோயில்


பிரேம் கோயில்

KuwarOnline

குசும ஏரி

குசும ஏரி

குசும ஏரி

Gaura -

இஸ்கான் கோயில்

இஸ்கான் கோயில்

இஸ்கான் கோயில்

Dhavalbhatt16

சரணாலயம்

சரணாலயம்

இக்காடுகளில் உட்பட மயில் கள், கால்நடைகள், குரங்கு கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் காணப்படுகின்றன. ஒரு சில மயில்களைத் தவிர குரங்குகள், மாடுகளை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணலாம்

Read more about: travel, temple
Please Wait while comments are loading...