» »ராஜஸ்தானில் 1000 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அயோத்யா நகரம் !

ராஜஸ்தானில் 1000 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அயோத்யா நகரம் !

Written By: Udhaya

சோனிஜி கி நசியான் என்பது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு புனித தலம் ஆகும். இது 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

இது ராஜஸ்தானின் பெருமைமிக்க கட்டிடக் கலை சிறப்புகளுள் ஒன்றானதாகும். இதில் என்ன சிறப்பு என்றால் கோல்டன் சாம்பர் எனப்படும் தங்க அறை. முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த அறையினுள் கோட்டை முதல் மாளிகைகள் வரை அனைத்தும் தங்கம்.

மொத்தம் எவ்வளவு தெரியுமா 1000 கிலோ தங்கம்... இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய் இருக்கும். சரி அங்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள்

முதல் தளம்

முதல் தளம்

இந்த கோயிலின் முதல் தளம் சிட்டி ஆப் கோல்ட் அதாவது தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது.

Ramesh Lalwani

 சமணர்களின் அடையாளங்கள்

சமணர்களின் அடையாளங்கள்

இந்த கோயிலினுள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன உருவங்கள், தளங்கள், வேலைப்பாடுகள் என மொத்தம் 1000 கிலோ அளவுக்கு தங்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Vaibhavsoni1

 அயோத்யாவின் உருவம்

அயோத்யாவின் உருவம்

பழைமையான அயோத்யாவின் உருவங்களை அப்படியே மாதிரியாக செதுக்கி வைத்துள்ளனர். மேலும் பிரயாக்கின் மாதிரிகளும் தங்கத்தால் இழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Vaibhavsoni1

 கட்டியவர்கள்

கட்டியவர்கள்

இந்த கோயிலை கட்டியவர்கள் அஜ்மீரின் சோனி குடும்பத்தினர். இந்த கோயில் இன்னமும் அவரது சந்ததிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.


Vaibhavsoni1

 உலக வரைபடம்

உலக வரைபடம்

சமணர்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் முறைகளில் உலக வரைபடம் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படம்

Vaibhavsoni1

 இன்னும் இருக்கு

இன்னும் இருக்கு

இந்த கோயில் சமண மதத்தின் பல்வேறு கொள்கைகளையும், சிறப்புக்களையும் விளக்கும் வண்ணம் கண்ணாடி வகைகளால் செய்யப்பட்ட பொருள்களையும் கொண்டுள்ளது.

Vaibhavsoni1

 சிவப்பு கோயில்

சிவப்பு கோயில்

சிவப்பு கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் சிவப்பு கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

Read more about: travel, temple, tour