» »மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

Posted By: Udhaya

மிசோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றான சைஹா மிசோரத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் மாவட்ட தலைமையகத்தையும் சைஹா என்று தான் அழைப்பார்கள்.

மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றத்திற்கும் இதுவே மாவட்ட தலைமையமாக செயல்படுகிறது. மிசோரத்தில் உள்ள மூன்று மாவட்ட மன்றங்களில் மாரா தன்னாட்சி உரிமையுடைய மாவட்ட மன்றமும் ஒன்றாகும்.
சைஹா மாவட்டத்திற்கு வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில் லுங்க்லெய் மாவட்டம் அமைந்துள்ளது.

அதற்கு மேற்கே லவ்ங்க்டை மாவட்டமும் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் மியன்மாரின் சில பகுதிகளும் உள்ளன. மிசோரத்தில் ஐசவ்ல் மற்றும் லுங்க்லெய்க்கு அடுத்து பெரிய நகரமாக விளங்குளிறது சைஹா. உள்ளூர் பாஷையான மாராவில் உள்ள வார்த்தையான 'சியஹா'வில் இருந்து தான் சைஹா அதன் பெயரை பெற்றது.

மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

இதனை இரண்டு பகுதியாக பிரிக்கலாம் - 'சை' என்றால் யானை என்று பொருளாகும், 'ஹா' என்றால் பல் என்று பொருளாகும். சைஹா என்றால் யானையின் பல் என்று அர்த்தமாகும்.
இந்த இடத்தில் யானையின் பற்கள் பல இருந்ததால் இதனை சைஹா என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர். இங்கே மாரா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் மற்றும் மியன்மாரை சேர்ந்த மக்களே அதிகமாக வசிக்கின்றனர்.
இங்குள்ள பாலா டிபோ ஏரி, சைகோ மற்றும் மவ்மா மலை போன்றவைகள் சைஹா சுற்றுலாவை முழுமை அடையச் செய்யும்.

மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

Bogman

சைஹாவை அடைவது எப்படி?

மிசோரத்தின் தலைநகரான ஐசவ்லிலிருந்து 305 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சைஹா. தேசிய நெடுஞ்சாலை 54 இந்த மாவட்ட தலைமையகத்திற்கு உயிர் நாடியாக விளங்குகிறது. ஐசவ்லில் இருந்து சைஹாவிற்கு பல மாநில பேருந்துகள் இயங்குவதால் இங்கே சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

சைஹாவின் வானிலை

மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

Dan Markeye

சைஹா இடைவெப்பக்காலநிலையை கொண்டுள்ளது. அதனால் இங்கே வருடம் முழுவதும் இனிமையான வானிலை நிலவும். கோடைக்காலம் இதமாகவும், பருவக்காலம் ஈரப்பதத்துடன் கன மழையுடன், குளிர் காலம் ரம்மியமாகவும் குறைவான குளிருடன் இருக்கும்.

அருகிலுள்ள இடங்கள்

லுங்க்லெய்

மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

Joe Fanai

மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். லுங்க்லெய் நகரத்தில் வளமையான பல தாவர வகைகளையும் விலங்கின வகைகளையும் காணலாம். இயற்கை விரும்பிகளுக்கு சொர்கமாக விளங்குகிறது இந்நகரம். லுங்க்லெய்யிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மோல்செங் என்ற கிராமத்தில் புத்தரின் செதுக்கிய ஓவியம் ஒன்றை காணலாம்.

தெஞ்ஜாவ்ல்

மிசோரத்தின் தெற்கு முனை சைஹாவுக்கு ஓர் பயணம் செய்வோமா?

Lpachuau

மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக இருந்தது. மிஜோராம் தலைநகர் அய்ஜாவ்லில் இருந்து 43கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.

Read more about: travel, hills