» »சென்னை - தஞ்சாவூர் : தமிழனின் சரித்திரத்தைத் தேடி ஒரு பயணம் #History 1

சென்னை - தஞ்சாவூர் : தமிழனின் சரித்திரத்தைத் தேடி ஒரு பயணம் #History 1

Written By: Udhaya

தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலிருந்து வீரம், அறிவியல், கட்டடக்கலைகளில் சிறந்து விளங்கிய சோழர்களின் தலைநகரத்துக்கு ஒரு இன்பமான பயணம் செல்லலாமா?

சென்னை - தஞ்சாவூர் மொத்தம் இரண்டு வழித்தடங்களில் எளிதாக பயணிக்கலாம்.

 இந்த பயணத்தின்போது காணவேண்டிய இடங்கள்

இந்த பயணத்தின்போது காணவேண்டிய இடங்கள்

இந்த பயணத்தில் நாம் முக்கியமாக சென்னை - விழுப்புரம் - தஞ்சாவூர் பகுதிகளை கடக்கிறோம். சுற்றுலாவுக்கு தகுந்த இடங்களாக குறிப்பிடத்தக்க இடங்கள் நிறைய இருந்தாலும், நமக்கு செல்வதற்கு எளிமையான இடங்களுக்கு மட்டும் செல்வோம்.

ஒன்று தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மற்றொன்று கடற்கரைச் சாலை வழியாகவும் செல்லும் பயணம்.

இரண்டாவதைக் காட்டிலும் முன்னது எளிமையானது எனினும், கடற்கரைச் சாலை வழிப் பயணம் நம் மனதை உற்சாகப்படுத்துவதோடு நல்ல காற்றில் பயணிக்க ஏதுவானதாகவும் இருக்கும்.

நீங்கள் பைக் பிரியர் என்றால் நிச்சயம் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். ஒருவேளை அவசரம் கருதி நீங்கள் பயணிக்கும் நேரத்தை மிச்சப்படுத்தவேண்டும் எனில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக செல்வது சிறந்தது.

சென்னையில் காணவேண்டிய இடங்கள்

சென்னையில் காணவேண்டிய இடங்கள்

மெரினா கடற்கரை, மாங்காடு காமாட்சியம்மன் கோயில், காளிகாம்பாள் கோயில், கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி கோயில் என நிறைய இடங்கள் உள்ளன.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

சென்னையின் பெருமையாகப் பார்க்கப்படும் இந்த கடற்கரை ஆசியாவிலேயே இரண்டாவது நீளமானது எனும் பெருமை பெற்றது. இங்கு சென்றால் கடல் நீரில் விளையாடி மகிழ்வது மட்டுமின்றி கடற்கரையோரம் அமைந்துள்ள சிற்றுண்டி உணவகங்களிலும் ஒருகை பார்க்கலாம். அத்தனைக் கடைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

Dey.sandip

 மாங்காடு காமாட்சியம்மன் கோயில்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில்

காஞ்சிபுரம் காமாட்சியம்மனைப் போலவே புகழ்பெற்ற இந்த கோயில் சென்னையை அடுத்த மாங்காட்டில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள பார்வதி தேவியின் திருவுருவம் சற்றே கோபமுற்ற நிலையில் இருந்தாலும் தேடி வருவோரை மனம் குளிர செய்வார் என பக்தர்களால் பெரும்பாலும் கூறப்படுகிறது.

கபாலீஸ்வரர் கோயில்

கபாலீஸ்வரர் கோயில்


சென்னையின் பெருமைகளில் ஒன்றான கபாலீஸ்வரர் கோயில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிகிறது. சென்னை அடுத்த மைலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவன் மற்றும் பார்வதி அருள்பாலிக்கின்றனர். வேண்டியதை அருளும் கற்பகாம்பாள் எனவும் அப்பகுதிவாசிகளால் இந்த கோவில் போற்றப்படுகிறது.

மேலும், இது பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் இதன் தொன்மையும், சிற்பக்கலையும் கண்களுக்கு விருந்துதான்.

H. Grobe

வடபழனி முருகன் கோயில்

வடபழனி முருகன் கோயில்


சென்னையில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்றாகும். முருக பக்தர்களிடையே வெகு பிரசிதிபெற்ற இது பிரத்யேக தீர்த்தக்குளத்துடன் பெரிய வளாகத்தை

கொண்டதாக 17-ஆம் நூறாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. குறிப்பாக கோவிலின் ஒரு பகுதியில் அமைந்துள்ள குலத்தின் நீர் நோய் தீர்க்கும் வல்லமை கொண்டது என்பதால் நீண்ட தூர பயணிகளுக்கு கொஞ்சம் ஓய்வெடுக்க இது நல்ல இடம்தான்.

Simply CVR

சென்னை சாந்தோம் ஆலயம்

சென்னை சாந்தோம் ஆலயம்

போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டுள்ள சாந்தோம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இதனை கடற்கரை சாலை வழியாக 20 நிமிடங்களிலும், அண்ணா சாலை வழியாக 30 நிமிடங்களிலும் அடையலாம். இப்பகுதியிலேயே மிகவும் முக்கியமான தேவலயமாக விளங்கும் இதில் ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிருத்துவர்கள் வந்து வழிப்பட்டுச்செல்வர். மேலும் , தென்னிந்தியாவிலேயே மிகவும் முக்கிய கிறித்துவ ஆலயமாகவும் இது விளங்குகிறது.

Joe Ravi

சென்னை - செங்கல்பட்டு

சென்னை - செங்கல்பட்டு

சென்னையிலிருந்து செங்கல்பட்டை ஒரு மணி நேர பயணத்தில் அடையலாம். எழும்பூரிலிருந்து புறப்பட்டால் கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், மறைமலைநகர் வழியாக செங்கல்பட்டை அடையலாம்.

கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டீர்களென்றால், மதுரவாயல், போரூர் வெளிப்புற சாலை வழியாக பெருங்களத்தூரிலிருந்து செங்கல்பட்டை அடையலாம்.

செங்கல்பட்டைச் சுற்றியுள்ள இடங்கள்

செங்கல்பட்டைச் சுற்றியுள்ள இடங்கள்

செங்கல்பட்டில் எல்லையம்மன் கோயில், முனீஸ்வரன் கோயில், திருவாத்தம்மன் கோயில், சிவன்மலை, செயின்ட் ஜோசப் சர்ச் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. மேலும் செங்கல்பட்டு ஏரி, கோலவாய் ஏரி ஆகியவையும் இப்பகுதியில் உள்ளன.

செங்கல்பட்டு - விழுப்புரம்

செங்கல்பட்டு - விழுப்புரம்

செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம் 109 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒன்றே முக்கால் மணி நேர பயணதூரமாகும்.

வழியில் மேல்மருவத்தூர், திண்டிவனம் ஆகியன குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், திண்டிவனம் அருகே எண்ணற்ற ஏரிகள் என நிறைய இடங்களை பார்த்துக்கொண்டே பயணிக்கலாம்.

விழுப்புரத்தில் நாம் காணவேண்டிய இடங்கள்

விழுப்புரத்தில் நாம் காணவேண்டிய இடங்கள்

வரலாற்று புகழ்மிக்க செஞ்சிக்கோட்டை, தியாக துருகம், கல்ராயன் மலை என விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றிப்பார்க்கத் தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. எனினும் நேரம் கருதி அதை தவிர்த்து நம் பயணத்தைத் தொடர்வோம்.

செஞ்சிக்கோட்டை

செஞ்சிக்கோட்டை

கிருஷ்ணகிரி, ராஜகிரி, சந்திராயன்

துர்க்கை என மூன்று மலையும் அரணாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள செஞ்சிக்கோட்டை 17ம் நூற்றாண்டின் முந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார், 13 கி.மட்டர் நீளம் கொண்ட சுவர்களாலும், அங்கு வைக்கப்பட்டுள்ள பண்டயகால பீரங்கிகளும் இந்த பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாகும் என்பதில் ஆச்சரியமில்லை. குறிப்பாக, நீங்க புகைப்பட கலைஞர் என்றால் உங்களுக்கான சிறந்த இடம் இதுதாங்க.

Karthik Easvur

விழுப்புரம் - தஞ்சாவூர்

விழுப்புரம் - தஞ்சாவூர்

முன்னரே குறிப்பிட்ட மாதிரி கடற்கரை பாதையைத் தேர்ந்தெடுப்பதும், தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதும் உங்கள் விருப்பம்.

விழுப்புரத்திலிருந்து பெரம்பலூர் வழியாக தஞ்சாவூர் 3 மணி நேரத்திலும், கடற்கரை மார்க்கமாக கடலூர் வழியாக 3.30 மணி நேரத்திலும் அடையலாம்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

ஒருவழியாக தஞ்சாவூரை அடைந்துவிட்டோம். இங்கும் காணவேண்டிய இடங்கள் அதிகம். அருகிலேயே திருச்சி மாநகரமும் அமைந்துள்ளது. அங்கும் சென்று சுற்றுலாவை அனுபவிக்கலாம்

 மனோரா கோட்டை

மனோரா கோட்டை

பட்டுக்கோட்டைக்கு அடுத்து தஞ்சாவூரில் இருந்து 60 முதல் 70 கிலோமீட்டருக்கு உட்பட்டு அமைந்துள்ளது இந்த மனோரா கோட்டை. 1815-ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட இது பல அடுக்குகளுடன் கலைவடிவமைப்போடு காணப்படுகிறது. நீங்க குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ அங்கு செல்கிறீர்கள் என்றால் உங்களுக்காகவே ஓய்வுக்கூடமும், குழந்தைகள் பூங்காவும் கோட்டையின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பு ஆகும்.

Sdsenthilkumar