» »காணும் பொங்கலுக்கு எங்கெல்லாம் போகலாம் தெரியுமா?

காணும் பொங்கலுக்கு எங்கெல்லாம் போகலாம் தெரியுமா?

Written By: Udhaya

காணும்பொங்கலன்று தமிழ் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் அல்லது கடற்கரைகளிலும் குடும்பத்தோடு கூடி ஆடி மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்கர்களுக்கு அடிமையான வாழ்வைத் தொடங்கிய பின்பு நம்மில் பலர் தமிழ் கலாச்சாரத்தையே கேலி பேசும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்டோம். நம்மில் சிலர் வேறு வழியில்லாமல், விவசாயத்தையும் தொடர முடியாமல், படித்த படிப்பிற்கும் வேலை கிடைக்காமல், வெறும் பணம் மோகத்தால் வெளிநாடு சென்று வேலை செய்கிறோம். அதுமட்டுமல்லாமல், நகரங்களின் அதிதீவிர வளர்ச்சியினால், கம்மாய்களையும், நீரூற்றுகளையும் கான்கிரீட் வளர்ச்சியானால் வளர்த்தெடுத்து டிஜிட்டல் இந்தியாவில் பணத்துக்கும் மின்னணுவியலை சரணடைந்துவிட்டோம். நீரும் சேறும் புகவழி தேடி அதனிடத்தில் அகப்படவும் விடாமல், அவைகளையும் களையெடுத்து புத்தம் புதிய வீடுகளைக் கட்டியமைத்தோம். இப்படியாபட்ட வாழ்க்கையில் சொந்த அப்பா அம்மாவை பார்க்கக்கூட நேரமில்லாமல், கணினித் தொழில் செய்துவருகிறோம். இதையெல்லாம் மாற்றி மீண்டும் நாம் நம் கிராமத்துக்குள் புகுந்தால் எப்படி இருக்கும். இந்த காணும்பொங்கலில் அதையும் துணிந்து செய்வோம் வாருங்கள்.

தமிழகம் முழுக்க காணும்பொங்கல் எங்கெல்லாம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா அம்சங்கள் மிகுந்த கடற்கரையாகும். இந்தியாவின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி, மாவட்டத் தலைநகர் நாகர்கோயிலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கடற்கரையில் மகாத்மா காந்தி மண்டபம், விவேகானந்தர் பாறை, காமராசர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை போன்றவை சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகும். இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இக்கடற்கரையில் கூடுகின்றனர். இந்தக் கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது.இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன.

இங்கு பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அப்படி கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்றுதான் காணும்பொங்கல். முன்பெல்லாம் குடும்பத்துடன் கடற்கரையில் கூடி பொங்கலிட்டு உற்றார் உறவினருடன் சேர்ந்து வழிபட்டு விருந்தோம்பல் செய்வர். அதற்குப்பிறகு வீட்டிலே சமைத்து எடுத்துசென்று கடற்கரையில் பொழுதுபோக்குவார்கள். இப்போது எதுவுமில்லாமல் ஆகிவிட்டது. எனினும் குமரி கடற்கரையில் ஆங்காங்கே சில குடும்பங்களை இந்த நாளில் காணமுடியும்.

சொத்தவிளை கடற்கரை

சொத்தவிளை கடற்கரை


குமரி கடற்கரை அளவுக்கு இல்லாவிட்டாலும், குமரியின் காதலர்கள் இந்த இடத்துக்கே அதிகம் வருகிறார்கள். இது மாவட்ட அளவில் பெரிய சுற்றுலாத் தளமாக இருப்பினும், பெரும்பாலும் வெளி மாவட்ட மக்களுக்கு இது அந்த அளவிற்கு அறிமுகமில்லாததாக இருக்கிறது.

இங்கும் நாம் நம் குடும்பத்துடன் காணும்பொங்கலைக் கொண்டாடலாம்.

Infocaster

 உவரி கடற்கரை

உவரி கடற்கரை

கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது உவரி எனும் சமுத்திரக்கரை. இங்கு மாதா கோயிலும், சுயம்புலிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் கோயிலும் அமைந்துள்ளது. அழகிய கடற்கரையும் உள்ளது. பெரும்பான்மை மக்கள் இந்த பகுதியில் காணும்பொங்கலை கடற்கரையில் கழிக்கிறார்கள்.

இந்த இடம் திருச்செந்தூரிலிருந்து 40கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 52கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Yesmkr

திருச்செந்தூர் கடற்கரை

திருச்செந்தூர் கடற்கரை

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாக கருதப்படும் திருச்செந்தூரில் காணும்பொங்கலன்று மக்கள் குதூகலிக்க வருகிறார்கள். அருகாமையிலுள்ள மக்கள் இந்த கடற்கரையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இங்கு வரும் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ அழகிய கடற்கரைகள், வயதானவர்களுக்கு ஓய்வெடுக்க மண்டபங்களும் நிறைய அமைந்துள்ளன. ஆன்மீக அன்பர்கள் கோயிலின் சுற்று மண்டபத்திலேயே அமர்ந்து கடற்கரையின் அழகை ரசிக்கிறார்கள்.

கோயிலைச் சுற்றியுள்ள வேப்பம்மரங்களும் காற்றை வழங்கி அனைவரையும் ஆசுவாசப்படுத்துகிறது.

எஸ்ஸார்

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரை

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரை

காலங்காத்தாலே எழுந்து துணிகளை மூட்டைக் கட்டி குடும்பத்துடன் சென்று துவைத்துவிட்டு சுட்டி குட்டிகளை கூட்டி பொடிநடையாக நடந்து ஆற்றங்கரையில் குளித்து கும்மாளமடித்து, சமைத்து கொண்டுவந்த உணவுகளை பரிமாறி ஆனந்தமாக பொழுதை கழிக்க அன்றைய நாட்கள் என் கண்களில் வந்து செல்கிறது.

இன்றைய நாட்களில் இப்படி யாரும் பெரிதாக செய்யவதில்லை. ஆறும் கழிவு நீர் கலந்து அசுத்தமாகியுள்ளது. எனினும் காணும்பொங்கலை தொட்டு பல குடும்பங்கள் இந்த இடத்துக்கு வருகை தருகிறார்கள். பழையபடி, குடும்பத்துடன் மகிழ்ந்திருக்கிறார்கள். அன்றைய நாட்களை கண்முன்னே தருகிறார்கள். இந்த பதினைந்து வருடத்தில்தான் என்னென்னவோ மாற்றங்கள். மீண்டும் திரும்புவோம் தமிழர் வாழ்வியலுக்கு....

Karthikeyan.pandian

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பற்றி நமக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. மறந்து போன தமிழர் வாழ்வியலில் இதுவும் கறைந்து போனது. உண்மையில் பழையகாலத்தில் ராமேஸ்வரம் மிகுந்த ஆர்ப்பாட்டமான பகுதியாகும். திருவிழாக்கள் கோலாகலமாக திக்கிதிளைக்கும்.

புனிதம் எனும் பெயரால் அதை குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டனர்,. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அப்போதெல்லாம் மாதமும்மாரி பெய்த வழக்கம் உள்ளது. மாரி செழித்து மண் செழித்தால் உழவுக்கு வேறெந்த தேவையும் இல்லையே.

காணும்பொங்கலை சிறப்பிக்க மக்கள் இங்குள்ள கடற்கரைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். முடிந்தவர்கள் வீட்டில் சமைத்து கட்டி எடுத்துவருகிறார்கள். இப்படி இன்றைய பொழுது மிகவும் மகிழ்ச்சியாக கழிகிறது.

wiki

 பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது. பிரெஞ்சு அரசின் முக்கிய காலனிப் பகுதியாக இருந்து வந்த பாண்டிச்சேரி 1674-ம் ஆண்டு முதல் 1954-ம் வரை பிரெஞ்சு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது.

கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு யாருடைய இடையூறும் இல்லாமல் பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் பிரான்ஸ், வளமான கலாச்சாரத்தையும் மற்றும் அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு வழங்கியுள்ளது.

இங்கும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காணும்பொங்கலை கொண்டாடுவது வழக்கம். பாண்டிச்சேரியில் பலர் தங்கள் வாழ்வியலை உலக அளவில் பெருக்கிவிட்டாலும், இன்றும் அங்கு நம் பாரம்பரியம் நிலைத்திருக்கிறது. காணும்பொங்கலை இங்குள்ள கடற்கரைகளில் கொண்டாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழர்தம் வாழ்வியல் மீண்டு எழ வேண்டும் எனவும் இவர்கள் விரும்புகின்றனர்.

பாண்டிச்சேரி அருங்காட்சியகம், ஜவஹர் பொம்மை காட்சியகம், தாவரவியல் பூங்கா, உட்சேரி நீர் நிலப்பகுதி, பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் தேசிய பூங்கா, அரிக்கமேடு, டூப்ளிக்ஸ் சிலை மற்றும் ராஜ் நிவாஸ் ஆகிய இடங்களுக்கும் சென்று பார்வையிடுகின்றனர் மக்கள்.

wiki

கடலூர்

கடலூர்


பாண்டிச்சேரியிலிருந்து மிக அருகில் இருந்தாலும், இது தமிழர்களின் வாழ்வியலை மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்துவரும் இடமாகும். பொன்னியின் செல்வன் புதினத்தில் கூறப்பட்டுள்ள கடம்பூர் எனும் இடமே கடலூர் என்றாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஊரில், கெடிலம் ஆறு, பெண்ணையாறு கொள்ளிடம், மணிமுத்தாறு என நிறைய ஆறுகள் பாய்கின்றன. இந்த இடங்களிலும் மக்கள் காணும்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவர்.

wiki

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் இன்று அலைமோதும். வங்கக்கடலின் ஓரத்தில் மக்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து பொழுதைக் கழிக்கின்றனர். மேலும் இங்குள்ள தலைவர்கள் சிலை இருக்கும் இடங்களுக்கும் செல்கின்றனர். நினைவு இல்லம், நினைவு சமாதிகள் என மெரினா கடற்கரை முழுவதுமே மக்கள் ஆரவாரமுடன் இருப்பதை காணமுடியும்.

wiki

 காவிரி ஆற்றங்கரைகள்

காவிரி ஆற்றங்கரைகள்


கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், தமிழகத்தில்தான் பெரும்பகுதி காவிரி ஓடுகிறது. இதன் கரைகளில் மக்கள் இன்று மாலை சென்று காணும்பொங்கலைசிறப்பிப்பார்கள்.

Read more about: travel, beach