» »இஸ்லாமியர்களுக்கு வரம் தரும் பெருமாள் கோயில்.. எங்கே தெரியுமா?

இஸ்லாமியர்களுக்கு வரம் தரும் பெருமாள் கோயில்.. எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியா ஒரு மதநல்லிணக்க நாடு என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பெருமைதானே. பல்வேறு மதங்களால் பிரிந்திருந்தாலும் சகோதரத்துவத்துடன் விளங்குவது சிறப்பானது. இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபடும் நிகழ்வு பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

 பெருமாள் கோயில்

பெருமாள் கோயில்

ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில். இங்கு வந்து வழிபடுவோருக்கு செல்வம் வந்து குவியும் என்பது நம்பிக்கை.

PC: OneIndia Tamil

பாரம்பரியம்

பாரம்பரியம்


சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கு, யுகாதி தினத்தன்று, முஸ்லிம்கள் கணிசமானோர் வந்து வழிபட்டு செல்வது பாரம்பரியாக உள்ளது.

PC: OneIndia Tamil

 தேவுனி கடப்பா கோயில்

தேவுனி கடப்பா கோயில்

இந்த கோயில், தேவுனி கடப்பா என்ற பெயரால் பிரபலமாக உள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தின்போது, பெருவாரியான முஸ்லிம் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ததை பார்க்க முடியும்.

PC: OneIndia Tamil

தொழுகை

தொழுகை

இஸ்லாமியர்கள் தொழுகை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இந்த பெருமாள் கோயிலில் வந்து வழிபடுவதையும் முக்கியமாக கருதுகின்றனர் சில இஸ்லாமியர்கள்.

 அர்ச்சனை

அர்ச்சனை

பெண்கள் கைகளில் பூக்கள், வெல்லம், கரும்பு துண்டுகள், மஞ்சள் மற்றும் வேப்பம்பழம் போன்றவற்றை எடுத்து வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுப்பது வழக்கம்.

PC: OneIndia Tamil

கொளுத்தும் வெய்யில்

கொளுத்தும் வெய்யில்

இந்த பகுதியில் அளவுக்கதிகமான வெய்யில் கொளுத்தும். யுகாதி நாட்களில் மிக அதிக வெப்பத்தினால் நிறைய உயிரிழப்புகூட ஏற்படும். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் பெண்களும், ஆண்களும், சுவாமி தரிசனத்திற்காக காத்திருப்பார்கள்.

பெரிய தர்க்கா

பெரிய தர்க்கா

இந்த கோயிலுக்கு எப்படி இஸ்லாமியர்கள் வருகை தருகிறார்களோ அந்த மாதிரி இங்குள்ள பெரிய தர்க்காவுக்கு இஸ்லாமியர்களுடன், இந்துக்களும் சேர்ந்து வழிபாடு செய்கின்றனர்

திருப்பதி வெங்கடாச்சலபதி

திருப்பதி வெங்கடாச்சலபதி

கடப்பா லட்சுமி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதை தொடர்ந்து, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தங்களது ஆன்மீக பயணத்தை நிறைவு செய்வது வழக்கமாம். முஸ்லிம்கள் அதிக அளவில் கடப்பா கோயிலுக்கு வர நீண்ட நெடிய வரலாற்று காரணங்கள் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

Read more about: travel, temple, andra