» »வெள்ளையங்கிரி மலையில் ஆதியோகி - சிவராத்திரியின் போது என்னெல்லாம் நடக்குது தெரியுமா?

வெள்ளையங்கிரி மலையில் ஆதியோகி - சிவராத்திரியின் போது என்னெல்லாம் நடக்குது தெரியுமா?

Posted By: Udhaya

வெள்ளையங்கிரி மலையில் ஈஷா மையத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி ஆலயம் கின்னஸ் சாதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் ஆதியோகி ஆலயத்தின் பத்து உண்மைகளைப் பற்றி காணலாம் வாருங்கள்!

ஈஷா யோகா மையத்தின் சார்பில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலையை உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

வெள்ளியங்கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இந்த மையம் ஏராளமானோருக்கு யோகக் கலையை பயிற்றுவித்து வருகிறது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதிக்கு அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் மீது வனத்தை அழித்து கட்டிடங்கள் கட்டுவதாக பல்வேறு புகார்கள் உள்ளன. இதே போன்று தான் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட 112 அடி ஆதியோகி சிலை திறப்பு விழாவின் போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இருந்தபோதும் இந்த இடம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்த இடத்துக்கு சென்றால் என்னவெல்லாம் செய்யலாம், எங்கெல்லாம் போகலாம் என்பது குறித்து காண்போம்.

முதல் யோகி

முதல் யோகி


உலகினை படைத்த பரம்பொருளான ஆதியோகியாம் முதன்முதற் யோகி

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலம் இது.

PC: Isha

உணர்வுகளை அதிகரிக்க

உணர்வுகளை அதிகரிக்க


இந்த தலத்தில் இவ்வளவு பிரம்மாண்ட சிலை நிறுவ காரணம் நாட்டு மக்களின்

உணர்வுகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பதற்காகத்தான்.

PC: Isha

 விலையில்லா தியான மண்டபம்

விலையில்லா தியான மண்டபம்

82 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே விலையில்லா தியான மண்டபம்.

PC: Isha

மண்டபத்தின் பெருமை

மண்டபத்தின் பெருமை

மொத்த மண்டபமும் எந்த பாத்தியும் இல்லாமலும், திறந்த நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

youtube

 சிமெண்ட் இல்லை கான்கிரீட் இல்லை

சிமெண்ட் இல்லை கான்கிரீட் இல்லை

மற்ற கோயில் மண்டபங்களைப் போலல்லாது இந்த மண்டபம் முழுமையும் சிமெண்ட் அல்லது கான்கிரீட் பயன்படுத்தப்படாமல் முழுக்க முழுக்க பழைய முறையிலேயே கட்டப்பட்டுள்ளது.

Isha

கிரானைட் கற்கள் எவ்வளவு தெரியுமா

கிரானைட் கற்கள் எவ்வளவு தெரியுமா


அதிகளவில் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 50 டன் அளவுக்கு கிரானைட் கற்களும், 250 டன் அளவுக்கு இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

PC: Isha

http://isha.sadhguru.org/blog/inside-isha/happenings/sadhguru-at-the-rollins-chapel-dartmouth/

 இவ்வளவு பெரிய கட்டடம் வெறும் இவ்வளவு நாள்களிலா

இவ்வளவு பெரிய கட்டடம் வெறும் இவ்வளவு நாள்களிலா

மொத்த கட்டிடமும் வெறும் 4.5 மாதங்களில் கட்டப்பட்டதாகும். எல்லா பாகங்களும் அதன் அருகிலேயே செய்யப்பட்டு பின் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

PC: Isha

கட்டுமானர்களே இல்லை

கட்டுமானர்களே இல்லை

இந்த கட்டிடம் கட்ட வெளியாள்கள் யாரும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க ஈஷா மைய பொறியாளர்களே கட்டட வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது அவ்வளவு எளிதல்ல...

உடைந்த பாலத்தை மீண்டும் கட்டிய பொறியாளர் குழு

உடைந்த பாலத்தை மீண்டும் கட்டிய பொறியாளர் குழு

இந்த கட்டடம் கட்டிக்கொண்டிருக்கும்போது, ஆசிரமத்தையும், நெடுஞ்சாலையையும் இணைக்கும் பாலம் ஒன்று உடைந்துவிட்டது. அதையும் மீண்டும் கட்டி முடித்தனர் பொறியாளர்கள் குழு.

PC: Isha

திட்டமிட்டதுயார்

திட்டமிட்டதுயார்

இந்த ஆலயத்தின் வரைபடம் முதலிய திட்டம் தீட்டியவர் யாராக இருந்தாலும் அவர்கள் திறமைக்கு ஒரு பாராட்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு இது சிறப்பானதாக உள்ளது. நீங்களும் நேரில் சென்று வாருங்களேன்.

oneindia

வெள்ளயங்கிரி மலை

வெள்ளயங்கிரி மலை


இந்த ஆதியோகி கோயில் அமைந்துள்ள வெள்ளயங்கிரி மலை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். அங்கு நீங்கள் இயற்கை அன்னையை தழுவ ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன.

வெள்ளையங்கிரி மலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்

வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!


Silvershocky

ஆதியோகி கோயில்

ஆதியோகி கோயில்

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எல்லா கடவுளுக்கும் தலையாய கடவுள் தான் இந்த ஆதியோகி என்கின்றனர்.

சரி.. நீங்களும் ஆதியோகியை கண்டு களிக்கவேண்டுமா அப்போ இத படிங்க!

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

வெள்ளையங்கிரி மலை சுற்றுவட்டாரத்தில் பாம்பாட்டி சுனை, கைத்தட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களிஉருண்டை, ஆண்டி சுனை என எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கோயம்புத்தூரிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ள வெள்ளயங்கிரி மலைக்கு தனியார் வாகனங்கள் மூலமாக சென்றடையலாம்.

கோவையிலிருந்து 1.30 மணி நேரத்தில் வெள்ளயங்கிரி மலை ஆதியோகி கோயிலை அடையலாம்.

மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

கர்நாடகாவின் ஊட்டி என்றழைக்கப்படும் அற்புத சுற்றுலாத்தலம் எது தெரியுமா?

Read more about: travel, temple