» »8000 ஆண்டுகள் பழமையான நாகச் சிலை! ஆச்சர்யமளிக்கும் சுகப் பிரசவ வழிபாடு!

8000 ஆண்டுகள் பழமையான நாகச் சிலை! ஆச்சர்யமளிக்கும் சுகப் பிரசவ வழிபாடு!

Posted By: Udhaya

ஆதியிலிருந்தே நாக வழிபாடு தமிழர்களிடம் இருந்து வருகிறது. இதன் எச்சங்களாகத்தான் நாகத்தீவு , நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற ஊர் பெயர்கள் வெகுகாலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. நாகதேவதைகள் மீதான நம்பிக்கைகள் இன்றும் இப்பகுதி மக்களிடையே காணப்படுகிறது. நாகராஜாவின் அற்புதங்களும், நாக தேவதையின் அதிசயங்களையும் காண நீங்கள் நாகராஜா கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்

இந்தியாவிலுள்ள நாகத்துக்கான கோயில்கள் பற்றியும், 8000 ஆண்டுகள் பழமையான நாக சிலைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

சக்திதேவியின் இடுப்பெலும்பு

சக்திதேவியின் இடுப்பெலும்பு


சக்திதேவியின் இடுப்பெலும்பு விழுந்ததா குறிப்பிடப்படும் இடம் இலங்கையின் யாழ்ப்பாணம். அங்கு நாகபூசினி அம்மன் கோயில் சிறப்பு மிக்கது.

8000 ஆண்டுகள் பழமை

8000 ஆண்டுகள் பழமை


கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் பழமையான இந்த ஐந்தலை நாகச் சிலை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். நாகபூசனி அம்மன் கோயில் பழமையானதாக இருந்தாலும், தற்போது புணரமைக்கப்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தரும் இடமாக அமைந்துள்ளது.

தோஷங்களை நீக்கும் நாகபூசனி அம்மன்

தோஷங்களை நீக்கும் நாகபூசனி அம்மன்

நாகதோஷங்கள் உட்பட சகல தோஷங்களையும் நீக்குபவள் நாகபூசணி. திருமணம் ஆகாதவர்கள், தள்ளிப்போகிறவர்கள், கடன் பிரச்சனை உடையவர்கள் என அனைவரும் வந்து வழிபடும் தளமாக உள்ளது இந்த கோயில்.

மற்றபிற நாக கோயில்கள்

மற்றபிற நாக கோயில்கள்

நாகர்கோயில் நாகராஜா கோயில் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் கவனியுங்கள், உலகின் நாகராஜாவுக்கான ஒரே பெரும்கோயில் இதுமட்டும்தான்,

Rajesh Kakkanatt

நாகர்கோயில்

நாகர்கோயில்

இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட ஒரே நாகராஜாகோயில் நாகர்கோயிலின் மீனாட்சிபுரம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கிய திருவிழா நடைபெறும் இடம் இதுவாகும்.

Infocaster

 கேரளாவுக்குகந்த நாகவழிபாடு

கேரளாவுக்குகந்த நாகவழிபாடு


பொதுவாக கேரள மாநிலத்துக்கே நாகவழிபாடு உரியது என்ற நம்பப்பட்டு வந்தது. அங்கு பதினைந்தாயிரம் சர்ப்பக்காவுகள் அதாவது நாககோயில்கள் இருந்தன.
அதிலும் மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன்மேக்கோடு போன்ற இடங்கள் இந்திய அளவில் பிரபலமான சர்ப்பகாவுகள் ஆகும்.

Rajesh Kakkanatt

 மன்னார்சாலை

மன்னார்சாலை

கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த மன்னார்சாலை சர்ப்பக்காவு நாகராஜா கோயில். நாகராஜாவுக்கான பக்தர்களிடையே நாடுமுழுவதும் பெயர்பெற்ற கோயில் ஆகும்

Midhun Subhash

அப்பப்பா எவ்வளவு சிலைகள்

அப்பப்பா எவ்வளவு சிலைகள்


மன்னார்சாலை கோவிலில் 30,000 க்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும், மற்றும் மரத்தடிகளிலும் காணலாம். இந்த கோயில் அதிக சிலைகள் கொண்ட கோயில்கள் வரிசையில் இடம்பிடிக்கும்.

Manoj K

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 47 இல் அமைந்திருக்கும் ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், அமைந்துள்ளது இந்தக் கோவில். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும், இக்கோவில் அமைந்துள்ளது.

 கிலாதூர் நாகராஜா கோயில்

கிலாதூர் நாகராஜா கோயில்

கிலாதூர் நாகராஜா கோயில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுமார் 80கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோயிலில் மூன்றுக்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகள் அமைந்துள்ளன.

Ssriram mt

 காஞ்சிபுரம் காச்சபேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் காச்சபேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காச்சபேஸ்வரர் கோயிலும் நாக வழிபாட்டுக்கு சிறந்த இடமாகும். அதிலும் கார்த்திகை மாதம் இதற்கான சிறப்பான மாதமாகும்.

 நாகக்கன்னி வழிபாடு

நாகக்கன்னி வழிபாடு

கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொரநாட்டு கருப்பூர். இங்குள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் பிராகாரத்தில் அஷ்ட நாகக் கன்னியருக்கு தனிச்சன்னதி உள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பெட்டி காளியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு நாகக் கன்னியருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் முதலான சகல தோஷமும் விலகுகிறது. விரைவில் திருமணமும் கைகூடும்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்