» »சபரிமலையில் ஐயப்பனாக காட்சி தருவது இவரா? திடுக்கிடும் தகவல்கள்

சபரிமலையில் ஐயப்பனாக காட்சி தருவது இவரா? திடுக்கிடும் தகவல்கள்

Posted By: Udhaya

பொதுவாகவே, ஆதிக்க சக்திகள் தங்கள் வலிமைக்கு ஏற்ப வரலாற்றை திருத்தி எழுதுகின்றன என்பது நம் வரலாற்றைப் படித்து பார்த்தால் புரிய வரும். தமிழர்களின் பெருமையையும் சரி, உலக வரலாறுகளையும் சரி பல்வேறு வகையில் திரித்து எழுதி மக்கள் மனதில் நம்ப பதிந்துவிட்டனர். அந்த வகையில் சபரி மலை குறித்தும் ஒரு பிறழ்ச்சி கருத்து வந்துள்ளது. அதுதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

சபரிமலை என்பது கேரள மாநிலத்திலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎அரக்கியை வதம் செய்த பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடம் சபரிமலை என ‎வழங்கப்படுகிறது.

18 மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன.

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

மேலும் சபரிமலை பற்றியும், ஐயப்பனை பற்றியும் பல்வேறு கதைகள், படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அங்கு இருப்பது ஐயப்பனே இல்லை அது புத்தர் தியானம் செய்த இடம் என்று வெளியான தகவல் உங்கள் காதுக்கு எட்டியதா?

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள் 

ஆமாங்க... அது ஐயப்பன் இல்லியாம்ல... அப்படித்தான் சொல்லிக்குறாங்க.... அதுகுறித்து விரிவாக பாக்கலாம் வாங்க...

ஐயப்பனாக மாறிய புத்தர்

ஐயப்பனாக மாறிய புத்தர்

சில வருடங்களுக்கு முன் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, சபரிமலையில் இருப்பது ஐயப்பன் இல்லை அது புத்தர் என்ற செய்தி பரவியது.

அதுகுறித்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கிய போது நமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன.

இந்து மதத்தை ஒத்த புத்தர்

இந்து மதத்தை ஒத்த புத்தர்

புத்த மதம் தனியான மதமாக அறியப்பட்டாலும், அது இந்து மதத்திலிருந்து பிரிந்த மதமாகத்தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது.

ஒரு சில இந்து கோட்பாடுகளைத் தவிர்த்து தோற்றுவிக்கப்பட்டதுதான் புத்தமதமாகும்.

துளைக்கும் கேள்விக்கணைகள்

துளைக்கும் கேள்விக்கணைகள்

புத்த கோயிலாக இருந்த இடம் எப்படி ஐயப்பன் கோயிலாக மாறியது. சிலை எப்படி மாற்றப்பட்டது என பல்வேறு கருத்துக்கள், கேள்விகளாக துளைக்கப்பட்டன. அதுகுறித்து ஆய்வு செய்த போது நமக்கு கிடைத்த விடைகள்.

சாஸ்தா யார் பெயர்

சாஸ்தா யார் பெயர்


ஐயப்பன் சுவாமி பொதுவாக பக்தர்களால் சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். அதுதான் முதல் சந்தேகம் என்கின்றனர் எதிர்கருத்துக் கொண்டவர்கள்.

புத்தருக்கும் சாஸ்தா எனும் பெயர் உண்டு என்று ஆராய்ச்சி செய்த எதிர் கருத்தாளர்கள், சபரி மலை தவிர வேறு எங்கேயும் இப்படி ஐயப்பனை சாஸ்தா என்று அழைப்பதில்லை என்கின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் அழைத்தாலும் அது சபரிமலை ஐயப்பனின் தாக்கத்தால் அழைப்பார்களேயன்றி சாஸ்தா என்பது புத்தர் பெயர்தான் என அடித்து கூறுகின்றனர் அவர்கள்.

Abhilash Pattathil

ஆதாரம் இதுதான்

ஆதாரம் இதுதான்

டாக்டர். குஞ்சன் பிள்ளை என்பவர் 1931ல் திருவாங்கூர் கணக்கெடுப்பு பணியின் போது தயாரிக்கப்பட்ட அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார்.

(பக்கம் 334) அதாவது பத்தனம்திட்டா மாவட்டம் ( அந்த காலத்தில் திருவாங்கூர்) சபரிமலை மற்றும் தகளி ஆகிய ஊர்களில் புத்தருக்கு பெரிய கோயில் உள்ளது என்று கூறியுள்ளார்.

Sailesh

நீங்க பேயை மீட் பண்ணிருக்கீங்களா..அப்போ இங்க வந்தா நீங்க பேயை பாக்கலாம்

இந்து கோட்பாடு

இந்து கோட்பாடு

இந்து கோட்பாட்டின் படி கட்டப்பட்டதால் எளிதாக இது இந்து கோயில் என நம்பப்படுகிறது. மற்றப்படி இது புத்தர் கோயில்தான் என்கின்றனர் எதிர்கருத்தாளர்கள்.

Sailesh

 41 நாள்கள் விரதம் முறை

41 நாள்கள் விரதம் முறை

41 நாள்கள் விரதம் இருக்கும் முறையானது புத்த மதத்தில் கடைபிடிக்கப்படும் வாழ்க்கை நெறிமுறை மாற்ற பயிற்சியாகும். மன அழுத்தம் சோர்வு, சந்தோசம், சுகபோக உணவுகள், கவர்ந்திழுக்கும் உடைகள் என அனைத்தையும் 41 நாள்கள் கடைபிடித்தால் அதுவே பழக்கமாகிவிடும் என்கின்றனர் எதிர் கருத்தாளர்கள்.


இந்தியாவின் 20 அழகிய தீவுகள்!!!

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பரிக்க ஆனந்த கூச்சலிடும் சுவாமியே சரணம் ஐயப்பா என்பதிலுள்ள சரணம் எனும் சொல் புத்த வழிபாட்டுக்குரியது என்ற திடுக்கிடும் குண்டை தூக்கி எரிகின்றனர் எதிர் கருத்தாளர்கள்.

பெங்களூர்- கன்னியாகுமரி ஒரு சூப்பர் டூர் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா? இத படிங்க

ஆதாரம்

ஆதாரம்

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்ற புத்த வாசகத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் ஐயப்பனின் சுவாமியே சரணம் ஐயப்பா என்பது. புரிகிறதா எதிர் கருத்தாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!

நிச்சயமாக புத்தர் தான்

நிச்சயமாக புத்தர் தான்


இதையெல்லாம் தவிர்த்து புத்தர் தான் இங்குள்ளார் என அவர்கள் சொல்லும் காரணம் மிகவும் ஆச்சர்யமளிக்கிறது.

புத்தர் தனது கருத்துக்களின்படி, ஒரே இடத்தில் வாழ்ந்து தியானம் வழிபடவேண்டும் என்பதை ஆழ்ந்து நம்பினார். அதன்படி பார்க்கையில், சபரிமலை அடர்ந்த காடுகளுக்குள், மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது. அப்படியானால் வீடு போன்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளதற்கு அது நிச்சயமாக புத்தர்தான் என்கிறார்கள்.

சாதி பிளவின்மை

சாதி பிளவின்மை

இந்தியா முழுவதும் சாதி வேறுபாடுகள் நிறைந்திருக்கும்போது, சபரிமலை மட்டும் சாதி வேறுபாடுகளின்றி காணப்படுகிறது. இப்போதில்லை தொடங்கிய காலத்திலிருந்தே அப்படித்தான்.

அதற்கும் ஒரு காரணம் கூறுகின்றனர் அவர்கள்

vinod kannery

புத்தரின் சாதி பாராமை.

புத்தரின் சாதி பாராமை.

இந்துமதம் சாதி பிளவுகளால் பிரிந்துள்ளதன்காரணமாகத்தான் புத்த மதம் என்ற ஒன்றை பலர் நம்பிச் சென்றனர். புத்தர் தனது போதனைகளில் பிரிவு என்பதில்லை மனிதர்கள் அனைவரும் சமமாக அன்பு செலுத்தப்படவேண்டியவர்கள் என கூறுகிறார். அப்படியானால் இது புத்தர் கோயில்தானே என்கின்றனர் எதிர் கருத்தாளர்கள்.


சிங்கம் 3 படத்துல விசாகாவ தெரியுமா?

சிலைகள்

சிலைகள்

பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்து வந்தால் நம் மனதில் ஏற்படும் அமைதியையும், தெளிவையும் பாருங்கள். மற்ற தெய்வங்களைப் போலல்லாம் ஐயப்பன் அமர்ந்திருக்கும் விதமே நம்மை புத்துணர்ச்சியடைய செய்யும்.

ஆனால் இதைத்தான் அவர்கள் மற்றொரு கருத்தாக முன்வைக்கின்றனர். அதாவது புத்தர் தியானத்திலிருப்பதும் ஐயப்பன் அமர்ந்திருப்பதும் ஒரே மாதிரியாக இருக்கிறது.


பாம்புகளோட கோட்டை எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

சிலைகள் ஒப்பீடு

சிலைகள் ஒப்பீடு

இந்த சிலையை பாருங்கள் ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது என்கிறார்கள் எதிர் கருத்தாளர்கள்.

திருவிதாங்கூர் ரகசியங்களை வெளிக்காட்டும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

இந்தியாவில் வெளிநாட்டுப் பயணிகள் நிரம்பி வழியும் இடங்கள் எது தெரியுமா?

சீன அறிஞர் விளக்கம்

சீன அறிஞர் விளக்கம்

இதுகுறித்து சீன அறிஞர் தனது பயணக்கட்டுரைகளில் விளக்கமாக கூறியுள்ளார். இதுவரை சொன்ன காரணங்களையெல்லாம் விஞ்சும் வகையில் இனி வரும் கருத்துக்கள்தான் ஒருவேளை உண்மையில் அங்கிருப்பது புத்தர்தானோ என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது.

அதை கொஞ்சம் பொறுத்திருந்து அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்.

Dennis Jarvis


போடு தகிட தகிட... மலை போல் குவிஞ்சிருக்கும் புதையல்கள் இது இந்தியாவுல தானுங்கோ!

Read more about: travel, temple