» »கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!

கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!

Posted By: Udhaya

'கிரிதிஹ்' நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது.

கிரிதிஹ் நகரம் அதன் வடக்குத்திசையில் பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்துடனும், கிழக்கே தேவ்கார் மற்றும் ஜம்தாரா மாவட்டங்களுடனும், மேற்கே ஹஸாரிபாக் மற்றும் கோடெர்மா மாவட்டங்களும், தெற்கே தன்பாத் மற்றும் பொகாரா மாவட்டங்களுடனும் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. மலைகளின் மீது வீற்றுள்ள இந்த பழமையான சிறு நகரம் அண்டை மாநிலங்களிலிருந்து அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது.

எப்போது உருவாக்கப்பட்டது?

எப்போது உருவாக்கப்பட்டது?

1972ம் ஆண்டில் இந்த நகரத்தை மையப்படுத்திய கிரிதிஹ் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இது ஹஸாரிபாக் மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. 4853.56 ச.கி.மீ பரப்பளவில் பரந்திருக்கும் இந்த கிரிதிஹ் பகுதி ரூபி மைக்கா கனிமம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை கொண்டிருக்கிறது.

CaptVijay

உயரமான மலை

உயரமான மலை

கிரிதிஹ் என்னும் பெயரில் உள்ள ‘கிரி' என்பது மலையையும் ‘திஹ்' என்பது உள்ளூர் மொழியில் உயரமான பூமி எனும் பொருளையும் குறிக்கின்றன. கிரிதிஹ் மாவட்டத்தின் பெரும்பகுதி காடுகள் நிரம்பியதாக காட்சியளிக்கிறது.

 மரங்கள்

மரங்கள்

சால் மரம் இந்த காடுகளில் அதிகமாக காணப்படுகிறது. அதுதவிர மூங்கில், சேமல்,மஹுவா மற்றும் பலாஷ் மரங்களும் இந்த வனப்பகுதியில் மிகுதியாக வளர்ந்துள்ளன. மைக்கா உள்ளிட்ட ஏராளமான கனிம வளத்தையும் இந்த பூமி பெற்றிருக்கிறது.

Kabir.gyan

சாகசபூமி

சாகசபூமி

ஜார்க்கண்ட் மாநிலம் பல்வேறு சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூமியாகவே சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது. பல்வேறு துணிகர சாகச முயற்சிகளில் விருப்பமும் திறமும் உள்ளவர்கள் இங்கு அவற்றில் ஈடுபடலாம்.

Mukerjee

 நீர்விளையாட்டுக்கள்

நீர்விளையாட்டுக்கள்


கிரிதிஹ், பரஸ்நாத் மற்றும் சத்பஹார் மலைப்பகுதிகள் இந்த பொழுதுப்போக்குகளுக்கு ஏற்ற ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன. சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை விரும்பும் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த மலைப்பகுதியை தேடி வருகின்றனர்.

பாராகிளைடிங், நீர் விளையாட்டுகள் மற்றும் பாராசெய்லிங் போன்றவை இங்கு பிரசித்தமான சாகச பொழுதுபோக்கு அம்சங்களாக பயணிகளை ஈர்த்துவருகின்றன.

কাজারি

கொண்டலி அணை

கொண்டலி அணை

கிரிதிஹ் மாவட்டத்தில் சுற்றுலா அம்சங்களில் நீர் விளையாட்டு பொழுதுபோக்குகள் முதன்மையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள கொண்டலி எனும் அணைத்தேக்கப்பகுதி இந்த வகையான பொழுதுபோக்குகளின் கேந்திரமாக அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இங்கு பல்வேறு வகையான பறவையினங்களையும் பயணிகள் பார்த்து மகிழலாம்.

Bodhisattwa

சவாரிகள்

சவாரிகள்

நீர் விளையாட்டுகள் மட்டுமல்லாது யானைச்சவார், ஒட்டகச்சவாரி போன்றவையும் இதர சுவாரசிய அனுபவங்களாக இங்கு காத்திருக்கின்றன. விருப்பம் உள்ளவர்கள் படகுச்சவாரி, பாறையேற்றம் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.

Rms77

 பலூன் சுற்றுலா

பலூன் சுற்றுலா

‘ஹாட் ஏர் பலூன் ரைட்' எனும் பலூன் சவாரியும் கிரிதிஹ் சுற்றுலாத்தலத்தில் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆரம்ப கால விமானப்பயண தொழில் நுட்பமாக விளங்கிய இந்த பலூன் பறப்பு தற்போது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்தப்படுகிறது.

நிபுணர்கள் அளிக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டலுடன் இந்த ‘பறக்கும் அனுபவத்தில்' பயணிகள் ஈடுபடலாம். இருப்பினும் தங்களது மனோநிலை, உடல் நிலை போன்றவற்றில் கவனத்தில் கொண்டு இது போன்ற சாகச முயற்சிகளில் பயணிகள் ஈடுபடுவது சிறந்தது.

Kropsoq

பாராசூட்

பாராசூட்

பாராசெயிலிங் எனும் மற்றொரு துணிகர சாகச பொழுதுபோக்கு இப்பகுதியில் பிரபல்யாக விளங்குகிறது. இங்கு சாகசப்பிரியர்கள் 300 அடி உயரத்தில் பாராசூட் பறப்பில் ஈடுபடலாம். நிலப்பகுதியில் ஒரு ஜீப் மூலமாகவோ, நீர்ப்பரப்பில் ஒரு மோட்டார் படகு மூலமாக பாராசூட் இழுத்துச்செல்லப்படுகிறது. அதில் அந்தரத்தில் தொங்கியபடி பயணிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை ரசிக்கலாம்.

Unknown

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்