» »சிவராத்ரியில் இந்த தலங்களுக்கு சென்றால் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் கோடி பலன்கள்!

சிவராத்ரியில் இந்த தலங்களுக்கு சென்றால் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் கோடி பலன்கள்!

Written By: Udhaya

வேலைப்பளு காரணமாக சரிவர கோயில்களுக்கு சென்று வரமுடியாதவர்கள், நிச்சயம் கைவிடக்கூடாத ஒன்று இந்த சிவராத்திரி. பக்தி இருந்தாலும் கோயில்களுக்கு செல்லமுடியவில்லையே என்ற ஏக்கம் நிறைய பேருக்கு இருக்கும். அப்படி வருடம் முழுமைக்கும் கோயில்களுக்கு செல்லாவிட்டாலும், இந்த சிவராத்திரி நாளன்று கோயிலுக்கு சென்று வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும், அள்ள அள்ள குறையாமல் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். சரி இந்த நாளில் கட்டாயம் செல்லவேண்டிய கோயில்கள் எவை என்று தெரியுமா?

 திருவானைகாவல்

திருவானைகாவல்

திருவானைகாவல் நகரில் ஜம்புகேஸ்வரர் ஆலயம் அமைந்திருப்பதால் இது சிவபக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பக்தர்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தேவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலின் உட்பிரகாரத்தில் அமைத்துள்ள பஞ்சபூதஸ்தலம் எனப்படும் புனித நீர் தொட்டியில் நீராடினால் பாவங்கள் தீர்ந்து மோட்சத்துக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

PC: Hari Prasad Nadig

எப்படி செல்வது?

எப்படி செல்வது?


தஞ்சாவூரிலிருந்து மிகவும் அருகில் உள்ள இந்த இடம் போக்குவரத்துக்கு எளிதான வகையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 1.5 மணி நேரத்தில் சாலை மார்க்கமாக வந்தடையலாம்.

llya Mauter

திருகாலஹஸ்தி

திருகாலஹஸ்தி

ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில் நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு மாநகராட்சியாகும். ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்தியாவிலுள்ள முக்கிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஸ்ரீ காளஹஸ்தி எனும் பெயரில் ஸ்ரீ, காள மற்றும் ஹஸ்தி ஆகிய மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஸ்ரீ என்ற சொல் சிலந்தியையும், காள எனும் சொல் பாம்பையும், இறுதியாக வரும் ஹஸ்தி எனும் சொல் யானையையும் குறிக்கின்றன.

Krishna Kumar

 நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை. தெலுங்கு மொழியில் இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு" ஆயிரம் லிங்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு" என்பது பொருள். நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உள்ள மலைகள் சிவலிங்கங்கள் போன்று காட்சியளிப்பதே இப்படி ஒரு பெயர் ஏற்படக்காரணமாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காகவே ஏராளமான பயணிகள் இங்கு சுற்றுலா வருகின்றனர்.

 திருவண்ணாமலை

திருவண்ணாமலை

இந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது.

ஒவ்வொரு பௌர்னமி நாளன்றும் சிவபெருமானை வழிபடுவதற்காக பக்தர்கள் வெறும் காலோடு ஆணைமலை குன்றை சுற்றி நடக்கிறார்கள். 14 கி.மீ. தூரம் வெறும் காலோடு நடந்து செல்வதன் மூலம், சிவபெருமான் மீது உள்ள தங்கள் பக்தியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

KARTY JazZ

பண்டிகைகள்

பண்டிகைகள்

திருவண்ணாமலை ஒரு சிற்றூர். சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சிறியோருக்கும், பெரியோருக்கும் இது பாதுகாப்பான நகரம் ஆகும். இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள விபத்துகள் மற்றும் திருட்டுக்களின் எண்ணிக்கை, நாட்டின் குற்ற விகிதத்தோடு ஒப்பிடப்பட்டால் மிகவும் குறைவானது.

Unknown

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இந்து மதத்தினர், தம் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று வர வேண்டிய ஏழு புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றான இந்நகரம், இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது. இந்து மதப் புராணங்களின் படி, அவ்வேழு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோர் கண்டிப்பாக மோட்சத்தை அடைவர் என்று நம்பப்படுகிறது. இந்நகரம், சிவ பக்தர்கள் மற்றும் விஷ்ணு பக்தர்கள் ஆகிய இருபிரிவினருக்கும் புனித ஸ்தலமாகும். காஞ்சிபுரம் நகரில், சிவ பெருமான் மற்றும் மஹா விஷ்ணுவிற்காக எழுப்பப்பட்ட பல கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுள் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள வரதராஜ பெருமாள் கோயிலும், சிவனுக்காக எழுப்பப்பட்டுள்ள ஏகாம்பரநாதர் கோயிலும் மிகப் பிரபலமானவை.

Keshav

கடல் கடந்து வாணிபம்

கடல் கடந்து வாணிபம்

பல்லவர்கள், சீனர்களோடு வர்த்தகம் செய்து வந்தனர். ஏழாம் நூற்றாண்டில், இங்கு வருகை தந்த சீனப் பயணியான யுவான் சுவாங், தன் பயணக் குறிப்பில், வீரம், கல்வி, மற்றும் அன்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களாகவும், சமூக நீதி போற்றுபவர்களாகவும், காஞ்சிபுரம் மக்கள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பதினோராம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி, பதினாலாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். சோழர்கள் காஞ்சிபுரத்தை தங்கள் தலைநகரமாகக் கொள்ளவில்லை; எனினும், இது முக்கியமான ஒரு நகரமாகவே அப்போதும் திகழ்ந்தது.

Ilya Mauter

சிதம்பரம்

சிதம்பரம்

கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. நாற்திசையிலும் நான்கு பிரம்மாண்ட கோபுர வாசல்களுடனும் வெகு விரிவான கட்டிடக்கலை அம்சங்களுடனும் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான கோயில் வளாகம் நடுநாயகமாக வீற்றிருக்க - அதைச்சுற்றி இந்த சிறுநகரம் உருவாகியிருக்கிறது. இக்கோயிலில் நடராஜர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டுள்ளார். தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம். பரபரப்பு மற்றும் சந்தடி ஏதுமின்றி அமைதியான சூழலைக்கொண்டிருக்கும் இந்த கோயில் நகரம் ஆன்மீக யாத்ரீகர்களுக்கும், கோயிற்கலை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான யாத்ரீக சுற்றுலாஸ்தலமாக திகழ்கிறது.

Mlakshmanan

நந்தவனப்பகுதி

நந்தவனப்பகுதி

தில்லை மரங்கள் அடர்ந்த நந்தவனப்பகுதியாக இருந்த காரணத்தால் ஆதியில் ‘தில்லை' என்ற பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த தில்லையில் ‘திருச்சிற்றம்பலம்' என்ற பெயரில் அழைக்கப்பட்ட பிரம்மாண்டமான ‘நடராஜப்பெருமான் கோயில்' வீற்றிருந்த காரணத்தால், நாளடைவில் ‘திருசிற்றம்பலம்' என்ற கோயிலின் பெயரே ஊரின் பெயராகவும் மாறியது. காலப்போக்கில் இது ‘சிற்றம்பலம்' என்று மருவியும் ‘சிதம்பரம்' என்று திரிந்தும் வழக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. இப்பெயருக்கு வேறு சில விளக்கங்களும் தரப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்லையம்பலம் என்ற பெயரிலும் புலவர்கள் இந்நகரத்தை தங்கள் பாடல்களில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

Destination8infinity

அஷ்ட மூர்த்தம்

அஷ்ட மூர்த்தம்

இவற்றுடன் சேர்த்து உயிர், தாய் ஆன்மா எனும் மூன்று தலங்களும் சேர்ந்து அஷ்ட மூர்த்தம் அதாவது எட்டு மூர்த்தி என அழைக்கப்படுகிறது. இதில் உயிரெனப்படுவது, கண்டியூர் ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள பிரமசிரகண்டீசுவரர் கோயில் பிரம்மனுக்காக எழுப்பப்பட்டதாக கருதப்பட்டாலும், இதுவும் ஒரு சிவ தலமாகும்.

சிவபெருமான் தன் சூலத்தால் பிரம்மனின் தலையை கொய்த தலம் இதுவாகும்.

Ssriram mt

திங்களூர்

திங்களூர்

திங்களூரில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோவில் இந்தியா முழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சந்திர பகவானை வழிபட பிரத்யேகமாக இங்கே ஒரு வழிபாட்டுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தக்க்ஷ பிரஜாபதியின் சாபத்தில் இருந்து சந்திர பகவானை காப்பாற்றி திங்களூரிலேயே தங்குமாறு பணித்து, ஜாதகத்தில் சந்திரனின் இடமாற்றத்தால் துன்பப்படும் மக்களுக்கு அருள்பாலிக்குமாறு சந்திரனை சிவன் பணித்தார் என நம்பப்படுகிறது. தங்கள் ஜாதகக் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்றளவும் ஏராளமான மக்கள் திங்களூரில் வீற்றிருக்கும் சந்திர பகவானை தரிசிக்கின்றனர். இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திங்களூர் கைலாசநாதர் கோவில் காவிரி ஆற்றின் கழுமுகப் பகுதியில் அமைந்திருக்கிறது.

Rsmn

சீர்காழி

சீர்காழி

தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி. தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது. புராணங்களின் படி பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினாராம். அப்படி பிரம்மன் வேண்டிய இடம் சீர்காழியாகும். பிரம்மன் வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தோணியிலேற்றி உயிர்களை காப்பாற்றியதால், சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன. சிவபெருமான் ஒரு தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் "தோணியப்பர்" என அழைக்கப்படுகின்றார். சீர்காழி "தோணிபுரம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது.

Shriramsrinivas wki

சப்த தில்லை

சப்த தில்லை

மேலும் சப்த தில்லை என்றழைக்கப்படும் கோயில்களும் தமிழகத்தில் உள்ளன. அவை

1.திருநெய்ஸ்தானம்
2..திருபுரந்துருத்தி
3.திருசோற்று துறை
4.திருவையாறு
5.திருகண்டியூர்
6.திருபழனம்
7.திங்கலூர்

Shriramsrinivas wki

சப்த விட கோவில்கள்

சப்த விட கோவில்கள்

சில கோயில்கள் சப்தவிடக்கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை

1.திருவாரூர்
2.திருகாரவாசல்
3.திருகுவளை
4.திருவாய்மூர்
5.திருமறைக்காடு
6.திருநாகை
7.திருநள்ளார்

Ssriram mt

Read more about: travel, temple