Search
  • Follow NativePlanet
Share
» »திருமணங்கள் கைக்கூட திருமணச்சேரி செல்லுங்கள்

திருமணங்கள் கைக்கூட திருமணச்சேரி செல்லுங்கள்

திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர் பெற்றது. துணை கிடைக்காத தனி நபர்கள் திருமணச்சேரி கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். திருமணச்சேரி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் தான். நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் சிற்பக்கலை அம்சம் மிகுந்த கோவில் நகரம் தான் இந்த திருமணச்சேரி. சாலை மார்க்கமாகவும், தொடர்வண்டி மூலமாகவும் இந்த பட்டணத்தை எளிதில் அடையலாம். மயிலாடுதுறை சந்திப்பு மற்றும் கும்பகோணம் ரயில் நிலையம் ஆகியவை இந்த நகரத்திற்கு அருகாமையில் இருக்கின்றன. சாலை பாதையும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் இருந்து புதுச்சேரி-கூடலூர் சாலை வழியாக திருமணச்சேரியை அடையலாம். ஆண்டு முழுவதும் திருமணச்சேரியின் வானிலை சிறப்பாக இருப்பதால், எல்லா காலங்களிலும் இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்.

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்

திருமணச்சேரி அருகே இருக்கும் ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புராணத்தின்படி சிவபெருமானை மணந்துகொள்வதற்காக பார்வதி தேவி இங்கு மறுபிறப்பு மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. 3.5 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கோவில் வளாகம் பெரிதாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 6 மணி முதல் மதிய 12 மணி வரை, பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோவிலில் வழிபடலாம். வாழ்க்கை துணை கிடைக்காதவர்கள் அடிக்கடி வந்து போகும் ஒரு இடமாக இக்கோவில் திகழ்கின்றது.

சிவபெருமான் நடராஜராக

சிவபெருமான் நடராஜராக

சிவபெருமான் நடராஜராக இருக்கும் ஒரு ஸ்தலமும், தக்‌ஷணாமூர்த்தி, பிரம்மா தேவன், சுவாமி லிங்கோத்பவார் மற்றும் துர்க்கா தேவி ஆகியோருக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களும் இருக்கின்றன. வரதராஜ ஸ்வாமிகளின் துணைவியரான பூ தேவியும், ஸ்ரீ தேவியும் வரதராஜ ஸ்வாமிகளோடு இந்த சந்நிதியில் வழிபடப்படுகின்றார்கள். இக்கோவிலுக்கு திருவிழாக்காலங்களில் வருகை தருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். கார்த்திகை தீபம், நவராத்திரி, ருத்ர தரிசனம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை இக்கோவிலில் கொண்டாடப்படும் விசேஷித்த பண்டிகைகள் ஆகும்.

தேவாரம் கோவில்

தேவாரம் கோவில்

இக்கோவிலின் உள்ளே தினந்தோறும் பக்தர்கள் தேவாரம் பாடல்களை ஓதுவார்கள், அதனாலேயே இது தேவாரம் கோவில் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தேவார பாடல்களை கேட்பதம் மூலமாக அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மற்றும் வலிகளில் இருந்து பக்தர்கள் விடுதலை பெற முடியும் என்று நம்பப்படுகின்றது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாட்டுப்புற கலைகளையும், பாரம்பரிய சடங்குகளையும் விளம்பரம் செய்யும் இடமாக இந்த கோவில் திகழ்கின்றது. இக்கோவிலின் கட்டமைப்பும், நிலையாக ஓதப்படுகின்ற புனித வேதங்களும் உங்களை மெய்மறக்கச் செய்துவிடும். திருமணச்சேரியை அடைந்த பிறகு இந்த கோவிலை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.

 பூச்சூடி பெருமாள் கோவில்

பூச்சூடி பெருமாள் கோவில்

பூச்சூடி பெருமாள் கோவில் திருமணச்சேரியின் அருகில் இருக்கிறது. இது வைணவர்களுடைய புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலம். மற்றவர்களுக்கும் இது ஒரு முக்கிய வழிபாட்டு ஸ்தலம் தான், இன்னும் இவ்விடத்தில் பாரம்பரிய சடங்குகளும், சம்பிரதாயங்களும் இங்கே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மகா விஷ்ணு இங்கு பூச்சூடி பெருமாளாக வழிபடப்படுகின்றார். பல்வேறு பாரம்பரிய இந்து பண்டிகைகள் இவ்விடத்தில் கொண்டாடப்படுகின்றன. பூச்சூடி பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தால், காலம் உறைந்துபோனது போல நீங்கள் இக்கோவிலுடைய காலகட்டத்திற்குள் மூழ்கிவிடுவீர்கள். நீங்கள் திருமணச்சேரியை அடைந்த பிறகு நிச்சயம் காண வேண்டிய இடங்களில் பூச்சூடி பெருமாள் கோவிலும் ஒன்று.

பஞ்சலோக உத்சவர்

பஞ்சலோக உத்சவர்

'பஞ்சலோகம்' என்றால் ‘ஐந்து உலோகங்கள்'வெள்ளி, இரும்பு, பொன், ஈயம் மற்றும் செம்பு ஆகிய ஐந்து உலோகங்களின் கலப்பு தான் இந்த பஞ்சலோகம்; கோவிலுக்கு சிலை வடிவமைக்கும் கலைஞர்கள் ஆதிகாலம் முதலாக இந்த பஞ்சலோகத்தை பயன்படுத்தி வந்தார்கள். திருமணச்சேரிக்கு பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கு ஒரு பவனி பஞ்சலோக உத்சவா. இந்த பவனியின் சிறப்பே, பாதுகாப்பாக அணிவகுத்து கொண்டு வரப்படும் பஞ்சலோக சிலைகள் தான். அண்டை நகரங்களிலும், பட்டணங்களிலும் இருந்து மக்கள் இந்த பவனியை காண வருகின்றார்கள். வேதங்களை ஓதுவதும், இந்த சிலைகளின் காட்சியும் இதன் அமைப்பை மேலும் மெருகேற்றுகின்றன. பஞ்சலோக உத்சவம் நிகழும் போது ஒருவர் திருமணச்சேரிக்கு வருகை தந்தால், அது அவருடைய மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும்.

சிவராமபுரம் அக்ரஹாரம்

சிவராமபுரம் அக்ரஹாரம்

சிவராமபுரம் அக்ரஹாரம் திருமணச்சேரி கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். அக்ரஹாரங்கள் என்பவை தனித்துவம் மிக்க பிராமண சமுதாயத்தினரின் கிராமங்கள் ஆகும். அவை ஒன்றன் பின் ஒன்றாக கட்டப்பட்டு இருக்கின்றன. ஒரு வீட்டின் சுவர் பக்கத்து வீட்டிற்கும் சுவராக இருக்குமாறு அமைந்துள்ளன. சிவபுரம் அக்ரஹாரமும் இதில் விதிவிளக்கு அல்ல. வட தெற்கு திசையில் வீடுகள் கட்டப்பட்டு, ஒரு முணையில் மகா விஷ்ணுவின் கோவிலும், மறு முணையில் சிவபெருமானின் கோவிலும் இருக்குமாறு அமைந்துள்ள இக்கிராமம் தமிழ் கட்டிடக்கலைக்கு சிறப்பான உதாரணம் ஆகும். அக்ரஹாரம் என்கிற வார்த்தையே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூமாலையை குறிக்கின்றது. இதே காரணத்திற்காக இந்த கிராமம் கடவுளுடைய உடலை அலங்கரிக்கும் மாலையின் வடிவத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வரும் கடினமான கிராம கட்டிடக்கலையை புரிந்துகொள்ள சிவராமபுரம் அக்ரஹாரத்துக்கு வருகை தருவது பரிந்துரைக்கப்படுகின்றது.

சப்தசாகரா தீர்த்தம்

சப்தசாகரா தீர்த்தம்

ஏழு கடல்களின் தண்ணீர்" என்பது சப்தசாகரா தீர்த்தம் என்பதன் பொருள். ஏழு மகா சமுத்திரங்களின் தண்ணீர் இந்த தொட்டியை நிறப்புவதாக புராணம் கூறுகின்றது. இது ஸ்ரீ உத்வகநாதா ஸ்வாமி கோவிலுக்கு அருகில் உள்ளது. திருமணச்சேரியில் இருந்து இவ்விடத்தை எளிதில் அணுகலாம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புனித தொட்டி குழந்தை வரம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் வேண்டுதல் செய்துவிட்டு சப்தசாகரா தீர்த்தாவில் முழுகினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என எண்ணற்ற பக்தர்கள் நம்பி வருகின்றனர். சமய நோக்கத்தோடு வராவிட்டாலும், திருமணச்சேரிக்கு வரும் பக்தர்கள் சப்தசாகரா தீர்த்தத்தில் மூழ்குவதற்காகவாவது இவ்விடத்திற்கு நிச்சயம் வருகை தர வேண்டும். சப்த சாகரா தீர்த்தத்தில் மூழ்கிய பிறகு பக்தர்கள் ராகு கிரகத்தை அதற்குரிய கோவிலில் வழிபடுவார்கள்.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more