» »காய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா? நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்! #Travel2Temple 3

காய்ச்சலுக்கும் கடவுள் இருக்கு தெரியுமா? நீராடினால் எப்பேர்பட்ட நோயும் பறந்தோடும்! #Travel2Temple 3

Written By: Udhaya

நோய் தீர்க்கும் தலங்கள் என பல கோயில்களை நாம் பார்த்திருக்கிறோம். அங்கெல்லாம் சென்றால் குறிப்பிட்ட நாள்களில் நோய் தீரும் என்று நம்புகின்றார்கள் சிலர். அந்த வகையில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் காய்ச்சலுக்காக பிரபலமானது. இந்த கோயிலில் நோய் தீர்க்க தனி கடவுளே இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வாருங்கள் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாதர் கோயிலுக்கு செல்வோம்.

நவபாஷாணத்தில் செய்த பெருமாள் சிலை..! உலகிலே வேறெங்கும் இல்லாத அதிசயம்... #Travel2Temple 2

 தெய்வங்கள்

தெய்வங்கள்

இந்த கோயிலின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை, பாலாம்பிகை. இந்த தலத்தின் விருட்ச மரமாக பனை மரம் அமைந்துள்ளது. பனை மரத்தை விருட்ச மரமாகக் கொண்டுள்ள ஒரு சில கோயில்களும் இதுவும் ஒன்றாகும்.

இதன் தீர்த்தம் கொள்ளிடம். லட்சுமி தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம் ஆகும். இந்த கோயில் 1000 வருடங்கள் பழமையானதாக நம்பப்படுகிறது.

பா.ஜம்புலிங்கம்

 எப்படி செல்வது

எப்படி செல்வது

இந்த கோயில் அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி பகுதியில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து 26கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். தஞ்சாவூரிலிருந்து அம்மன்பேட்டை, திருவையாறு, பழையப்பட்டி வழியாக திருமழப்படியை அடையலாம்.

திருவிழா

திருவிழா

இந்த கோயிலில் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் முக்கியமானதாகும். மேலும் இந்த கோயிலில் தினமும் வழிபாடு நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூசை நடைபெறுகிறது. மதியம் 12.30மணி வரை திறந்திருக்கும் நடை பின் பூட்டப்பட்டு, மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.

பா.ஜம்புலிங்கம்

தல சிறப்பு

தல சிறப்பு

இந்த கோயிலின் மூலவரான வைத்தியநாத சுவாமி, சுயம்பாக தோன்றி அருள்பாலிக்கிறார். இந்த தலத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது அதாவது, எல்லா சிவன் கோயிலிலும் சிவபெருமானுக்கு முன் நிற்கும் நந்திக்கு இந்த கோயிலில் தான் திருமணம் நடைபெற்றதாம்.
பா.ஜம்புலிங்கம்

நோய் தீர

நோய் தீர


கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கி, பூசை செய்தால் சில நாட்களில் குணமாகுமாம். மேலும் இங்கு நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் அதிகம் பேர் வருகை தருகிறார்கள்.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைத்து வழிபடுகின்றனர். அவர்களுக்கு நோய் உடனடியாக குணமாகிறது என்பதும் இறைவனின் அற்புதமாக இருக்கிறது.

2017tour

நந்தி திருமணம்

நந்தி திருமணம்


பங்குனி புனர்பூச நட்சத்திரத்தில் நந்திக்கு இந்த கோயிலில் திருமணம் நடக்கிறது. நந்தி திருமணம் பார்த்தால் முந்தி திருமணம் நடக்கும் என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான இளம்பெண்கள் இந்த கோயிலுக்கு படையெடுக்கின்றனர். ஒரே கல்லில் செய்யப்பட்ட முருகன் சிலை ஒன்று தனிச் சந்நிதியில் அமைந்துள்ளது.

பா.ஜம்புலிங்கம்

நான்கு நந்திகள்

நான்கு நந்திகள்

வேறெந்த கோயிலிலும் இல்லாத அற்புதமாக இந்த கோயிலில் நான்கு நந்திகள், அதுவும் பிரம்மனுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ளன. நந்திக்கும் சிவனுக்கும் இடையில் இருக்கும் மூன்று குழிகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் 41 நாட்களில் திருமணம் நடக்கும் என்பது இந்த கோயிலின் நம்பிக்கையாக இருக்கிறது.

நவபாஷாணத்தில் செய்த பெருமாள் சிலை..! உலகிலே வேறெங்கும் இல்லாத அதிசயம்... #Travel2Temple 2

பா.ஜம்புலிங்கம்

Read more about: travel temple tamilnadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்