Search
  • Follow NativePlanet
Share
» »தீர்க்கசுமங்கலியாக வாழ வேண்டுமா இங்கு செல்லுங்கள்!

தீர்க்கசுமங்கலியாக வாழ வேண்டுமா இங்கு செல்லுங்கள்!

By Udhaya

காரடையான் நோன்பு கணவனோடு எப்போதும் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதற்காக சுமங்கலிகளுக்கு தீர்க்க மாங்கல்யத்தை அளிப்பதற்காக மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் இல்லத்தரசிகள் கட்டாயம் சென்று வழிபடக்கூடிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த விரதத்தை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் அழைப்பார்கள். தங்கள் கணவருக்கு ஆயுள் நீட்டிக்க வேண்டி விரதம் இருப்பதால் இது மிகவும் புனிதமான நோன்பாக கடைபிடிக்கப்படுகிறது. மாசி மாத நாளில் ஆரம்பித்து, பங்குனி முதல் நாள் முடிக்கவேண்டும். அதே நேரத்தில் இந்த விரதம் இருக்கமுடியாதவர்கள் அதே பலனைப் பெற இந்தந்த கோயில்களில் ஒன்றுக்கு சென்றுவரவேண்டும்.

பஞ்ச மங்களத்தலம்

பஞ்ச மங்களத்தலம்"

பஞ்ச மங்களத்தலம்" என்று அழைக்கப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம் ஆகும். ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை, இக்கோவில் விமானம் மங்கள விமானம், இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

Ssriram mt

 எப்படி செல்வது

எப்படி செல்வது

கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஆடுதுறையிலிருந்து 2கிமீ தூரம் சென்றால் நாம் இந்த திருமங்களக்குடியை அடையலாம். இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் பிராணநாதேஸ்வரர். இந்த கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். தாய்மார்கள் தங்கள் கணவன் ஆயுளுக்காக விரதமிருந்து இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

இங்குள்ள கடவுளர்கள்

இங்குள்ள கடவுளர்கள்

முக்கிய கடவுள் பிராணநாதேஸ்வரர். தாயாள் மங்களாம்பிகை. இவர்கள் சிவனும், பார்வதியுமாவர். இந்த கடவுள் சுயம்புலிங்கமாக காட்சிதருகிறார்.

பா.ஜம்புலிங்கம்

கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்கள்

அருகில் காணப்படும் 6 கல்வெட்டுக்கள் சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர அரசர்களின் ஆட்சியைப் பற்றிக்குறிப்பிடுகின்றன. மேலும் இங்குள்ள கோயிலைக் கட்டியவர்கள் யார் என்று சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் சோழர்கள் அல்லது பல்லவர்களில் ஒருவர் கட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது..

Ssriram mt -

அமைப்பு

அமைப்பு

கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு மங்கலதீர்த்தம், அழகிய விமானம், அம்மன் சன்னதி விமானம்,. அகஸ்தீஸ்வரர் சன்னதி முதலியன முக்கியமாக அமைந்துள்ளன.

பா.ஜம்புலிங்கம்

 திருமணத்தடை

திருமணத்தடை

இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும். பல ஆண்டுகளாக தட்டிக்கழியும் வரன்கள் கைக்கூடும். மேலும் திருமண தோஷங்கள் இருந்தால் இந்த கோயிலில் ஒருமுறை வந்து வழிபட்டால் அப்போதே நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவமும் நம்பிக்கையுமாகும்.

Ssriram mt

 தீர்க்கசுமங்கலி

தீர்க்கசுமங்கலி

தீர்க்க சுமங்கலியாக வாழ சுக்கிரனின் அனுக்கிரகம் முக்கியமாகும். எனவே பெண்கள் வருடத்திற்க்கு ஒரு முறையேனும் கணவனுடன் சேரந்து சுக்ர தலமான ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபட்டு, இங்குள்ள தீர்த்தத்தில் குளித்தால் மாங்கல்ய தோஷங்களை போக்கி தீர்க்க சுமங்கலி யோகத்தை தரும் என்று நம்பப்படுகிறது.

Ssriram mt

அருகிலுள்ள தலங்கள்

அருகிலுள்ள தலங்கள்

இங்கிருந்து அரை கிமீ தொலைவில் சூரியன் கோயில் அமைந்துள்ளது. கஞ்சனூர் இங்கிருந்து 2கிமீ தூரம் ஆகும். இங்கிருந்து 3கிமீ தொலைவில் விஸ்வநாதபுரம் விசாலாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. திருப்பாணடல் காசி சிவன் கோயில் 6கிமீ தொலைவிலும், ஆடுதுறை சிவன் கோயில் 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பா.ஜம்புலிங்கம்

விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில்

விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில்

விருத்தாச்சலத்தில் விருத்தாம்பாள் சகேதம் வீற்றியுள்ளார் சிவபெருமான் அவதாரமான விருத்தகிரீஸ்வரர். தீர்க சுமங்கலி யோகம் பெற இக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். இங்கு அம்மையும் அப்பனும் வயோதிகர்களாய் அருள் பாலிப்பது சிறப்பு.

Ssriram mt

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 25கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த விருத்தகிரீஸ்வரர் கோயில். உளுந்தூர்பேட்டை, மங்களம்பேட்டை, விஜயமானகரம் வழியாக ஒரு மார்க்கத்திலும். மங்களம்பேட்டை, பட்டி, எருமனூர் வழியாக இன்னொரு மார்க்கத்திலும் இந்த கோயிலை அடையலாம்.

அமைப்பு

அமைப்பு

26அடி உயர மதில்களையும், 660அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய பெரிய கோயில் இதுவாகும். இங்கு 16 தூண்களைக் கொண்ட மண்டபமும் இருக்கிறது.

நாயகிக்கு தனி சன்னதி, தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது.

Ssriram mt

இன்னொரு தலம்

இன்னொரு தலம்

திருச்சி லால்குடியில் உள்ள சப்த ரிஷீஸ்வரர் கோயிலில் அருள்பாளிக்கும் ஸ்ரீமதி அம்பாளும் தீர்க சுமங்கலி யோகத்தை வழங்குவதில் நிகரற்றவர் ஆவார். அவர் பெயரிலையே ஸ்ரீமதி என இருப்பதும் சிற்பத்தில் சுமங்கலி பெண்கள் அணியக்கூடிய கொலுசு அணிந்திருப்பதும் இத்தல சிறப்பாகும்.

Read more about: travel temple tamilnadu thanjavur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more