Search
  • Follow NativePlanet
Share
» »உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்

உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்

உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்

இந்து நம்பிக்கைகளின் படி நம்மை மிகவும் அச்சுறுத்தும் ஒரு தெய்வம் சனிபகவான். இவர் உயிரை எடுக்கும் எமனின் தம்பி. உண்மையில் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் படாதபாடு படுத்திவிடும். பெரும்பாலும் நம்மில் பலர் ஜோதிடர்களிடம் சென்று பரிகாரம் கேட்டு பணத்தையும் செலவழிப்பார்கள். அதைவிட மிகச்சிறந்த வழி அந்த சனி பகவானிடமே சரணடைவதுதான். இந்த 8 கோயில்களும் உங்களை மட்டுமல்லாது, உங்கள் முழு குடும்பத்தையும் சனியின் பார்வையிலிருந்து பாதுகாக்கும்.

சனி சிங்க்னாப்பூர்

சனி சிங்க்னாப்பூர்

சுவரே இல்லாத, மேற்கூரையும் இல்லாத ஒரு பெரிய பிரம்மாண்ட கோயிலை இந்தியாவில் எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? மகராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.

Vishal0soni

அமைப்பு

அமைப்பு

ஐந்தடி உயர கறுப்பு கற்களால் நடைமேடை போன்ற அமைப்பில் சனி பகவான் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இது உள்ளூர் மக்களால் சோனை என்று அழைக்கப்படுகிறது.

Singhmanroop

சுற்றுலா

சுற்றுலா

உலகெங்கிலுமிருந்து பத்துலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். எனினும் இங்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சீரடி நகரிலிருந்து 60 கி. மீ., தொலைவிலும், அகமது நகரிலிருந்து 35 கி. மீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி. மீ., தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி. மீ., தொலைவிலும், மும்பை நகரிலிருந்து 265 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் அவுரங்கபாத் விமான நிலையம் 90 கி. மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீராம்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

சனி தம் கோயில்

சனி தம் கோயில்


புதுதில்லியின் சத்தர்பூர் சாலையில் அமைந்துள்ளது இந்த கோயில். இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். உலகெங்குமிருந்து சனி பகவானை தரிசிக்க இங்கு வருகை தருகின்றனர்.

Mrmysterious

உலக சாதனை

உலக சாதனை

இந்த கோயிலில் உள்ள சனி சிலைதான் உலகிலேயே மிக உயரமானது. அதிலும் இயற்கையான பாறையில் செதுக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


புதுதில்லியிலிருந்து 25 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவாகும்.

எர்தானூர் சனி கோயில்

எர்தானூர் சனி கோயில்

தெலங்கானா மாநிலத்தில் மேடக் மாவட்டத்தில் உள்ளது எர்தானூர். இங்குள்ளது 20 அடி உயரமுள்ள சனி சிலை. இதுவும் சனி பகவானின் பார்வையை உங்கள் ராசியிலிருந்து பார்வையின் கோரத்தை குறைக்க நீங்கள் செல்லவேண்டிய கோயில்களுள் ஒன்றாகும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்

புதுச்சேரி, காரைக்காலில் அமைந்துள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில். இது சனிப் பெயர்ச்சிக்காகவும், சனி வழிபாட்டிற்கும் புகழ் பெற்றது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

புதுச்சேரி மாநிலத்தில், கும்பகோணம் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது திருநள்ளாறு எனும் ஊர்.

மண்டபள்ளி மண்டேஸ்வர சுவாமி கோயில்

மண்டபள்ளி மண்டேஸ்வர சுவாமி கோயில்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மண்டப்பள்ளியில் அமைந்துள்ளது இந்த கோயில். இது தென்னிந்தியாவிலிருந்து மிக அதிக பக்தர்களை ஈர்க்கும் கோயிலாகும்.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

விசாகப்பட்டினத்திலிருந்து 4 மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். தேசிய நெடுஞ்சாலை 16வழியாகவும், மாநில சாலை 40 வழியாகவும் இந்த கோயிலை அடையலாம்.

ஸ்ரீசனி கோயில்

ஸ்ரீசனி கோயில்

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ளது திட்வாலா சனி கோயில். இங்கு சனி தோசம், சனிப் பெயர்ச்சி நாள்களில் விசேச பூசைகள் நடைபெறும். அதற்கு நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் குவிகின்றனர்.

பணஞ்சே ஸ்ரீசனி கோயில்

பணஞ்சே ஸ்ரீசனி கோயில்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சனி தோஷம் நீங்க அனைவரும் செல்கின்றனர்.

சனி கோயில்

சனி கோயில்

இந்தூரில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு 300வயது. மிகப்பழமையான இந்த கோயில் மிக சக்திவாய்ந்ததும் கூட. சனி தோஷத்தால் தடைபட்டுள்ள அனைத்து நல்ல விசயங்களும் தடைகள் நீங்கி வாழ்வில் வசந்தம் வந்து சேர நீங்கள் இந்த கோயிலுக்கு செல்லலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X