» »கேரளத்திலிருந்து பிரிந்த கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு சேர்ந்த கதை தெரியுமா?

கேரளத்திலிருந்து பிரிந்த கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு சேர்ந்த கதை தெரியுமா?

Written By: Udhaya

சுற்றுலா என்பது வெறுமனே சுற்றித்திரிவது மட்டுமல்ல. நாம் செல்லும் இடத்தின் சுவாரசியங்களையும், ஆச்சர்யங்களையும், வரலாற்றையும் கொஞ்சம் புரட்டிப்பார்ப்பதும்தான் முழுமையான சுற்றுலாவாக இருக்கமுடியும். இந்தியா என்றழைக்கப்படும் பல்வேறு இன, மத, மொழிகள் வாழும் கூட்டமைப்பின் வரலாறுகூட நம்மில் பலருக்கு தெரியாது என்பது கசக்கும் உண்மை. இந்து என்று தற்போது கொண்டாடப்படும் மதம் கூட முக்காலத்தில் சைவ, சமண, புத்த, வைணவ மதங்களின் கூட்டாக இருக்கிறது.

ஆதி கால மதுரை எப்படி இருந்துருக்கு பாருங்களேன்!

கர்நாடகத்தில் கூட லிங்காயத்துகள் தனிமதமாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். அப்படி கன்னியாகுமரியிலும் ஒரு காலத்தில் இந்து மதம் இல்லாத அய்யாவழி மதம் என்ற ஒன்று (இன்று இது பரவலாக இந்துமதம் என்றே நம்பப்படுகிறது) இருந்தது. இது கன்னியாகுமரியில் தோன்றிய வழிபாட்டு முறைதான். இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள பல வருடங்கள் வரலாற்றை புரட்டிக் காட்டவேண்டும். அதுமட்டுமல்லாமல் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த கன்னியாகுமரி பிற்காலத்தில் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்ட வரலாற்றையும் சேரந்தே பார்ப்போம்.

எல்லைகள்

எல்லைகள்


தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அந்த இடங்களுக்கு பயணப்படுவதுடன் அவர்களின் கலாச்சாரம், பெருமை, வாழ்க்கை முறை பற்றியும் ஒரு கண்ணோட்டம் பார்த்துவிட்டு வரலாம். நாம் முன்பே குறிப்பிட்டதுபோல, சுற்றுலா என்பது வெறும் ஊர் சுற்றல் இல்லையே....

 கன்னியாகுமரி பெயர்க்காரணம்

கன்னியாகுமரி பெயர்க்காரணம்

கன்னியாகுமரி பெயர் எப்படி வந்தது என்பது நம்மில் பலருக்கும் நன்கு அறிமுகமான காரணமாகத்தான் இருக்கிறது. ஆம். குமரி அம்மனின் பெயரினால் இந்த பெயர் வந்திருக்கிறது. புராணக்கதைகளின் படி, சிவபெருமான் பார்வதி தேவியாரை பூமியில் வசிக்க அனுப்பி வைத்தார் எனவும், பார்வதி இந்த மண்ணில் மனிதராகப் பிறந்து வாழ்ந்தார் எனவும் நம்பப்படுகிறது. இவரின் பெயர் காரணமாகவே இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது. அதன்பின் இந்த மாவட்டத்துக்கும் இதே பெயரை வைத்தனர் ஆட்சியாளர்கள். சிவ வழிபாடு தோன்றிய இடமும் இதுதான் என்கிறார்கள் பல தெய்வ பிரியர்கள்.

சங்ககால கன்னியாகுமரி

சங்ககால கன்னியாகுமரி


சங்ககாலத்தில் இந்த பகுதியை ஆய் எனும் சிற்றரசன் ஆண்டு வந்துள்ளான். நாஞ்சில் நாடு, இடை நாடு ஆகியவைச் சேர்ந்து இந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆகியுள்ளது. அதன் பின் பலரது ஆளுமைகளின் கட்டுப்பாட்டில் இங்குள்ள பகுதிகள் இருந்துள்ளன.

Kanyakumari District

 ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள்


இந்த பகுதி பத்தாம் நூற்றாண்டு வரை சேரர்களின் வசம் இருந்துள்ளது. அதன்பின் ஓய்சலர்களும், சாளுக்கியர்களும் மாறி மாறி இந்த பகுதியை ஆட்சி செய்துள்ளனர். இதன்பின் திருவிதாங்கூர் மன்னர்களின் கைகளில் சென்ற இந்த இடம், பாண்டியர்களுடனான மோதல்களில் விஜயநகர மன்னர்களின் வசமானது. அவர்களின் காலத்துக்குப்பின் ஆற்காடு நவாப் ஆளுமைக்கு சென்ற இடம், கடைசியில் ஆங்கிலேயர்கள் வசமானது. அதன் பின் நாடு சுதந்திரமடைந்ததும் திருவிதாங்கூர் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

Unknown

கேரளாவிடமிருந்து தமிழகம்

கேரளாவிடமிருந்து தமிழகம்


பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது, தாய்தமிழர்கள் தமிழகத்துடன் சேரவேண்டும் என்று போராடினர். இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடைசியாக வெற்றி தேடித் தந்தனர் பல தமிழ்த் தலைவர்கள். இறுதியில் நவ 1, 1956ம் ஆண்டு கன்னியாகுமரி தமிழகத்தின் ஒரு பகுதியானது.

Ashcoounter

பாண்டியர்களின் சொர்க்கப்புரி

பாண்டியர்களின் சொர்க்கப்புரி

முன்னொருகாலத்தில் கன்னியாகுமரி பாண்டியர்களின் சொர்க்கப்பூமியாக இருந்துள்ளது. குமரி மாவட்டத்தின் தெய்வமாகிய கன்னி குமரி பகவதிகோயிலில் இதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை சோழர்களின் கல்வெட்டுக்கள் ஆகும். முதலாம் ராஜராஜ சோழனுடைய கல்வெட்டுதான் மிகவும் பழமையானதாக இருந்துள்ளது. மேலும் ராஜேந்திரச் சோழன், பராந்தகன் ஆகியோரது கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இதன் காலம் சுமார் 850 ஆண்டுகள் பழமையாக இருக்கிறது.

Infocaster

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

இதெல்லாம் சரி. இந்த பகுதிகள் தற்போது எப்படி இருக்கின்றன தெரியுமா? கன்னியாகுமரி - கேரள எல்லைகளில் நிறைய ஊர்கள் அமைந்துள்ளன. இவைகள் மிகவும் அழகாகவும், பசுமையாகவும் காணப்படுகின்றன. கொல்லங்கோடு, குலப்புரம், களியக்காவிளை, விளவங்கோடு, பழுகல், காரக்கோணம், தேவிகோடு, சேருவளூர், மணசோடு, பதுகனி உள்ளிட்ட பகுதிகள் தமிழக கேரள எல்லையாக அமைந்துள்ளன.

 கோதையாறு

கோதையாறு

கோதையாறு அணை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிகவும் அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இதன் உயரம் கிட்டத்தட்ட 3000 அடி இருக்கலாம். இது மிகவும் பசுமையான இடமாக காட்சியளிக்கிறது.

நாலுமுக்கு என்னும் இடத்திலிருந்து காக்காச்சி வரை 6 கிமீ தூரம் பயணிக்க இந்த அணையை எட்டமுடியும். இங்கு இரண்டு அணைகள் உள்ளன. மேல் கோதையாறு மற்றும் கீழ் கோதையாறு. மேல் கோதையாறு அணைக்கு சிறப்பு அனுமதி பெறவேண்டும். எனினும் அது கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

kumaritourism

 கோதையாறு நீர்வீழ்ச்சி

கோதையாறு நீர்வீழ்ச்சி

இதன் அருகிலேயே கோதையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. குட்டியாறு இரட்டை நீர்வீழ்ச்சியும் உள்ளது. இது மிகவும் அடர்த்தியான காட்டுப்பாதையாகும். இதன் அருகில் முதுகுளிவயல் எனும் இயற்கை எழில் மிகு பகுதி ஒன்று இருக்கிறது.

tnhrce

 பேச்சிப்பாறை

பேச்சிப்பாறை

பேச்சிப்பாறை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு அணையாகும். மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இடம், தலைநகர் நாகர்கோயிலிலிருந்து 43கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் பேச்சியம்மன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

Infocaster

அந்தி வானம்

அந்தி வானம்


மேகம் சூழ்ந்த வானத்தில் நீர் அலைகள் திரியும் கோதையாறு. சூரிய மறைவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

Rahul305b

அழகிய ஆறு

அழகிய ஆறு

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் கோதையாற்றின் புகைப்படம்

Rahul305b

ஆற்றங்கரை செடிகள்

ஆற்றங்கரை செடிகள்

கோதையாற்றின் மற்றொரு புகைப்படம்

Infocaster

 பேச்சிப்பாறை அணை

பேச்சிப்பாறை அணை

பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் வெளியேறும் காட்சி.

Thatsalright

தொலைதூரக் காட்சி

தொலைதூரக் காட்சி


மலை உச்சியிலிருந்து பேச்சிப்பாறை அணை இதுவாகும்.

Muthuraman99

கன்னியாகுமரி காட்டுயிர் வாழ்க்கை

கன்னியாகுமரி காட்டுயிர் வாழ்க்கை

402சகிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் காடுகள் இவையாகும். இவை புலிகள் வசிக்க ஏற்ற இடமாகும் , பாதுகாக்கப்பட்டகாடுகளாகவும் இருக்கின்றன. இங்கு கடமா, இந்திய யானை, இந்திய மலைப்பாம்பு, சோலைமந்தி, புள்ளிச் சருகுமான், நீலகிரி வரையாடு, கடமான் போன்றவை இருக்கின்றன.

Kanyakumari Wildlife Sanctuary

ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்


குமரி - கேரள எல்லையில் பல்வேறு மத ஆலயங்களும் அமைந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக ஸ்ரீதர்மசாஸ்தா கோயில், கள்ளிமூடு மசூதி, சூண்டிக்கல் ஸ்ரீ பத்ரகாளி கோயில், பனச்சமூடு ஜூம்மா மசூதி, செரியகொள்ள பிராந்தூர் ஸ்ரீ மகாதேவர் கோயில், ரோமானிய கத்தோலிக்க ஆலயம், கன்னூர் கண்டன் சாஸ்தா கோயில், காரோடு சிஎஸ்ஐ ஆலயம் என எக்கச்சக்க கோயில்கள் இருக்கின்றன.

kanyakumaritourism

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்