» »சிலுக்கூர் பாலாஜி கோயிலுக்கு விசா வேண்டி ஒரு விசிட்

சிலுக்கூர் பாலாஜி கோயிலுக்கு விசா வேண்டி ஒரு விசிட்

Posted By: Udhaya

அதிகம் படித்தவை: பேஸ்புக்கின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் ஒரு இந்திய கோயில் தெரியுமா?

மக்களின் நம்பிக்கையை அவ்வளவு எளிதாக நம்மால் புறந்தள்ளி விட முடியாது. அதேநேரத்தில் சில நேரங்களில் அறியாமையால் மக்கள் செய்யும் சில மூட நம்பிக்கைகளை அப்படியே நம்பிவிடக்கூடாது.

பல்வேறு வாய்ப்புகளின் அடிப்படையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இயற்கையின் கொடையாக சிலராலும், கடவுளின் செயலாக பலராலும் நம்பப்படுகிறது. பாஸிபிலிட்டீஸ் எனப்படும் வாய்ப்புகள் நமக்கு சாதகமாக அமைந்தால் அதை கடவுளின் செயலாக கருதுவது இங்கு அன்றாட வாழ்வில் நடப்பதுதானே.

சரி, ஆனாலும் சில நம்பிக்கைகள் நமக்குள்ளேயே ஒரு விசயத்தை ஆழமாக ஊன்றிவிடும். ஊரில் கோயில் கொடைவிழாக்களில் நிகழும் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் செய்கிறோம். அதை நாம் அப்படியே நம்பி தொன்றுதொட்டு செயல்படுத்திக்கொண்டே வருவோம் அல்லவா.

குறி சொல்லும் சாமி ஆடுபவரின் வாக்கு அப்படியே பலிக்கும் என்றும் சொல்வார்கள். நம் கண்கூடே அது அப்படியே நடக்கும்போதுதான் ஆச்சர்யத்துக்கு அளவில்லாமல் நாம் அசந்து போவோம். அப்படிபட்ட ஒன்றுதான் தெலுங்கானா தலைநகர் ஹைதரபாத்திலுள்ள கோயில் ஒன்றில் நிகழ்கிறது.

உங்களுக்கு அமெரிக்கா செல்ல விசா வேண்டுமா... இந்த கோயிலுக்கு போனா கண்டிப்பா கிடைக்கும். என்ன ஆச்சர்யம்... வாங்க அத பத்தி தெரிஞ்சிக்கலாம்..

சிலுக்கூர் பாலாஜி கோயில்

சிலுக்கூர் பாலாஜி கோயில்

தெலுங்கானத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு பகுதி சிலுக்கூர். இங்கு அதிஅற்புத சக்தி வாய்ந்த பாலாஜி கோயில் உள்ளது. இதன் சக்தி என்ன தெரியுமா?

Adityamadhav83

சுயம்பாக தோன்றியவர்

சுயம்பாக தோன்றியவர்

பொதுவாக சிவபெருமான் சுயம்பாக எழுந்தருளுவது வழக்கம். அந்த வகையில் இங்குள்ள வெங்கடேஸ்வரர் சுயம்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி நல்குகிறார்.

வரலாறு

வரலாறு


திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுவார்கள் என ஹைதராபாத்திலேயே வெங்கடேஸ்வரருக்கு ஒரு சன்னதி எழுப்புமாறு அவரே பக்தர் ஒருவரின் கனவில் வந்து கூறியிருக்கிறார். அதன்படி கட்டப்பட்டதுதான் இந்த கோயில்

திருப்பதியின் மறுவுருவம்

திருப்பதியின் மறுவுருவம்

இந்த கோயிலுக்கு சென்று வந்தால், திருப்பதிக்கு சென்றுவந்ததற்கு சமமாம். எனினும் தமிழகத்தைப் பொறுத்தவரை திருப்பதிதான் அருகில் இருக்கிறது.

நினைத்தது நடக்கும்

நினைத்தது நடக்கும்

இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்றுவிட்டால் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கிறதாம்.

நினைத்தது நடக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா

நினைத்தது நடக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா

பெரிதாக எதுவும் செய்யத்தேவையில்லை. முதன்முறையாக இந்த கோயிலுக்கு வருகை தருபவர்கள் 11 சுற்றுகள் இந்த கோயிலைச் சுற்றினால் போதும். அந்த வேண்டுதல் நிறைவேறிய பின் பக்தர்கள்
108 முறை கோயிலைச் சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

விசா கடவுள்

விசா கடவுள்

அமெரிக்கா செல்ல நினைப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் அடுத்த வாரத்திலேயே நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. இங்கு வந்துசென்ற அனைவருக்கும் விசா கிடைத்துள்ளது என்கின்றனர் பக்தர்கள். இதனால் இந்த கடவுளுக்கு விசா கடவுள் என்றே பெயரிட்டுவிட்டனர்.

500 வருடங்கள் பழமையான கோயில்

500 வருடங்கள் பழமையான கோயில்

இந்த கோயிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இது 500 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டகோயில் ஆகும். இதன் சிறப்பே வேண்டியது நிறைவேறும் என்பதுதான். இன்னும் பல அதிசயங்கள் இந்த கோயிலில் உள்ளன.

இந்தியாவில் இப்படி ஒரு கோயிலா

இந்தியாவில் இப்படி ஒரு கோயிலா

பொதுவாக பிரபலமான கோயில் அனைத்திலும் விஐபி தரிசனம் என்று சொல்லி, 100, 500களை வாங்குவர். விஐபிக்களும் நேரடியாக கடவுளை கண்டுவிட்டு செல்வர். ஆனால் இந்த கோயிலில் விஐபி தரிசனம் இல்லை. அட இந்தியாவுலதான் இருக்கோமா?

பிரதருக்கே இப்படி ஒரு நிலைமைதான்

பிரதருக்கே இப்படி ஒரு நிலைமைதான்

இந்தியாவின் பிரதமராக இருந்தாலும் கூட இந்த கோயிலில் தனி விஐபி தரிசனம் இல்லையாம். அதுதான் இந்த கோயிலின் விதி என்கின்றனர். அது எப்படியோ பிரதமர் கோயிலுக்கு வரும்போதுதான் தெரியும்.

உண்டியல் கிடையாது

உண்டியல் கிடையாது

இந்த கோயிலில் உண்டியல் என்பதே கிடையாது. பக்தர்களிடன் ஒரு நயா பைசாகூட வாங்காத கடவுள் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே இவர்மட்டும்தான் போல..

கோயில் மரத்தின் மகிமை தெரியுமா?

கோயில் மரத்தின் மகிமை தெரியுமா?

இந்த கோயிலில் உள்ள ரவி மரம் 350 வருடங்களாக இங்கு இருக்கிறது.. இந்த மரத்தை தொட்டால் போதும் நீங்கள் நினைத்தது கட்டாயம் நடக்கும்

Rajesh_India

https://www.flickr.com/photos/pamnani/25443200974/

செயல்படும் நேரம்

செயல்படும் நேரம்

இந்த கோயில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7.45 மணி வரை செயல்படும். யாருக்காகவும், எதற்காகவும் இரவு நேரத்தில் நடை திறப்பு நீட்டிக்கப்படாது என்கிறது கோயிலின் விதிமுறைகள்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் சிலுக்கூருக்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. மெகதிபட்டினத்திலிருந்து 288D என்ற பேருந்தில் சென்றால் அதிகபட்சம் 1 மணி நேரத்தில் இந்த கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இந்த கோயிலின் அருகில், கோல்கொண்டா கோட்டை, பிர்லா மந்திர், சார்மினார், பலாக்னமா, ஹைடெக் சிட்டி என பல்வேறு இடங்கள் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளன.

Read more about: travel, temple