» » பேக்கல் - சலனமற்ற நீர்நிலைகளின் மத்தியில் ஒரு இன்பச் சுற்றுலா

பேக்கல் - சலனமற்ற நீர்நிலைகளின் மத்தியில் ஒரு இன்பச் சுற்றுலா

Written By: Udhaya

கேரளத்தில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகும் பசுமையும் ததும்ப காட்சி தரும் மாவட்டங்களில் காசர்கோடு மாவட்டமும் ஒன்று.

இங்கு எண்ணற்ற சுற்றுலாத் தளங்களும், இயற்கை வாழ் இடங்களும் உள்ளன. கடற்கரைகள் உங்கள் மனதை கொள்ளையடிக்கும்.

வாங்க ஒரு டூர் போய்ட்டு வரலாம்....

 அனந்தபுரா லேக் கோயில்

அனந்தபுரா லேக் கோயில்

பேக்கல் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அனந்தபுரா கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிராதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

Vinayaraj

சந்திரகிரி கோட்டை

சந்திரகிரி கோட்டை

சந்திரகிரி கோட்டை தனக்கு ஒரு புறத்தில் தென்னை மரங்கள் எல்லையமைத்த சந்திரகிரி நதியையும், மறுபுறம் பிரம்மாண்ட அரபிக் கடலையும் கொண்டு மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் மேற்கு பாதுகாப்பு அரண் அமைந்துள்ள பகுதியிலிருந்து நீங்கள் கண்ணை கவரும் சூரிய அஸ்த்தமன காட்சியை கண்டு ரசிக்கலாம்.

 பேக்கல் கோட்டை

பேக்கல் கோட்டை


பேக்கல் கோட்டை பனை மரங்களால் சூழப்பட்ட, ஓய்வின்றி அலைகள் வந்து மோதிக்கொண்டே இருக்கும் இரண்டு கடற்கரைகளுக்கு மத்தியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

Rajeshodayanchal

 பேக்கல் பீச்

பேக்கல் பீச்

பேக்கல் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கண்டிப்பாக பேக்கல் பீச்சுக்கு சென்று வர வேண்டும். இங்கு நீங்கள் அமைதியான காயல் நீர்ப்பரப்பில் நீந்தித் திளைக்கலாம், வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களின் நிழல்களில் சிறு உலா செல்லலாம், அதோடு குன்றுகளின் மீது ஏறி விளையாடி சாகசத்தின் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை சுகிக்கலாம்.

Vinayaraj

ஹவுஸ்போட் குரூஸ்

ஹவுஸ்போட் குரூஸ்

பேக்கல் நகருக்கு சுற்றுலா வரும்போது நீங்கள் ஹவுஸ்போட் குரூஸ் எனப்படும் படகு இல்லத்தில் பனைமரங்கள் சூழ அமைந்திருக்கும் காயல் நீரில் உல்லாசமாக பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்தை தவற விட்டுவிடாதீர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லமே உங்களுக்கு சொர்கத்தில் வசிப்பது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

www.keralatourism.org

Read more about: travel