» » நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க

நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க

Posted By: Udhaya

வார விடுமுறைய ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு, அலுவலகம் வந்த உடனே வேலைய பாக்க வரும் பாருங்க ஒரு கடுப்பு. அதுனாலதான இங்க வந்துருக்கோம்னு சொல்றீங்க கரக்ட்டா. 

உங்க நம்பிக்கைய காப்பாத்தியே தீரணுமே. உங்களுக்கு பேய் மேல நம்பிக்கை இருக்கா? இருக்கோ இல்லியோ!. நீங்க செகண்ட்ஷோ படம் பாத்துட்டு வந்திட்ருக்கீங்க. வழியில யாரோ அழுகுற சத்தம். திரும்பி பாத்தா யாரும் இல்ல. மறுபடியும் அதே சத்தம். நீங்க அந்த இடத்துல நிப்பீங்க? துண்டக் காணும் துணியக் காணும்னு ஓடிட மாட்டீங்க... அதே மாதிரி அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டதுதான் இந்த கட்டுரை.. ஆமாங்க பேய் இருக்கா இல்லியா பேய் வரதுக்கு ஏதாது அறிகுறியிருக்கா?

இந்தியா புதிர்களும் விடையில்லை கேள்விகளும் நிறைந்த நாடு. இன்று வரை விடைகள் கிடைக்காத பல கேள்விகள் இந்திய தேசத்தில் உள்ளது.

அவற்றில் கடவுள் நம்பிக்கையும் ஒன்று. கடவுள் என்று ஆரம்பித்தால் எதிர்பதமாக பேய் என்ற ஒன்று தானாகவே விவாதத்துக்குள் வரும். நீங்கள் பேயை பார்த்திருக்கிறீர்களா?

பேய்கள் நடமாடும் இடங்கள் பற்றி உண்மையான கதைகள் கேட்டு வளர்ந்துள்ளோம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் நம்பிக்கைகளை எளிதில் உடைத்தெறிந்துவிட முடியாது. சில இடங்களில் நாம் மிக எளிதில் கடந்துவிடுவோம். ஆனால் அதே இடத்தை இரவில் கடக்கும்போதுதான் நமக்கு தெரியவரும். பேய் இருக்கா? இல்லையா?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்   

 

கொல்கத்தா தேசிய நூலகம்

கொல்கத்தா தேசிய நூலகம்

பேய்கள் மற்றும் ஆவிகள் பாழடைந்த கட்டிடங்களில் மட்டுமே வாழும் என்று பல கதைகள் கேட்டுள்ளோம். அப்படி நீங்கள் நினைத்தால் , அது தவறு என்பதை இதை படித்து முடித்தவுடன் ஒப்புக் கொள்வீர்கள்.

Pc: Avrajyoti Mitra

கொல்கத்தா தேசிய நூலகம்

கொல்கத்தா தேசிய நூலகம்

கொல்கத்தாவில் தேசிய நூலகத்தில் இயற்கைக்கு புறம்பான நிகழ்வுகள் பல நடக்கின்றன. அங்குள்ள காவலர்களே இரவில் பணி செய்ய அச்சமடைகிறார்கள். எனினும் , அவர்கள் அதை பற்றி ஊடகங்களில் வாய் திறப்பதில்லை. தனிப்பட்ட முறையில் கேட்டபோது, நூலகம் இறந்த ஆத்மாக்கள் அங்கு காணப்பட்டதாகவும், மேலும், ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இரவு தங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது இறந்ததாகவும் கூறப்படுகிறது.

நிறைய பேர் ஒவ்வொரு நாள் காலையிலும், கடிதங்களும் , ஆவணங்களும் நூலகத்தில் மேசை மீது சிதறி காணப்படுகின்றன என்று சொல்கிறார்கள் .

திடீர் திடீர்னு உருளுதாம் ஒடையுதாம்.....

Pc: Biswarup Ganguly

சுரங்கம் எண் 103 , சிம்லா

சுரங்கம் எண் 103 , சிம்லா

சுரங்கத்திலும் பேய் இருக்கும் என்பதை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் சிம்லாவில் ஒரு அமானுஷ்யம் நடக்கிறது.

சிம்லா பேய்

சிம்லா பேய்

சிம்லாவிற்கு விடுமுறைக்கு செல்ல நீங்கள் விரும்பினால் , 103 வது எண் சுரங்கப்பாதையில் கொஞ்சம் கவனமாக இருங்கள் . இந்த சுரங்கப்பாதை எண் 103 சிம்லா-கால்கா ரயில் தடத்தில் வருகிறது . ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு ஆவிகள் அங்கு சுற்றிவருவதாக மக்கள் நம்புகிறார்கள்.

அதன் உள்ளே ஈரப்பதத்துடனும் இருண்டும் இருக்கும். சிலர் ஒரு பிரிட்டிஷ் ஆவி அவர்களுடன் பேசுவதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்த சுரங்கப்பாதையின் சுவர்களில் ஒரு பெண்ணின் ஆவி நகருவதை பார்த்திருக்கிறார்களாம். நீங்கள் சென்றுகொண்டிருக்கும்போது உங்கள் கண்முன் வந்து மறையுமாம் இந்த ஆவிகள்.


ஏட்டையா என்மேல ஏறுன டிரைன் வருது நா மறுபடியும் விழுறேன் பாய்

ஷானிவார்வடா கோட்டை, புனே

ஷானிவார்வடா கோட்டை, புனே

மகாராஷ்டிராவில் இருக்கும் மிகப் பெரிய கோட்டைகளில் ஒன்று இந்த ஷானிவார்வடா கோட்டை. இந்த கோட்டையின் சுவர்கள் கூட பல மர்மமான கதைகள் சொல்லும்.

கோட்டை பேய்

கோட்டை பேய்

கோட்டையின் இளவரசனை அவரின் சொந்த பந்தங்களே கொலை செய்து இங்கேயே புதைத்தனராம். இன்று கூட , முழு நிலவு இரவுகளில் இளவரசனின் ஆவி தனது மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க கோட்டைக்கு வருகிறது என்கின்றனர். இதனால்தான் மக்களை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோட்டை வளாகத்திற்குள் அனுமதிப்பதில்லை என்கின்றனர்.

பயமா எனக்கா... நாமளே ஒரு பேயி....

ராஜ் கிரண் ஹோட்டல் – மகாராஷ்டிரம்

ராஜ் கிரண் ஹோட்டல் – மகாராஷ்டிரம்

மராட்டிய மாநிலத்தில் இருக்கும் ஒரு விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பீதி கிளம்பியது. சில மர்ம நிகழ்வுகள் வெளி உலகத்துக்கு தெரியாமலே மறைக்கப்பட்டன.

ஹோட்டல் பேய்

ஹோட்டல் பேய்

இந்தியாவில் அமானுஷ்யத்தை பொருத்தவரையில் மகாராஷ்டிரத்தில் உள்ள இந்த ஹோட்டல் தான் இயற்கைக்கு மாறான விசித்திரம் நடக்கும் இடமாகும்.

இந்த விடுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அறையில் வசித்தவர்கள் ஹோட்டல் நிர்வாகத்திடம் ஒரு புகாரைத் தந்தனர். அடுத்த நாள் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் பெட்டி படுக்கையுடன் ஓடி விட்டனர். அதன் பின் ஆராய்ந்ததில் அந் தம்பதி தங்கள் படுக்கை விரிப்புகள் இழுப்பது போல் காணப்பட்டது எனவும் பயத்தில் படுக்கையை விட்டு வந்த பிறகும் இழுத்தவாறு காணப்பட்டது எனவும் தெரியவந்தது.

. சில மக்கள் அவர்களின் காலடியில் நீல நிற வெளிச்சம் கண்டு உறக்கத்திலிருந்து எழுந்துள்ளார்கள். ஹோட்டல் நிர்வாகம் இதை மறுத்தாலும், இன்று வரை அந்த அறையில் தங்க அந்த பகுதி மக்கள் பயந்துகொண்டே உள்ளனர்.

ரா ரா சரசுக்கு ராரா

சஞ்சய் வான் – புது தில்லி

சஞ்சய் வான் – புது தில்லி

சஞ்சய் வான் ஏறத்தாழ 10 கி.மீ. பரப்பளவு கொண்டுள்ள ஒரு பெரிய காட்டு பகுதி . அந்த பகுதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் வெள்ளை சேலை அணிந்து ஒரு பெண் தோன்றி திடீரென்று மறைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் இதை நேரடியாக பார்த்துள்ளார்கள்.

தலைநகர பேய்

தலைநகர பேய்

தில்லியில் இருக்கும் இந்த பகுதி பேய்கள் நடமாடும் இடமாக கருதப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை . குறிப்பாக இருட்டிய பிறகு நீங்கள் இங்கே தனியாக இல்லை என்பதில் உறுதியாக இருங்கள். மீறி போனால்...

பேயுடன் ஒரு டூயட் போட வேண்டிருயிருக்கும் அவ்ளோதான்.

இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

2020ல் உலகம் என்னவாகும் கைப்பட எழுதிய தலையாட்டி சித்தர்

Read more about: travel