» »திரிபுரா மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம் காண போலாமா?

திரிபுரா மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம் காண போலாமா?

Written By: Udhaya

பெரும்பாலும் மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ள தலாயின் அடர்ந்த காடுகளை ரசிக்க வருடந்தோறும் திரிபுராவிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.

தலாயில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த தொழிற்வளர்ச்சியும் இல்லையென்றாலும் அண்ணாச்சிப் பழ சாறு எடுக்கும் தொழிற்சாலை வடகிழக்கு வேளாண்மை விற்பனை கழகத்தால் நிறுவப்பட்டிருக்கிறது (NERAMAC).
இங்கிருக்கும் கிராமவாசிகள் கைவினைப்பொருட்கள் செய்வதிலும், ஊதுபத்திகள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

திரிபுரா மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம் காண போலாமா?

Soman

தலாய் நகரத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்!

தலாய் நகரம் சுற்றுலாப்பயணிகளை மற்றுமல்லாது யாத்ரீகர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது. லொங்தரை மந்திர், கமலேஷ்வரி மந்திர், ராஸ் ஃபேர் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலாதளங்களாகும். தலாய் நகரம் திரிபுரா சுற்றுலாவில் மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது.

கமலேஷ்வரி மந்திர்

திரிபுரா மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம் காண போலாமா?

Piyushozarde

காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் திரிபுராவின் கமல்பூரில் அமைந்துள்ளது. தலாய் தலைமையிடமான அம்பாசாவில் இருந்து 35கிமீ தொலைவிலும், அகர்டலாவில் இருந்து 122கிமீ தொலைவிலும் உள்ளது இவ்விடம்.

காளி அம்மனின் மற்றொரு பெயர் கமலேஸ்வரியாகும். கமல்பூர் என்ற ஊரும் காளி அம்மனின் இப்பெயராலேயே வழங்கப்படுகிறது. வருடம் முழுதும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்தாலும் மழை இல்லாத செப்டம்பர் முதல் மே வரையிலான மாதங்களே இக்கோவிலுக்கு வருகை தர உகந்ததாக கருதப்படுகிறது.

அகர்டலாவில் இருந்து வாடகைக் கார்கள் மூலம் இக்கோவிலுக்கு வருகை தரலாம். அம்பாசாவில் இருந்து பேருந்துமூலமும் கமல்பூருக்கு வருகை தரலாம். கமல்பூரில் ரயில் மற்றும் விமானவசதி கிடையாது. அருகாமையில் இருக்கும் ரயில்நிலையமும், விமானநிலையமும் அகர்டலாவிலேயே அமைந்துள்ளன

லாங்க்தரை மந்திர்

திரிபுரா மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம் காண போலாமா?

Piyushozarde

தலாய் மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்களில் லாங்க்தரை மந்திர் ஒன்றாகும். கொக்பொராக் மொழியில் லாங்க்தரை என்றால் சிவன் என பொருள். அகர்டலாவில் இருந்து இக்கோவில் 102கிமீ தொலைவில் உள்ளது.

சிவபெருமான் தன் வீடான கைலாச மலைக்கு பயணம் செய்தபோது இங்கு ஓய்வெடுக்கும் பொருட்டு கால் பதித்ததாக நம்பப்படுகிறது. அதிலிருந்து புகழ்பெற்ற இவ்விடத்தில் கோவிலும் எழுப்பட்டு புகழ்பெற்று விளங்குகிறது.
இன்று இக்கோவிலும் அதைச் சுற்றி உள்ள இடமும் பெரிதாக மதிக்கப்பட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது.

லொங்தரா என்றால் பெரும் பள்ளத்தாக்கு என்றும் பொருள். இக்கோவிலை அடையும் சாலையோரங்களில் கும்பி என்ற வகை பூக்கள் பூக்கின்றன. கோவில் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள இடமும் அமைதியுடன் திகழ்கிறது.
வியாரமயமாகிவிட்ட உலகில் இருந்து விலகி அமைதியாக இயற்கை எழிலுடன் தோற்றமளிக்கும் இவ்விடம் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய இடமாகும்.

Read more about: travel