» »நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை

நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை

Posted By: Udhaya

சிக்கிம் மாநிலத்தில் உள்ள மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் உத்தரே என்ற சுற்றுலாத் தலம் இயற்கை அழகிற்கும் அதன் வளமைக்கும் பெயர் பெற்ற ஒரு பகுதி ஆகும்

உத்தரேயில் இருந்து இமயமலைச் சிகரங்களை ஆசைதீர கண்டு களிக்கலாம். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் பனி போர்த்தப்பட்ட இமயமலையின் வெள்ளிச் சிகரங்களை உத்தரே பகுதியிலிருந்து தெள்ளத் தெளிவாகப் பார்க்கலாம்.

நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை

அவ்வாறு செல்லும் போது சிங்ஷோர் என்ற ஒரு உயரமான பாலத்தைக் கடக்க வேண்டும். இந்த பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உத்தரே கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை

உத்தரேயில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. குறிப்பாக கக்யு கும்பா என்று அழைக்கப்படும் ஒரு மடம், டென்டாம் சிகரம், மெயின்பஸ் நீர்வீழ்ச்சி மற்றும் செவ்யாபாங் கணவாய் ஆகிய இடங்கள் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் ஆகும். ஆண்டு முழுவதும் உத்தரே பகுதியில் மிதமான மற்றும் இதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை

உத்தரே பகுதியை அடைவது மிகவும் எளிதானது. உத்தரேக்கு அருகில் பெல்லிங் உள்ளது. எனவே இந்த நகரத்திலிருந்தும் மற்ற அருகாமை நகரங்களிலிருந்தும் பேருந்து மூலம் உத்தரேயை வெகுச் சுலபமாக அடையலாம்.

உத்தரே இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்ஆகும். இதன் அழகு நிறைந்த சுற்றுப்புறம் இங்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்துக்கொண்டிருக்கிறது.

இதன் அருகிலேயே நேபாள எல்லை அமைந்துள்ளது. எல்லைக்கு அந்த பக்கம் சுவ்வா பங்க்யாங்க் எனும் இடம் உள்ளது. இது நேபாள நாட்டிற்குட்பட்ட பரப்பாகும்.

நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை

சிங்கலீலா மலையேற்றம் மிகவும் மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அம்சங்களை உங்களுக்கு அள்ளித் தரும்.

டெஃபி பிர் எனப்படும் வியூ பாயின்ட் சிக்கிம் மலைகளை நல்ல தொலைவிலிருந்தும் அருகில் காட்டும். டிசோங்க்ரி எனும் வியூ பாயின்ட் சுற்றியுள்ள பகுதிகளை 360 டிகிரி வடிவில் காண ஏதுவாக அமைந்துள்ளது.

சமிதி ஏரி அதிக உயரத்தில் உள்ள இந்தியாவின் பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.

Read more about: travel hills