Search
  • Follow NativePlanet
Share
» »அந்நியர்களின் படைகளை கட்டுப்படுத்திய வட்டக் கோட்டை..!

அந்நியர்களின் படைகளை கட்டுப்படுத்திய வட்டக் கோட்டை..!

போரில் நம் நாட்டின் அடையாளங்களான பல கோட்டைகள் அழிக்கப்பட்டன. ஆனால், போரிலோ, இயற்கைச் சீற்றத்திலோ, அந்நியர்களின் தாக்கத்திலோ அழியாத ஒரு கோட்டையைத் தேத்தான் இன்று பயணிக்கப் போகிறோம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழி பேசப்படும் நாட்டில் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யம் தனது ஆட்சியை நிலைநாட்டியிருந்தது. அவர்களின் ஆட்சியை பிரதிபளிக்கும வகையிலான பல கோட்டைகள், கோவில்கள், ஏரிகள் இன்றும் பொழிவிழக்காமல் கம்பீரமாக தோற்றமளிக்கின்றன. தொடர்ந்து வளங்களை கொள்ளையடிக்கவும், ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தவும் எண்ணிய அந்நியர்களின் படையெடுப்புகள் அன்று பல அளிவுகளைச் சந்தித்தது. இதில், நம் நாட்டின் அடையாளங்களாக இருந்த பல கோட்டைகள் அழிக்கப்பட்டன. பல கோட்டைகள் அந்நியர்களை விரட்டியடித்தது. இன்று நாம் பார்க்கப்பப்போவது அதுபோன்ற ஒரு கோட்டையைப் பற்றித்தான். வாங்க, அன்று அந்நியர்களின் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்த வட்டக்கோட்டைத் தேடிப்போவோம்.

வட்டக்கோட்டை

வட்டக்கோட்டை

பல பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்ட கோட்டைகள் பெரும்பாலும் தரை மட்டத்தில், உயரமான மலைமேல், அடர் வனத்திற்குள், கடல் நடுவே தீவில் என கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோட்டையோ கடல் அலையின் தாக்குதலில் இருந்து, உப்புக் காற்றின் தாக்கத்தில் இருந்து, போரின் வலியில் இருந்து இன்றும் அந்த கால வரலாற்று சுவடுகளை தாங்கி கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

Drsjohn

குமரிமுனை

குமரிமுனை


இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனையில் அமைந்துள்ள ஓர் அழகிய படைத்தளக் கோட்டை தான் வட்டக்கோட்டை. குமரி முனையிலிருந்து வடகிழக்காக 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கருங்கல் கோட்டை முகப்பில் இரட்டை யானையும், சங்கும் பொறிக்கப்பட்டச் சின்னம் காணப்படுகிறது. கோட்டை வட்டக் கோட்டை என்றாலும் வட்டமாக இல்லை. செவ்வக வடிவமாக காட்சித் தருகிறது. ஒருசெவ்வகத்தின் ஓரத்தில் இன்னொரு செவ்வகத்தைப் பொருத்திய வடிவம். அதன் மொத்தப் பரப்பு மூன்றரை ஏக்கர்.

கடலைக் கண்காணிக்கும் கோட்டை

கடலைக் கண்காணிக்கும் கோட்டை


கோட்டையின் முகப்பில் உயர்ந்த கற்சுவர்கள் 25 முதல் 26 அடி உயரத்தில் காட்சியளிக்கிறது. முன்சுவற்றின் அகலம் மட்டுமே 29 அடி இருக்கும். சுவற்றின் மூலைகளில் 18 அடியும், பின்புறம் 6 அடி அகலத்திலும் கோட்டைச் சுவர்கள் அமைந்துள்ளன. இக்கோட்டை பாசறையாக இருந்ததாக கணிக்க முடிகிறது. படைவீரர்கள் எல்லையை பாதுகாக்க குதிரைப்படையுடன் தங்கி இருந்த அமைப்புகளையும் காண முடிகிறது. சுற்றிலும் கோட்டை ஓரங்களில் ஓய்வு மண்டபங்கள், இடதுபுறம் கடைசி மூலையில் ஒரு சாய்வான கல்தளமும் படிகளும் ஏறுகின்றன. அங்கு நீண்ட புல்தரைகாணப்படுகிறது. அடுத்து அமைந்துள்ள கோட்டை சுவரை அடுத்து கடல் உள்ளது. கடலுக்குள் நீண்டு பரந்த மேடு இரண்டாவது செவ்வகப் பகுதி. கடலின்முழுப் பரப்பையும் கண்காணிக்கும் விதமாக கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.

Dileeshvar

சின்னமுட்டம் துறைமுகம்

சின்னமுட்டம் துறைமுகம்


கடலுக்குள் நீண்டு இருக்கும் இந்தக் கோட்டை கடலில் பயணம் செய்யும் கப்பல்களைக் கண்காணிக்க கூடியதாக உள்ளது. முற்காலத்தில் குமரிப் பகுதி ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இப்போதைய சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகமே அக்காலத் துறைமுகமாக விளங்கியுள்ளது. அதோடு முத்துக்குளிக்கும் தொழிலும் இங்கே சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த துறைமுகத்தைக் கண்காணிக்கும் விதமாகவும் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.

Godwinfelix00

திருவிதாங்கூர் அரசு உருவாக்கம்

திருவிதாங்கூர் அரசு உருவாக்கம்


மன்னர் மார்த்தாண்டவர்மா என்பவரால் திருவிதாங்கூர் அரசு உருவாக்கப்பட்ட போது கிழக்கு எல்லையான குமரி முதல் ஆரல்வாய்மொழி வரையிலான எல்லைப் பகுதி பாதுகாப்பற்றதாக இருந்துள்ளது. இதனை அறிந்த படைவீரர்களால் இக்கோட்டை புனரமைக்கப்பட்டது. ஆனாலும், இந்தக் கோட்டைப் பணி மார்த்தாண்டவர்மாவுக்கு அடுத்துவந்த ராமவர்மா மகாராஜா காலத்தில் தான் முடிவுக்கு வந்துள்ளது. அதன் அடையாளம் தான் கோட்டையின் முகப்பில் உள்ள 'RV' என்ற சின்னம்.

Rohith1729

போர்த்தலம்

போர்த்தலம்

1809ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் அரசை தோற்கடித்த போது இக்கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். அப்போது போரின் போது பயண்படுத்த உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

Drsjohn

பாண்டியர்களின் கோட்டை ?

பாண்டியர்களின் கோட்டை ?


திருவிதாங்கூர் அரசர்களால் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட இந்த கோட்டை பாண்டியர் காலத்தைச் சார்ந்தது என்பதற்கு அடையாளமாக கல்மண்டபங்களில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் பாண்டியர்களின் இலச்சினையான மீன் சின்னம் செதுக்கப்பட்டுள்ளதால் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வட்டக்கோட்டை பாண்டியர்களின் கைவசம் இருந்திருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

RuperDoc

சுரங்கப்பாதை

சுரங்கப்பாதை


வட்டக் கோட்டையில் ஒரு சுரங்கப் பாதை மூடிய நிலையில் காணப்படுகிறது. இந்த சுரங்கப் பாதை பத்மநாபபுரம் வரை செல்வதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது போர்க்காலத்தின் போது கோட்டைக்கு வெளியே இரகசியமாகச் செல்ல அமைக்கப்பட்ட இரகசிய வழியாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனினும் அகழ்வாய்வு செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

Infocaster

தூயநீர்க் கிணறு

தூயநீர்க் கிணறு


கடலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இக்கோட்டையின் உள் குளமும், ஒரு கிணறும் உள்ளது. இவை இரண்டுமே தூய நீர் நிரம்பியிருப்பதால் இங்கே தங்கியிருந்த ராணுவ அதிகாரிகளும், படை வீரர்களும் தண்ணீர் தேவைகளுக்கு உபயோகப்படுத்தி இருப்பது காணமுடிகிறது.

Rohith1729

சுற்றுலாத் தலமான கோட்டை

சுற்றுலாத் தலமான கோட்டை


வட்டக் கோட்டை தற்போது சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் ஈர்க்கப்படும் அம்சமாக மாறியுள்ளது. ரம்மியமான காட்சி, கடல் முழுவதையும் கண்காணிக்க ஏற்ற கட்டமைப்பு, கோட்டையின் உள்ளே பசுமை நிறைந்த புள்வெளி என அனைத்து விதங்களிலும்ம பயணிகளை கவர்கிறது.

PrasanPadale

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X