» »மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3

மிசோரம் காடுகளுக்குள் ஓர் இன்பச்சுற்றுலா செல்வோம் #காட்டுயிர்வாழ்க்கை 3

Written By: Udhaya

வடகிழக்கிந்தியாவின் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் மாநிலங்களில் 'மிசோரம்' மாநிலமும் ஒன்று. இயற்கை அன்னையின் படைப்பில் உருவான பல்வேறு எழில் அம்சங்களை தரிசிக்க விரும்புவோர் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டிய பூமி இந்த மிசோரம் என்பதில் சந்தேகமேயில்லை. பாஸ்போர்ட், விசா போன்ற நெருக்கடிகள் ஏதுமில்லாமல் இந்தியக்குடிமகன் என்ற உரிமையுடனும், நம் நாட்டு மாநிலங்களில் ஒன்று எனும் பெருமித உணர்வுடனும் இந்த அழகுப்பிரதேசத்திற்கு மிக சுலபமாக, சிக்கனமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம். எங்கெங்கோ இருக்கும் அயல் தேசங்களுக்கு செல்ல முடியுமா என்று கனவு காண்பவர்கள் இந்த மலை எழில் பூமிக்கு ஒரு முறையாவது பயணம் செய்வது சிறந்தது. மிசோரம் மாநிலம் எல்லா இயற்கை அம்சங்களையும் தன்னுள் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அரிதான தாவர வகைகள், வித்தியாசமான உயிரினங்கள், பிரமிக்க வைக்கும் மூங்கில் காடுகள், சலசலவென்று விழும் அருவிகள், பசுமையான வயல்கள் என்று காணும் இடமெல்லாம் இயற்கையின் ரம்மிய காட்சிகளுடன் இம்மாநிலம் நம் நெஞ்சை அள்ளுகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள் நிரம்பிய இம்மாநிலத்தில் கலடான் எனும் பெரிய ஆறு பூமியை செழிப்பாக்கி ஓடுகிறது. இன்று நாம் செல்லவிருப்பது மிசோரம் காடுகளுக்குள்தான்... வாருங்கள், பயணத்தைத் தொடர்வோம்.....

 தெஞ்ஜாவ்ல்

தெஞ்ஜாவ்ல்

தெஞ்ஜாவ்ல்

வழமைக்கு மாறான, வித்தியாசமான சுற்றுலாவை விரும்புகிறவர்கள் தெஞ்ஜாவ்ல் செல்லலாம். பூக்கள் மற்றும் விலங்குகளுடன் இருக்கும் இவ்வூர் சிறியதாக இருந்தாலும் சில மதிமயக்கும் சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது. வன்டாவ்ங்க் நீர்வீழ்ச்சி என்ற மிஜோராமின் உயரமான நீர்வீழ்ச்சி, தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா, பாம்பிற்கும் ஒரு பெண்ணிற்கும் இடையேயான காதலுக்கு புகழ்பெற்ற சாவ்ங்ச்சி குகை, துவாலுங்கி த்லான் என்ற இடத்தில் தன் கணவனுக்கு அருகில் தன்னைத்தானே புதைத்துக் கொண்ட பெண்ணின் கல்லறை இருப்பதாக நம்புகிறார்கள்.

t.saldanha

 வன்டாங் நீர்வீழ்ச்சி

வன்டாங் நீர்வீழ்ச்சி


மிஜோராமின் மிக உயரமாக நீர்வீழ்ச்சியான வன்டாங், இந்தியாவில் 13வது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இரண்டு அடுக்குகளாய் விழுகும் இந்நீர்வீழ்ச்சி 229மீ உயரத்தில் இருந்து விழுகிறது. செர்சிப்பில் இருந்து 30கிமீ தொலைவிலும், அய்ஜாவ்லில் இருந்து 137கிமீ தொலைவிலும் உள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாய்த் தோன்றும் இந்நீர்வீழ்ச்சி வன்வா நதியில் அமைந்துள்ளது. வன்டாங் என்ற சிறந்த நீச்சல் வீரரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒருமுறை அவரது சாகசங்களில் போது ஒரு பெரிய மரக்கட்டை அவர் மீது விழுந்ததால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காட்சிக்கோணத்திற்காகவே சுற்றுலாத்துறை ஒரு கோபுரத்தை அமைத்துள்ளது.

Lpachuau

தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா

தெஞ்ஜாவ்ல் தேசிய மான்கள் பூங்கா

இங்கு ஏராளமான மான்கள் தென்படுவதுண்டு. மான்களை பாதுகாப்பதற்காக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது தெஞ்சாவ்ல் மான் பூங்காவில் உள்ள 17 மான்களில் 11 பெண் மான்களாகும். இயற்கையான சூழலில் வாழும் இம்மான்கள் கூண்டுக்குள் அடைக்கப்படாம எல்லைக்குள் அடைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இம்மான்களை மிக நெருக்கத்தில் பார்க்கலாம். கிராமத்திற்கு அருகிலேயே இப்பூங்கா இருப்பதால் நடந்தே இங்கு செல்லலாம். அய்ஜாவ்லில் தங்கியுள்ள பயணிகள் பேருந்து மூலமோ, வாடகைக் கார் மூலமோ இங்கு வரலாம்.

dipr.mizoram.gov.in

மிசோராமின் அட்சயப் பாத்திரம்

மிசோராமின் அட்சயப் பாத்திரம்


மிசோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும். பல வண்ண பூக்களும், வண்ணமும், வளங்களும் நிறைந்த இந்த இடத்தில் தேவதைக் கதைகளில் உள்ளதைப் போல பட்டாம்பூச்சிகளும் மிகுந்து காணப்படுகின்றன. மியான்மர் மலைகளின் நீலநிற தோற்றத்தை அழகுற எடுத்துக்காட்டும் சம்பை, தன்னகத்தே கொண்டுள்ள பழங்கால சின்னங்களாலும், தொல்பொருள் கற்களாலும் தன் பழமையையும், வரலாற்றுப் பெருமையையும் பறைசாற்றியபடி இருக்கிறது. மிஜோராமின் வேகமாக வளரும் ஊர்களில் ஒன்றான சம்பையின் வளர்ச்சிக்கு மியான்மரின் அருகாமையும் ஒரு காரணமாகும். இந்திய மியான்மர் வர்த்தகத்தில் சம்பை முக்கியப் பங்காற்றுகிறது.

Bogman

முரா

முரா


மனிதனை தின்னும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6 குகைகளை உருவாக்கியதாக கருதப்படுகிறது. முரா என்ற கொடூரமான கழுகு இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு வருமாம். பின் அவர்களை தன் கூரிய அலகுகளால் கொத்தித் தின்றும் விடுமாம். தினமும் இப்படி உயிர்பலிகள் ஏற்பட்டதால் இந்த கழுகிடமிருந்து தப்பிக்க கிராம மக்கள் இங்கு 6 குகைகளை ஏற்படுத்தினார்களாம். சம்பையில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்தை தனியார் வாகனங்கள் மூலம் அடையலாம்.

champhai.nic.in

தசியமோ செனோ நெயினா

தசியமோ செனோ நெயினா

தசியமோ செனோ நெயினா என்ற அழகிய இடம் வப்பய் கிராமத்தில்,சம்பையில் இருந்து 86கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தசியாமா என்பவரின் மலைப்பசு இந்த இடத்திலே கன்றுகளை ஈன்று அவரை பணக்காரராக்கும் என சாவ்ங்டின்லெரி என்ற தேவதை வரம் அளித்ததாம். ஆனால் பசுக்கள் ஏற முடியாதபடி இருக்கும் அந்த பீடத்தின் மேல் பசுவை பத்திரமாகக் கூட்டிச் சென்று கன்றையும் புலிகளிடம் இருந்து அந்த தேவதை பாதுகாத்ததாக நம்பப்படுகிறது. சம்பையில் இருந்து சுற்றுலா பேருந்துகள் மூலம் பயணிகள் இலக்கை அடையலாம்.
champhai.nic.in

லுங்க்லெய்

லுங்க்லெய்


மிசோரத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது லுங்க்லெய். இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது. லுங்க்லெய்யை சுற்றி பல கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், காம்சவி பூங்கா, சைகுடி ஹால் மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் ஆகிவைகள் அவற்றில் சில. மேலும் நதியோரமாக உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்காகவும் லுங்க்லெய் சுற்றுலா புகழ் பெற்று விளங்குகிறது.

Coolcolney

கான்க்லங் வனவிலங்கு சரணாலயம்

கான்க்லங் வனவிலங்கு சரணாலயம்

கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் பல வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. செரோ வகை ஆடுகள், முண்ட்ஜாக்ஸ் வகை மான்கள், காட்டு பன்றிகள், கிப்பன் வகை குரங்குகள், சாம்பா மான்கள், ஹூலாக் வகை குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை இங்கே காணலாம். இது போக இந்த சரணாலயத்தில் மதி மயக்கும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இங்கே சிறிது காலம் தங்க வேண்டுமானால் லுங்க்லெய்யில் உள்ள அல்ப்ஸ்டா ஹோட்டலில் தங்கலாம். இந்த சரணாலயத்தை அடைய ஐசவ்லிலிருந்து வாடகை வண்டியில் வந்தடையலாம்.

subharnab

 அய்சால்

அய்சால்

ஒரு கோட்டை நகரம் போன்று காட்சியளிக்கும் அய்சால் நகரம் ஏராளமான சுற்றுலா சுவாரசியங்களை பெற்றிருக்கிறது. இன்னும் அவ்வளவாக பிரபல்யமடையாத நகரம் என்றாலும்கூட இந்த நகரத்தை சுற்றி விசேஷமான கவர்ச்சி அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. இப்பகுதியில் ஓடும் டிலாங் ஆறு பார்க்க வேண்டிய அம்சங்களில் முதன்மையானதாக அமைந்துள்ளது. நகருக்கு மேற்கே பள்ளத்தாக்குகளின் வழியாக இந்த ஆறு ரம்மியமாக வழிந்து ஓடுகிறது. இது தவிர நகருக்கு கிழக்கே டுரியல் எனும் ஆறு மற்றும் அதனை ஒட்டிய பள்ளத்தாக்கு பகுதி போன்றவை பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கின்றன. மற்றொரு முக்கியமான கவர்ச்சி அம்சமாக அமைந்திருக்கும் ‘டம்டில்' ஏரியில் பயணிகள் படகுச்சவாரி பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.

Dr. Raju Kasambe

கடுகு ஏரி

கடுகு ஏரி

டம் டில் ஏரி அல்லது கடுகு ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரி மிசோரம் மாநில மீன் வளர்ச்சி துறையினால் மீன் வளர்ப்பிற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏரிக்கும் அருகிலேயே ஒரு சுற்றுலா ரிசார்ட் விடுதியும் மிசோரம் மாநில சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஏரிப்பகுதியில் விதமான மரங்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்களை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.அய்சால் நகரத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரிப்பகுதிக்கு சுற்றுலா வாகனங்கள் மூலம் பயணிகள் சென்றடையலாம்.

R london.

Read more about: travel, forest, india