Search
  • Follow NativePlanet
Share
» »அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் நடத்திக்காட்டும் அதிசய கோயில் போலாமா?

அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் நடத்திக்காட்டும் அதிசய கோயில் போலாமா?

அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் நடத்திக்காட்டும் அதிசய கோயில் போலாமா?

By Udhaya

பொதுவாகவே மன அமைதி தேடி சுற்றுலா செல்வோம். சிலர் ஆன்மீக வழியில் கோயிலுக்கு சென்று மனதை சாந்தப்படுத்துவர். எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்பதுபோல அவன்மேல் பழி போட்டுவிட்டு நடப்பவையெல்லாம் நன்மைக்கே என்று போகுறவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் அப்படியே நடத்திக்காட்டும் அதிசய கோயில் ஒன்று உஜ்ஜைனியில் அமைந்துள்ளது. வாருங்கள் சென்று வருவோம்.

கால பைரவர் கோவில்

கால பைரவர் கோவில்

பழமையான ஹிந்துக்களின் பாரம்பரியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள கால பைரவர் கோவில். இந்த கோவில் ஆன்மீக அறிவியல் சடங்குகளுடன் தொடர்பில் உள்ளது. கால பைரவர் என்பது சிவபெருமானின் கடுமையான ருத்ர தாண்டவத்தை குறிக்கும். புனிதமான இந்த கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தினசரி காணலாம்.

Utcursch

சாதுக்கள்

சாதுக்கள்


கோவில் வளாகத்தில் உடம்பு முழுவதும் சாம்பல் பூசிய சாதுக்களை பார்க்கலாம். கோவிலில் அழகிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இந்த சிவலிங்கம் நந்தி சிலைக்கு எதிரில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி பல புராணக் கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

Utcursch

 சிவராத்திரி

சிவராத்திரி

தன் அடிமனதில் இருந்து வேண்டுபவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய திருவிழா நடைபெறும்.

K.vishnupranay

நவகரஹ மந்திர்

நவகரஹ மந்திர்

நவகரஹ மந்திர் ஷிப்ரா நதிக்கரியில் அமைந்துள்ள ஒரு கோவில். உஜ்ஜைன்னில் இருக்கும் கோவில்களிலேயே இது ஒரு தனித்துவம் வாய்ந்த கோவிலாகும். இது நம் சூரியக் குடும்பத்தின் கிரகங்களுக்காக கட்டப்பட்ட கோவில். இந்த நகரத்திலயே இங்குள்ள திரிவேணி காட் தான் மிகவும் மங்களகரமான இடமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலில் எப்போதும் கூட்டம் அலைமோதும், முக்கியமாக அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில். உச்சி நகரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பல வகையான போக்குவரத்துகள் மூலம் வரலாம். இங்குள்ள கடவுளுக்கு தேங்காய், பூக்கள் மற்றும் குங்குமத்தை படைக்கின்றனர் பக்தர்கள்.

Saptarshi Chowdhury

பர்த்ரிஹரி குகைகள்

பர்த்ரிஹரி குகைகள்


மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது பர்த்ரிஹரி குகைகள். இந்த குகை பழமையான உஜ்ஜைன் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இது மனதை மயக்கும் இடம் என்று மத்தியப் பிரதேசத்தின் சுற்றுலா அமைச்சகம் கூறுகிறது. இந்த குகையில் நுழையும் போது ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதவையாக இருக்கும். இந்த குகையில் இருக்கும் பல சிற்பகங்கள் அழிந்த நிலையில் இருந்தாலும், இந்த இடத்தை இன்னும் காணாதவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் காத்திருக்கிறது. இந்த குகையில் பூமிக்கு அடியில் ஆழமாக செல்ல வேண்டும். உள்ளே மூச்சு விட கூட சிரமமாக இருக்கும்.

மகாகலேஷ்வர் கோயில்

மகாகலேஷ்வர் கோயில்

உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகலேஷ்வர் கோவில் ஒரு மங்களகரமான கோவிலாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது. இந்த கோவில் ஒரு ஏரியின் அருகில் பெரிய மதில்களால் சூழப்பட்டு முற்றத்துடன் மிடுக்குடன் காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் ஐந்து அடுக்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு அடுக்கு தரை மட்டத்துக்கு கீழ் உள்ளது. இங்குள்ள கடவுளை தட்சிணாமூர்த்தி என்று அழைப்பர். இந்தியாவிலுள்ள 12 ஜ்யோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஓம்கரேஷ்வர் சிவனுக்கு சிலை உள்ளது. மஹகல் சன்னதிக்கு மேல் தான் இந்த சிவனின் கருவறை அமையப்பெற்றுள்ளது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய பொருட்காட்சி நடைபெறும்.

Ssriram mt

சின்தமன் கணேஷ் கோவில்

சின்தமன் கணேஷ் கோவில்


உஜ்ஜைன்னில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் சின்தமன் கணேஷ் கோவில். விநாயகரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு இந்தக் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சின்தமன் என்ற பழமையான ஹிந்து சொல்லுக்கு 'மன அழுத்தத்தை நீக்குதல்' என்று பொருளாகும். இங்கு மன அழுத்தத்துடன் வரும் அனைத்து பக்தர்களுக்கும் விநாயகர் உடனடி நிவாரணம் தருவார் என்று மக்களால் நம்பப்படுகிறது. உஜ்ஜைன் இரயில் நிலையத்திலிருந்து இந்த கோவில் வெறும் 5 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் விநாயகர் ஒரு சுயம்பு வடிவம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். விநாயகரின் இருபக்கத்திலும் ரித்தி மற்றும் சித்தி வீற்றிருப்பதை பார்க்கலாம்.

Anshul_sharma

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X